பண ஆசை
கடைசி கால அடையாளத்தில் இதுவும் ஒன்று
"பண ஆசை"
2 தீமோத்தேயு 3:1-2
மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாக.
எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், "பணப்பிரியராயும்,"
தேவனுடைய பிள்ளைகள் கர்த்தர் மேல் பிரியமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் நம்மோடு கூட இருக்கிறார். நமது தேவைகள் யாவையும் அவர் சந்திக்கிறார்.
எனவே தான் தேவன் ஆவியானவர் மூலமாக இந்த வசனத்தை எழுதி வைத்துள்ளார்.
(எபிரெயருக்கு எழுதிய நிருபம் 13:5)
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
தேவனுடைய உதவியை விரும்பாதவர்கள் மாத்திரமே
பண விரும்பிகளாக இருக்கிறார்கள்.
இந்த பண ஆசை கர்த்தரை விட்டு நம்மை பிரித்து விடும் என்பது அனைவருக்கும் தெரியவில்லை. சிலர் தெரிந்து இருந்தும் அதை பற்றி கவலைப்படுவதில்லை.
(1 தீமோத்தேயு 6:10)
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேறாய் இருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் விசுவாசத்தை விட்டு வழுவி கீழே விழுந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
(1 தீமோத்தேயு 6:10-11)
நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
(1 தீமோத்தேயு 6:6)
போதுமென்ற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
ஒரு தேவ ஊழியன் தேவனுடைய விருப்பத்தை செய்து முடிக்க தான் தேவனுடைய அழைப்பைப் பெற்றிருக்கிறான்.
தன்னுடைய மனதின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல.
தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவன் தம்முடைய ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். கிருபைகள், வரங்கள், கனிகள், தந்திருக்கிறார். வேதத்தில் உள்ள ஒவ்வொரு பரிசுத்தவான்களையும் தேவன் பல நபர்களைக் கொண்டு அவர்களை போஷித்து பாதுகாத்து வந்திருக்கிறதை நன்றாக வாசிக்கிறவர்கள் அறிந்து கொள்வார்கள்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக பிரபல ஊழியர்களின் சாட்சிகள் கேட்பதற்கு நமக்கு விசுவாசத்தை தூண்டக் கூடியதாக இருந்தது. அவர்களுடைய ஜெப ஜீவியங்கள், பரிசுத்தமான வாழ்க்கை, மற்றவர்களை விசாரிப்பது, விசேஷித்த கூட்டங்களில் மக்களுக்காக பல மணி நேரம் நின்று கொண்டு ஜெபிப்பது, விசுவாசியை எப்படியாவது குணமாக்கி விட வேண்டும் அற்புதங்கள் நடக்க வேண்டும் என்று சொல்லி விடாமல் ஜெபித்துக் கொண்டிருப்பார்கள்.
இந்த 2025 பணத்தில் பெருகிய ஊழியர்கள், வியாதி உள்ளவர்கள் மேல் கைகளை வைத்து ஜெபிப்பதற்கும் பயம்.
இன்று நல்ல ஊழியர்களுக்கு அழைப்பு இல்லை.
கள்ள ஊழியர்களுக்கு தான் அழைப்பு இருக்கிறது. அவர்களிடம் கிருபை வரங்கள் இருக்கிறதோ இல்லையோ பணம் இருக்கிறது. பெயர் புகழ் இருக்கிறது. எனவே சில ஸ்தாபனங்கள் அவர்களைத் தான் விரும்புகின்றன.
பணம் இல்லாத நல்ல ஊழியர்களை சத்தியமாக பேசுகிற ஊழியர்களை அவர்கள் அழைப்பதில்லை. நல்ல ஊழியர்களுக்கு நாம் காணிக்கை கொடுக்க வேண்டும்.
ஆனால், கள்ள ஊழியர்கள் வந்தால் அவர்களே தம் செய்யப் போகிற ஊழியத்திற்கு பணத்தை வாரி வழங்கி பல நாட்கள் தொடர்ந்து ஊழியம் செய்வார்கள்.
இவர்கள் பணத்தை சம்பாதிப்பதற்கு சபை விசுவாசிகள் உடன் ஊழியர்கள் பார்வையாளராகவும், உதவியாளராகவும் தான் இருக்க வேண்டும்.
அந்த ஊழியத்தில் தேவ கிருபை வெளிப்படுகிறதா?
அந்த ஊழியத்தில் எத்தனை பேர் மனம் திரும்புகிறார்கள் ?
அந்த ஊழியத்தில் எத்தனை பேர் பக்தி விருத்தி அடைகிறார்கள்?
அந்த ஊழியத்தில் எத்தனை ஊழியர்கள் தேவனுடைய தரிசனத்தைப் பெறுகிறார்கள்?
அந்த ஊழியத்தில் எத்தனை பேர் தேவனுக்காக வாழ வேண்டும் என்று அந்த வைராக்கியத்தை பெற்றுக் கொள்கிறார்கள்?
எத்தனை நோயாளிகள் சுகத்தைப் பெற்றுக் கொண்டார்கள் ?
பணத்திற்காக ஊழியம் செய்கிறவர்களுடைய வாழ்க்கையில் இவைகள் ஒருநாளும் இருக்காது!!!
1) வேத வாசிப்பு
2) ஜெபம்
3) கிராம சுவிசேஷ ஊழியங்கள்
4) தேவ திட்டங்கள். தரிசனம்
5) தேவனுடைய ஊழியத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தல்
6) தேவனுடைய கட்டளையை நிறைவேற்றுவேன் அந்த தீர்மானம்.
7) சீஷர்களை உருவாக்கும் பணி அல்லது ஆத்மா ஆதாயம் செய்யும் பணிகள்
இவருடைய பிரதான நோக்கம்.
1) பல கோடிகளுக்கு சொத்துக்களை குவித்து விடுவார்கள்.
2) அநேக ஊழியர்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களை வெளிநாடுகளில் படிக்கவும் குடியிருக்கவும் பண்ணுவது.
3) தன்னுடைய சில தவறை ஒத்துக் கொள்வது போல் ஒத்துக் கொண்டு தன்னை நல்லவனாகக் காட்டுவது.
4) காணிக்கை பணத்தில் ஆடம்பரமாக வாழ்வது.அதாவது, காணிக்கை பணத்தில் ஊழியம் செய்ய மாட்டார்கள்.
5) காணிக்கை நாங்கள் கேட்க மாட்டோம் என்றே ஆரம்பித்து காணிக்கை பெற்று விடுவார்கள்.
6) கர்த்தர் சொன்னார் என்றே தனது பிரசங்கத்தை ஆரம்பிப்பார்கள்.
7) கர்த்தர் தரிசனம் கொடுத்தார் என்றே சொல்லுவார்கள்.
இவர்கள் ஒரு நாளும் தன் தவறை உணராதவர்கள் மரித்துப்போன சடலங்கள். இப்படிப்பட்ட ஊழியர்களை திருத்துவது நமது வேலை அல்ல இவர்கள் திருந்தாத ஜென்மங்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள் அதனால் உங்களுக்கு எச்சரிக்கை உண்டாகும் படியாக இந்த உயர்ந்த முத்துக்கள் மூலமாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
உண்மை தேவ ஊழியர்களே சத்தியத்திற்காக நில்லுங்கள் சத்தியத்திற்காக வாழுங்கள் சத்தியத்திற்காக போராடுங்கள் சத்தியத்திற்காக தங்கள் கடைசி காலம் வாழ்க கொடுங்கள் இயேசு சீக்கிரம் வரப் போகிறார்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
Comments