வார்த்தை
வார்த்தை
(யோவா 1:1)
யோவான் இயேசு கிறிஸ்துவை "வார்த்தை"
(கிரே. லோகோஸ்) என்று அழைத்து தன் சுவிசேஷத்தை ஆரம்பிக்கிறான்.
கிறிஸ்துவுக்குப் பதிலாக இந்த பதவியின் பெயரை யோவான் உபயோகப்படுத்துகிறதினால், அவரை தேவனுடைய சொந்த வார்த்தையாக அறிமுகப்படுத்துகிறான். இந்த கடைசி நாட்களில் தேவன், தம் குமாரன் மூலம் நம்மிடம் பேசியிருக்கிறார்.
(எபி 1:2-3) என்று குறிப்பிடுகிறான். இயேசு கிறிஸ்துவே தேவனுடைய அந்த ஞானமாயிருக்கிறார்,
(1கொரி 1:30;எபே 3:10-11;கொலோ 2:2-3) என்றும், தேவனுடைய இயற்கை குணம், தேவத்துவத்தை பரிபூரணமாக வெளிப்படுத்துகிறார்,
(யோவா 1:3-5; 14,18;கொலோ 2:9) என்றும்
வேதவாக்கியங்கள் அறிவிக்கின்றன.
ஒரு மனிதனின் வார்த்தைகள் எப்படி அவன் இருதயத்தையும், மனதையும் வெளிப்படுத்துகின்றனவோ அதேபோல் "வார்த்தை" யாகிய கிறிஸ்து, தேவனுடைய இருதயத்தையும், மனதையும், வெளிப்படுத்துகிறார்.
(யோவா 14:9)
யோவான் நமக்கு "வார்த்தை" யாகிய இயேசு கிறிஸ்துவின் மூன்று முக்கிய குணாதிசயங்களைக் கொடுக்கிறான்.
1) பிதாவோடு, வார்த்தைக்குள்ள தொடர்பு.
அ) உலகம் சிருஷ்டிக்கப்படு முன்பே, கிறிஸ்து "தேவனோடு"இருந்தார்,
(கொலோ1:15)
அவர் நித்திய காலமாக, பிதாவாகிய தேவனோடு நித்திய ஐக்கியம் கொண்டவராக, ஆனால் வேறுபட்டவராக உள்ளார்,
ஆ) கிறிஸ்து தெய்வீகமானவராக ("வார்த்தை தேவனாயிருந்தது") பிதாவைப் போல் அதே சுபாவம், பரிபூரணம் உடையவராக இருந்தார்,
(கொலோ 2:9;மாற் 1:11)
2) உலகத்தோடு வார்த்தைக்குள்ள தொடர்பு.
கிறிஸ்துவைக் கொண்டு பிதாவாகிய தேவன் உலகத்தை சிருஷ்டித்து இப்போது அதை நிலை நிற்க பண்ணியுள்ளார்.
(யோவா 1:3; கொலோ1:16;எபி 1:2).
3) மனிதரோடு வார்த்தைக்குள்ள தொடர்பு.
"அந்த வார்த்தை மாம்சமாகி"
(யோவா 1:14). கிறிஸ்துவில், தேவன் மனிதருக்குள்ள அதே சுபாவத்தோடு, ஆனால் பாவமற்ற மனிதராக மாறினார், இதுவே மனிதாவதாரத்தின் அடிப்படை தத்துவமாகும், கிறிஸ்து பரலோகத்தை விட்டு வந்து, மனித பிறப்பெனும் வாசல் வழியாக மனித வாழ்க்கைக்குறிய நிபந்தனைக்குள் உட்பிரவேசித்தார்.
(மத்தேயு 1:23)
*ஆதியில் தேவனோடு இருந்தார்*
(யோவா 1:2)
இயேசு கிறிஸ்து உண்டாக்கப்படவில்லை, அவர் நித்திய காலமாக இருக்கிறார். எப்பொழுதும் பிதாவோடும், பரிசுத்த ஆவியோடும் அன்புள்ள ஐக்கியம் கொண்டவராக இருக்கிறார். (மாற் 1:11)
தொடர்ந்து வேதத்தில் நிலைத்திருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments