கீழ்படிதல்.
கீழ்படிதல்.
தேவனுடைய பிள்ளைகளுக்கு மிகவும் அவசியமானது கீழ்ப்படிதல்.
செவிக்கொடுத்தல் அல்லது கீழ்படிதல் இரண்டுமே ஒரே பொருளுடையதே.
தேவன் கீழ்படிதலை எதிர்பார்க்கிறார். முதல் மனிதன் ஆதாம் ஏவாளிடம் எதிர்பார்த்தார்.
ஆனால் அவர்கள் தேவனுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்து கொண்டார்கள். ஆகையால் அவர்களுடைய வாழ்க்கையில் பாவம், மரணம் பிரவேசித்தது.
(ரோம 5:12)
பின்னர் கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள்.
(ஆதி 4:26)ஏனோஸின்
ஊக்குப்பினால் மக்கள் பொது இடங்களில் தேவனைத் தொழுது கொள்ளவும் ஆராதிக்கவும் ஆரம்பித்தார்கள்.
(2 சாமு 6:2; 1நாளா 13:6;சங் 79:6;எரோ 10:25; இங்கெல்லாம் 'கர்த்தரை தொழுது கொள்ளுதல்' என்பது பொது வழிபாட்டைக் குறித்தது) அதன் மூலம் தேவனையே அண்டிக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தினார்கள். இவ்விதமாக இரண்டு அடிப்படை வேறுபாடுகள் உள்ள குடும்பங்கள் உலகத்தில் வளர்ச்சியடையத் தொடங்கின.
1) தேவனை சார்ந்திருப்பவர்கள்.
2) தேவனற்றவர்கள்.
அதாவது தேவகுமாரர்கள். மனுஷகுமாரர்கள்.
தேவகுமாரர்கள் என்பது தேசத்தின் தேவபக்தியுள்ள சந்ததியாரை குறிக்கலாம்.
(உபா 14:1;32:5;சங் 73:15;ஒசி 1:10)
இரண்டாவது கட்டமாக கீழ்ப்படியாமை.
தேவகுமாரர் "மனுஷகுமாரத்தி" களை விவாகம் பண்ணினார்கள். அதாவது தேவனற்ற காயீனின் சந்ததியாரின் குமாரத்திகள்(ஆதி 4:16)
தேவபக்தியுள்ளவர்கள் அக்கிரமக்காரர்களைத் திருமணம் செய்து கொண்டதால், "பொல்லாப்பு" உருவானது. இதன் பலனாக இந்த உலகம் அநீதியும், வன்முறையும், அக்கிரமமும் நிறைந்ததாயிற்று.
(ஆதி 6:11-13;)
பாருங்கள் மனிதர்களுடைய கீழ்ப்படியாமையாளே தேவன் மனிதனை பூமியிலே உண்டாக்கினதற்காக மனஸ்தாபட்டார்.
அவர்களை நிக்கிரகம் பண்ணுவேன் என்றும் கூறிவிட்டார்.(ஆதி 6:6,7).
நீங்கள் ஒருவேளை இப்படி கேட்கலாம். அவர்களுக்கு கீழ்படியக்கூடிய கட்டளைகள், பிரமாணங்கள், நியமங்கள் ,கொடுக்கப்படவில்லையே பிறகு எப்படி அவர்கள் கீழ்படிவார்கள் ?
ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே வந்த பிறகு 930 வருஷம் வாழ்ந்ததாக வாசிக்கிறோம். (ஆதி 5:5)
இந்த ஆதாம் தேவனோடு வாழ்ந்ததையும், அவரோடு நேரத்தை செலவிட்டதையும், அவர் கொடுத்த கட்டளையை மீறினதையும் , அதனால் ஏற்பட்ட சாபத்தையும், மரணத்தையும் அவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு போதித்திருக்க வேண்டும். அதைக் கேட்டு உணர்ந்தவர்கள் கர்த்தரை ஆராதித்தார்கள். ஏனோக் தேவனோடு கூட சஞ்சரித்தான். பின்பு மரணத்தை காணாதபடிக்கு தேவன் அவனை எடுத்துக் கொண்டார். இதையெல்லாம் கவனித்த அன்றைய மக்கள் கடவுளுக்கு பயப்பட்டு வாழ வேண்டும் என்ற உள்ளுணர்வு கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். அதைத்தான் தேவன் எதிர்பார்த்து இருந்தார்.
ஆனால் அவர்களுடைய கீழ்படியாமையால் தேவன் பூமியை அழிக்க சித்தம் கொண்டார்.
நிறைவேற்றுவதற்கு முன்பு நோவா என்கிற மனிதனுக்கு அவருடைய கண்களில் தயவு கிடைத்தது.
தேவன் அவர்களை காப்பாற்ற ஒரு பேழை (அல்லது கப்பல்)செய்வதற்கு கட்டளை கொடுத்தார். அதற்கு உண்டான அளவுகளை கொடுத்தார். (ஆதி 6:14)
(இந்தக் கப்பலில் 7000 வகையான மிருகங்கள் மிருக ஜீவன்கள் அடைக்கப் படலாம்.
300,மிகப்பெரிய லாரி போன்ற ட்ரெய்லர்களின் சமம்
என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.)
நோவா கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தனக்கு கட்டளையிட்டபடியெல்லாம்; அவன் செய்து முடித்தான்.
(ஆதி 6:22)
கீழ்படிந்த நோவா, நோவாவின் மனைவி பிள்ளைகள் மற்றும் 7000க்கும் மேற்பட்ட மிருக ஜீவன்கள், பறவைகள்,பேழைக்குள் பிரவேசித்தார்கள்.
பேழைக்குள் வராத யாவும் மாண்டு போயின.
பேழையிலிருந்த உயிர்கள் மாத்திரமே காக்கப்பட்டன.
(ஆதி 7:23)
அன்று நோவாவின் பேழை இருந்தது. நோவாவின் மூலமாக சொன்ன நீதியின் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிக் கொடுக்கவில்லை ஆகையால் ஜலத்தினால் அழிக்கப்பட்டார்கள்.
இன்றைக்கும் நமக்காக பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பேழையை நமக்காக உண்டு பண்ணி வைத்திருக்கிறார்.
குமாரன் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலமாக நாம் இந்த பேழைக்குள் பிரவேசிக்க முடியும்.
நோவா தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தபடியால் 150 நாட்களாக தேவனிடமிருந்து எதையும் கேட்கவில்லை. கர்த்தர் அவனுடைய தேவைகளை சந்தித்திருந்தார்.
ஜலம் வற்றி போயிற்று
தேவன் நோவாவை நோக்கி
நீயும், உன்னோடு கூட உன் மனைவியும்,
உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டு புறப்படுங்கள் என்றார்.
(ஆதி 8:13,15-16,18)
கர்த்தருடைய வார்த்தையை கேட்பதற்கு தீவிரமாய் இருக்க வேண்டும் என்று யாக்கோபு எழுதுகிறார்.
ஆவியானவர் சொல்லுகிறதை காது உள்ளவன் கேட்கக் கடவன் என்று சொல்லுகிறார்.
தேவன் சொல்லும் வார்த்தையை நோவா சரியாக கேட்கவில்லையோ, அல்லது கேட்க தவறிவிட்டானோ என்று என்ன தோணுகிறது.
ஆண்டவர் சொன்னது ஒன்று
ஆனால் நோவா செய்தது ஒன்று.
16வது வசனத்தையும் 18 வது வசனத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது உங்களுக்கு வித்தியாசம் தெரியும்.
பாவம் என்பது கீழ்ப்படியாமையாலே பிறக்கிறது, பாவத்தின் மூலமாகவே மரணமும் உருவாகிறது. என்று ஆதாம் மூலமாக நாம் கற்றுக் கொண்டோம்.
இங்கே அதே தவறு நடப்பது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா?
நம்முடைய சின்ன விஷயத்திலும் நாம் கீழ்படிய கற்றுக்கொள்ள வேண்டும்.
சிலர் சொல்வார்கள் என்ன பிரதர் இதெல்லாம் பெருசா சொல்றீங்க....
தேவன் எதிர்பார்க்கிறார். நம்முடைய வார்த்தைகளை கவனித்து கேட்க வேண்டும், அதற்கு கீழ்படிய வேண்டும். கர்த்தர் என்ன சொல்லுகிறாரோ அதன்படியே செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.
தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள்.
இதனுடைய தொடர்ச்சியை பின்வரும் நாட்களில் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments