கள்ள தீர்க்கதரிசிகள்
பல கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள்.
(மத் 24:11)
கடைசி நாட்கள் நெருங்கி வரும் போது, கள்ளத் தீர்க்கதரிசிகளும், போதகர்களும் உலக மக்கள் மத்தியில் அதிகமாக தோன்றிக் கிரியை செய்து கொண்டிருப்பார்கள்.
இக்காலத்தில் கிறிஸ்துவ சமுதாயம் முழுவதும் உலகமெங்கும் விசுவாசம் குறைந்த நிலையிலேயே காணப்பட்டது. (லூக்18:8) தேவனுடைய வார்த்தைக்கும், பரிசுத்த வேதாகமம் கூறும் நீதிக்கும் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்.
1) உறுதியான விசுவாசிகள் கூட வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையுடன் முரண்படுவதாயிருந்தாலும் கூட, அவர்களுக்குக் கூறப்படும் புதிய போதனைகள் ஏற்றுக் கொள்வார்கள். இந்த நிலை திருச்சபைகளில் பிரிவினைகளை ஏற்படுத்தும்.
(1 தீமோ 4:1 ;2 தீமோ 3:8;4:3)
இவ்வாறு புரட்டு உபதேசங்களை போதிப்பவர்கள் கூட சபை பிரிவுகளில் உயர்ந்த பதவிகளைப் பிடித்துக் கொள்வார்கள். வேதாகம கல்லூரிகளிலும் இடம் பிடித்துக் கொள்வார்கள்.
(மத் 7:22) இவர்களுடைய கிரியைகளினாலும் போதனைகளாலும், திருச்சபையிலுள்ள பலரை வஞ்சித்து தவறான வழியில் திருப்பி விட்டு விடுவார்கள்.
(கலா 1:9;2 தீமோ 4:3;2பேது3:3,4)
2) உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் மந்திரம், மாயாஜாலம், குறி சொல்லுதல், வான சாஸ்திரம், மாந்திரீகம், பில்லி சூனியம், சாத்தானின் கொள்கைகள், ஆகியவற்றை செய்வதில் ஈடுபட்டிருப்பார்கள். அசுத்த ஆவிகள், பிசாசு ஆகியவை பன் மடங்காக எங்கும் பெருகிவிடும்.
3) இத்தகைய தீய சக்திகளை எதிர்த்து, நம்மைக் காத்துக்கொள்ள கிறிஸ்துவின் மேல் அளவற்ற அன்பு, நிலையான, உறுதியான விசுவாசம், ஆகியவற்றுடன் அவருடைய வார்த்தையின் சர்வ அதிகாரத்துக்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணித்தல்
(மத் 24:4,11,13,25,) அவருடைய வார்த்தையைப் பற்றிய தெளிவான அறிவு
(1தீமோ 4:16) ஆகியவை மூலம் வஞ்சகங்ளிலிருந்து காக்கப்படலாம்.
இன்றைய பொய் உபதேசங்கள்.
வாருங்கள் ஜெபிப்போம் (சுவிசேஷத்தை அறிவிக்காமலே) ஜெபத்தினால் தேசத்தை மூடும் கள்ள ஜெப ஊழியங்கள்.
எழுப்புதல் ஊழியங்கள்
எங்கு பார்த்தாலும் எழுப்புதலை குறித்து பேசி வருகிறார்கள். எழுப்புதல் வருமா ?
சிந்திக்கவும்.
நோவா காலத்தில் நடந்தது போல நடக்கும்.
அநேகருடைய அன்பு தணிந்து போகும்.
தேவகுமாரன் இயேசு கிறிஸ்து பூமிக்கு வரும் பொழுது விசுவாசம் காண்பாரோ ?
ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பார்கள்.
எழுப்புதல் குறித்து பேசும் மிகப் பிரபல ஊழியர் ஒருவர் அவருக்கு விரோதமாக பேசிய ஒருவர்
மன்னிக்கக் கூடிய இருதயம் இல்லாமல் அவர் மேல் வழக்கு பதிவு செய்து பல நாட்கள் அவரை அடித்து சில காரியங்களை பேசக்கூடாது என்றும் மிரட்டினார் சமூக வலைதளங்களில் அவரைக் குறித்து நல்ல செய்திகளை பேசவும் கட்டளையிட்ட காரியங்களை அறிந்தும் அறியாமல் இருப்போம்.
பேசுவது வேதம்
கிரியைகள் சாத்தானிசம்
எழுப்புதல் வருமா ? அல்லது அன்பு குறையுமா !!!
இதுதான் இன்றைய ஊழியம்.
கிறிஸ்துவின் பணியில்
சகோ,சிலுவை ராஜா
Comments