கடைசிக் காலத்தில் பெருகும் அக்கிரமங்கள்.
கடைசிக் காலத்தில் பெருகும் அக்கிரமங்கள். (மத் 24:12)
கடைசிக் காலத்தில் முக்கிய அடையாளங்களில் ஒன்று
எங்கும் ஒழுக்கக்கேடான
பாலுறவு, விபசாரம், வேசித்தனம், வெட்கமற்ற தன்மை, தேவனுக்கு எதிராகக் கலகம், ஒழுக்க நெறிக் கட்டுப்பாடுகளைக் கட்டவிழ்த்து விடுதல், ஆகியவை நடைபெறுவதைக் கண்டால் கடைசி காலம் என்று அறிந்து கொள்ளலாம்.
பாலுறவில் சீர்கேடு, ஒழுக்கக்கேடு, விபசாரம், வேசித்தனம், ஆபாசச் செயல்கள், போதை மருந்துகள், தேவனுக்கேற்காத இசை, இச்சையைத் தூண்டும் கேளிக்கை நிகழ்ச்சிகள், ஆகியவை எங்கும் நிறைந்திருக்கும்.
உலகின் இந்த சீர்கெட்ட நிலை நோவாவின் காலத்தில் இருந்த நிலையை ஒத்திருக்கும்.(மத் 24:37)
மனிதனின் இருதயத்தின் சிந்தனைகள் அனைத்தும் தொடர்ந்து பொல்லாதவைகளாகவே இருந்தன.(ஆதி 6:5)
மேலும் பொல்லாப்பினால் நிறைந்திருந்த லோத்துவின் கால உலக நிலையையும் இந்தக் கடைசி கால சீர்கெட்ட நிலை ஒத்திருக்கும்.
(லூக்கா 17:28,30)
ஆண்கள் ஆண்களுடன் உறவு கொள்ளுதல், பெண்கள் பெண்களுடன் உறவு கொள்ளுதல், பெற்றோர் பிள்ளைகளுடன் பாலியல் உறவு கொள்ளுதல் போன்ற பாலியல் விபரீதங்கள் சமுதாய முழுவதும் பரவியிருந்தன.
(ஆதி 19:5; 1தீமோ 4:1; 2தீமோ 3:1-8)
உண்மையான அன்பைக் காண்பது அரிது என்று இயேசு குறிப்பிடுகிறார்.
தேவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்கிறவர்கள் தான் இந்தக் கொடுமையை கண்டு மனம் வருந்துவார்கள்.
கீழ்ப்படியாதவர்களுக்கு இதெல்லாம் சகஜம் என்பார்கள்.
ஆகையால் தேவனுடைய பிள்ளைகள் எப்பொழுதும் கவனமாக இருங்கள். தேவனுடன் உள்ள நல்லுறவை காத்துக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments