அந்நிய பண்டிகை
அந்நிய பண்டிகை, கள்.
கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.
(எசேக்கியேல் 8:16)
இந்த சூரியனை நமஸ்கரித்து கொண்டாடப்படுவது தான் பொங்கல்.
கூகுளில் பொங்கல் பண்டிகை என்று நாம் தேடும்போது சூரியனுக்கு படைக்கப்படுகிற பண்டிகை என்றே சொல்லப்படுகிறது.
சூரிய பண்டிகை - பொங்கல்
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாக்களில் மிக முக்கியமானது பொங்கல். தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் இந்த திருவிழா, சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படுகிறது. விவசாயிகளின் உழைப்பிற்கு அடையாளமாகவும், புது வருடத்தின் துவக்கமாகவும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழாவின் முக்கிய நாட்கள்
போகி: பொங்கல் விழாவின் முதல் நாள். பழைய பொருட்களை எரித்து புதிய ஆண்டை வரவேற்கும் நாள்.
தைப்பொங்கல்: சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாள். புதிய அரிசி, பால், வெல்லம் கொண்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
மாட்டுப்பொங்கல்:
கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் படி கொண்டாடப்படுகிறது
பொங்கல் விழாவின் சிறப்புகள்
கோலம்: வீட்டு வாசலில் கோலம் போடுவது பொங்கல் விழாவின் முக்கிய அம்சம்.
பொங்கல் பானை: மண் பானையில் பொங்கல் வைப்பது பாரம்பரிய முறை.
சூரியன் வழிபாடு: சூரிய பகவானுக்கு நேரடியாகப் பொங்கல் படைப்பதாகும்.
முதன்முதலாக ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஆலய வாசலில் எதிரே பானை வைத்து பொங்கல் கொண்டாடினார்கள்.
அதன் பின்பு மற்ற திருச்சபைகளுக்குள் நுழைந்தது.
அதன் பின்பு தன்னை ஆவிக்குரியவர்கள் என்று சொல்லுகிற பிரபல ஊழியர்களால் கொண்டாடப்பட்டது.
கொண்டாடும்போதெல்லாம் வசனத்துக்கு விரோதமான கருத்துக்களை பேசி வந்தார்கள்.
விளக்கம் கேட்கும் போது தமிழர் பண்டிகை என்கிறார்கள்.
கிறிஸ்தவ தமிழர்கள் பொங்கல் கொண்டாடினால், மலையாள கிறிஸ்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடலாமா ? அப்படியே ஒவ்வொரு பாஷைக்காரரும் அவரவர் இனப் பண்டிகையை சபையில் கொண்டாடலாமா ? தேவனுக்கு ஆராதனை செலுத்துகிற இடமா ? அல்லது யாருக்கு என்பது நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
ஆனால் உலகமே சொல்கிறது இது சூரிய பகவானுக்கு கொண்டாடப்படுகிற ஒரு பண்டிகை தான் பொங்கல், ஆனால் பிரபல ஊழியர், ஊழியர்கள், அதை ஏற்றுக்கொள்ள கூடிய பக்குவம் அவர்களுக்கு இல்லை.
மாறாக இது வேதத்தில் உள்ள போஜன பண்டிகை. அல்லது பாண பண்டிகை என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.
புதிய உடன்படிக்கையின் புத்தகத்தில் பவுல் அப்போஸ்தலன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் தெளிவுப்படுத்தி வைத்திருக்கிறார்.
(கொலோசெயர் 2:16-17)
ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
மறுபடி நான் உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன்.
பழைய ஏற்பாட்டு எந்த பண்டிகையிலும் honey 🍯 சேர்க்கக்கூடாது என்பது கட்டளை. அதாவது இனிப்பு சேர்க்கக்கூடாது. என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
அப்படியானால் நீங்கள் சொல்லுகிற பழைய ஏற்பாட்டு பண்டிகையாய் இருந்தால் இனிப்பு ஏன் சேர்க்கிறீர்கள்?
(லேவியராகமம் 2:11)
நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும்
தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.
தேன் என்ற வார்த்தையே மற்ற மொழிபெயர்ப்பு பைபிள்களில் honey, sweet, என்று வருகிறது sweet என்ற வார்த்தை இனிப்பு என்று பொருள்.
திருச்சபையில் கொண்டாடப்படும் பொங்கலில் இனிப்பு சேர்க்கப்படுவது வேதத்திற்கு புறம்பான செயலாகும்.
உங்களுக்கு பிடித்திருந்தால் வீட்டில் போய் செய்து சாப்பிடுங்கள். ஏன் அண்ணிய பண்டிகையை தேவனுடைய சன்னிதானத்தில் செய்து தேவனை கோபம் மூட்டுவது மாத்திரமல்ல ஒட்டுமொத்த கிறிஸ்தவ ஜனங்களையும் பாவத்துக்கு தள்ளுகிறீர்களே!
உங்களுக்கு ஐயோ.
இயேசு கிறிஸ்து சொன்ன அந்த வார்த்தை நான் நினைவுபடுத்துகிறேன்.
(மத்தேயு 23:15ல்)
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்;அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
பரலோகத்தில் சேர்க்கப்பட வேண்டிய மக்களை இரட்டிப்பான நரகத்தின் பிள்ளைகளாக மாற்றுகிறீர்களே இது சரியான ஊழியமா ?
உங்களுக்கு ஐயோ
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு ஐயோ
புற இனத்தார் வழிபாடுகளை
பண்டிகைகளை சபையில் கொண்டு வருகிற ஒவ்வொரு ஊழியனுக்கும் ஐயோ.
உண்மையாக தேவனுக்கு பயந்து ஊழியம் செய்கிற ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments