உண்மையான தரிசனம்


உண்மையான தரிசனமும், ஜெப பாரமும் ஒருவனுக்கு இருந்தால் அவனுடைய செயல் தேவனுடைய இருதயமாகிய பரிசுத்த வேதாகமத்தை புரிந்து கொண்டு செயல்படுவது தான்....


1) உலகம், தேசங்கள், மாநிலங்கள், பட்டணங்கள், கிராமங்கள், அழிக்கப்படாமல் காக்கப்பட வேண்டுமானால் நீதிமான்கள் பெருக வேண்டும்.

( ஆதி 18:24-30;)

நீதிமான்கள் பெருக வேண்டுமானால் 

(மத் 28:19,20;கலா 3:8) சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும். அறிவிக்க வேண்டுமானால் புறப்பட்டு போக வேண்டும். தேவக் கட்டளையை நிறைவேற்ற வேண்டும்.


2) தேசத்தின் பாரம் அல்லது 800 கோடி மக்களின் பாரம் உங்களுக்குள் இருந்தால், 

திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளம்படி ஜெபிக்க வேண்டும். 

திரு வசனத்தை தைரியமாய் சொல்லுவதற்கு தேவ கிருபையும் தயவும் நமக்கு தேவை அதனால் ஊக்கமாக இதற்காக ஜெபிக்க வேண்டும்.

(கொலே 4:4; எபே 6:19,20; ஏப் 4:31; யூதா 1:3 இல் தைரியமாய் போராட) வேண்டும்.


3) தேசத்தின் மேல் இன்று அதிகம் பாரம் உள்ளவர்கள். பிதாவின் சித்தத்தை செய்யக்கூடிய ஊழியர்களை எழுப்பி தரும்படியாக பாதத்தில் விழுந்து மன்றாட வேண்டும்.

(மத்தேயு 9:37,38;)

உயிருக்கு பயந்தவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. (பாதுகாப்பான இடத்தில் மறைந்திருப்பார்கள்.)

மத்தேயு 10:28,27; இல் சரீரத்தை மட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்;

ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லமையுள்ள தேவனுக்கே பயப்படுங்கள்.

(மத்தேயு 10:39)

அதனால் .... தேவன் சொல்லுகிறதை காதிலே கேட்டு நீங்கள் வீடுகளின் மேல் பிரசித்தம் பண்ணுங்கள்.

முடியாவிடில் செயல்படக்கூடிய வேலையாட்களை அனுப்பும்படி பிதாவை வேண்டிக் கொள்ளுங்கள்.


*(கோழையான சுவிசேஷகன் ஒரு கூட்ட மக்களை புறப்பட்டு போக விடாமல் முடமாக்கி ஜெபம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு இயேசு கிறிஸ்துவுக்கு கட்டளை போடுகிறான். ஆண்டவரே அவனை சந்தியும் அவனை இரட்சியமென்று இயேசு கிறிஸ்துவுக்கு கட்டளை போடுகிறான். 

அவர் நமக்கு கொடுத்த கட்டளையை மறந்து விட்டான் புறப்பட்டு போங்கள் சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்ற கட்டளையை மறந்து போனான்.

இதை வாசிக்கிற நீங்கள் மறந்து போகாதீர்கள்.)*


4) உண்மையாகவே தேச மக்கள் மீது உங்களுக்கு பாரம் இருக்கிறது 

இந்த உலகத்தின் அதிகாரியாகிய பிசாசானவனையும், அவனுடைய சேனைகளையும் ஜெயிக்க கூடிய ஒரு பலவானாய் நீங்கள் இருக்க வேண்டும்.

(மத் 12:29;)

தற்போது இஸ்ரேல் மக்களை காசா (அ) பாலஸ்தீனர் சிறை பிடித்துக் கொண்டு போன போது இஸ்ரேல் எப்படி தன் படைபலத்தை பயன்படுத்தி தன் ஜனத்தை மீட்டுக் கொண்டது போல 

ஒரு தேவ ஊழியன் அல்லது சுவிசேஷகன் பிசாசின் பிடியில் அகப்பட்ட யாவரையும் மீட்டுக் கொள்ளக்கூடிய பலசாலியாக, பரிசுத்த ஆவி நிறைந்தவனாய், தேவனுடைய கிருபையை சார்ந்து இருக்க வேண்டும். 

(அப் 1:8; 10:38)

தேவனுடைய ராணுவ வீரனாக அவன் செயல்பட வேண்டும்.

(2தீமோத் 2:3)


5) தேசத்தை சாத்தானின் பிடியிலிருந்து காப்பாற்ற நினைப்பவர்கள். 

சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்.

சபையில் சாட்சியாக....

கிறிஸ்தவர்கள் மத்தியில்.

வசனத்தை கடை பிடிக்காதவர்கள் மத்தியிலும். 

உலகம் முழுவதிலும். கிறிஸ்துவுக்கு சாட்சியாக,

(அப் 1:8)

 நீ கிறிஸ்துவை பிரதிபலிக்காமல் இன்னொருவரை கிறிஸ்துவுக்குள் பிரதிபலிக்க முடியாது.

தேவன் உங்களுக்கு தந்த பொறுப்பை அல்லது பாரத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு பிரயாசப்படுங்கள். 

அதற்கு உண்டான கூலியை தேவன் தருவார். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

Bro, சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை