இராஜ்யத்தின் நற்செய்தி....

 இராஜ்யத்தின் நற்செய்தி....
முடிவு.
(மத் 24:14)


இராஜ்யத்தின் நற்செய்தி உலகெங்கும் போதுமான அளவு பிரசிங்கிக்கப்பட்டு முடிந்த பின்னரே முடிவு வரும். 


1) இராஜ்யத்தின் சுவிசேஷம் 

(நற்செய்தி) என்பது அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், நீதியோடும், அற்புத அடையாளங்களோடு பிரசங்கித்ததைக் குறிக்கிறது.


2) இந்த வேலை தேவனுடைய நோக்கத்தின் படி எப்போது நிறைவடையும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். விசுவாசிகளின் வேலை, தொடர்ந்து, உண்மையுடன் எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியை அறிவித்து கொண்டிருத்தலாகும். 

நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து தமது பரிசுத்த திருச்சபையைப் பரலோகத்துக்கு எடுத்துச் செல்ல திரும்ப வரும் வரை,

நமது சுவிசேஷ பணி தொடர வேண்டும். 

(மத் 28:19,20; யோவா 14:3;

1தெச 4:13).


3) விளக்கம் கூறுகிற பலர், 

'முடிவு' என்பது 'மரித்தவர்கள் கிறிஸ்துவுக்குள் உயிர்த்தெழும் காலம்' என்றும் கிறிஸ்துவின் சபை மேகங்கள் மேல் அவரோடு கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படும் காலம் என்றும் நம்புகின்றனர். 

( 1தெச 4:16,17;)

மத்தேயு 24: 37 முதல் 44 வரை உள்ள வசனங்களில் உண்மையுள்ள திருச்சபைக்கு எதிர்பாராத வருகை எப்படி இருக்கும் என்பதை வாசியுங்கள். 

அடுத்த பதிவில் தெளிவாக பார்ப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென். 

கிறிஸ்துவின் 

பணியில் 

 சகோதரன் 

சிலுவை ராஜா 

 தொடர்புக்கு 

 98 41 711 591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை