சமாதானத்தை அனுப்புவார்.
சமாதானத்தை அனுப்புவார் தேவன் என்று எண்ணாதிருங்கள்.
(மத் 10:34)
இயேசு கிறிஸ்து 'சமாதான பிரபு' என்னும் நாமத்தை உடையவராயிருந்த போதிலும் (ஏசா 9:6;மத் 5:9; ரோமர் 5:1) "அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு" அதை அறிவித்தாலும் (எபே 4:15)
இயேசு கிறிஸ்துவின் வருகையும், அவருடைய நற்செய்தி அறிவிப்பும், பிரிவினைகளை உண்டாக்கும். அது ஒரு நோக்கத்தோடேயே உண்டாக்கப்படுகிறது.
1) கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசம் ஒரு கிறிஸ்தவனைப் பாவிகளிடமிருந்து, உலகத்திலிருந்து பிரிக்கிறது. (மத் 10:32-37; லூக் 12:51-53,)
2) கர்த்தருடைய வார்த்தையும், சத்தியமும் அறிவிக்கப்படும்போது எதிர்ப்பும், பிரிவினையும், உபத்திரவமும் ஏற்படும்.
(மத் 12:24;14:4-12; 27:1;அப் 5:17;7:54-60;14:22)
3) கிறிஸ்துவின் நீதியான தரத்தின் படி ஒருவன் வாழ்க்கை நடத்தினால் அது பரிகாசத்துக்கும் நிந்தைக்கும் ஏதுவாகும். (மத் 5:10-11)
4) புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்களின் விசுவாசம், விசுவாசம் மறுப்பு கொள்கை இவை இரண்டும் மோதும் போது அங்கு பிரிவினை உண்டாகும்.
(2கொரி 11:12-15;கலா 1:9;பிலி1:15-17; 2தீமோ 1:15)
5) சமாதானம் ஐக்கியம் என்பவை குறித்த இயேசு கிறிஸ்துவின் போதனை,
"நான் சமாதானத்தைக் கொண்டு வரவில்லை. பட்டயத்தையே கொண்டு வந்தேன்" என்ற போதனைக்கு முரண்படுவது போல் உள்ளதால் உண்மை விசுவாசத்தோடு கொள்ள வேண்டும்.
(யோவா 17:21) இதற்காக இயேசு கிறிஸ்து ஜெபித்தார்.
அவர்களும் ஒன்றாயிருக்கும்படி.
இயேசு கிறிஸ்து ஜெபத்தில் வேண்டிக் கொண்ட ஒற்றுமை, இயக்கங்களின் ஒற்றுமை பற்றினதல்லாமல் பின்வரும் அடிப்படைகளைக் கொண்ட ஆவிக்குரிய ஒற்றுமையாகும்.
1) கிறிஸ்துவில் நிலைத்திருத்தல்.
(யோவா 17:23)
2) கிறிஸ்துவில் அன்பு செலுத்துதல்.
(யோவா 17:26)
3) உலகத்திலிருந்து வேறு பிரிதல். (யோவா 17:14-16)
4) சத்தியத்தினாலே பரிசுத்தமாகுதல்.
(யோவா 17:17,19);
5) சத்தியமாகிய வசனத்தை ஏற்றுக்கொண்டு விசுவாசித்தல்.
(யோவா 17:6,8,17)
6) வசனத்திற்கு கீழ்ப்படிதல்.
(யோவா 17:6)
7) இழந்துபோன மக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வரும்
விருப்பமுடனிருத்தல்.
(யோவா 17:21,23)
இதில் ஒரு காரியம் குறைந்தாலும் இயேசு கிறிஸ்து ஜெபத்தில் வேண்டிக் கொண்ட உண்மையான ஒற்றுமை கிடைக்காது.
1) நம்மைப் பின்பற்றுபவர்கள் "ஒன்றாகும்படி" ஜெபிக்காமல் ஒன்றாயிருக்கும் படி ஜெபித்தார். இது நிகழ்கால நிபந்தனை. அவர்கள் அனைவருக்கும் பொதுவான பிதாவிடமும், குமாரனிடமும் அவர்களுக்கு உள்ள தொடர்பைப் பொறுத்து அவர்கள் எல்லோருக்கும் பொதுவாக உள்ள உலகம், வசனம், நீதி நிலைகள், வழிதப்பி போனவர்கள் பற்றிய ஒரே விதமான மனப்பான்மையின் அடிப்படையிலும்
(1யோவா 1:7) அவர்கள் "தொடர்ந்து ஒன்றாயிருப்பார்கள்".
2) ஒரு செயற்கையான ஐக்கியத்தைக் கூட்டங்கள், கருத்தரங்குகள், ஆலோசனைக் குழு, இவற்றின் மூலம் உருவாக்க முயற்சி, இயேசு கிறிஸ்து ஜெபத்தில் வேண்டிக் கொண்ட ஒற்றுமைக்கு நம்பிக்கை துரோகம் செய்வதில் முடியும்.
கிறிஸ்துவின் மனதிலிருந்து அழகு சாதனம் போன்ற "ஐக்கிய கூட்டங்களை" விட மிகச் சிறந்தது. அது கிறிஸ்துவுக்கும், வசனத்துக்கும், பரிசுத்தத்துக்கும் (எபே 4:3) முற்றிலும் ஒப்புக்கொடுத்தவர்களின் இருதயம், நோக்கம், மனம், சித்தம் ஆகியவற்றின் ஆவிக்குரிய ஐக்கியமாகும்.
முதலில் நமக்கு எப்படிப்பட்ட பிரிவினைகள் உண்டாகின்றன என்பதை பார்த்தோம்.
இரண்டாவது பிதாவோடும் தேவகுமாரனோடும் நமக்கு இருக்கிற ஐக்கியத்தை குறித்து பார்த்தோம்.
தொடர்ந்து உயர்ந்த முத்துக்கள் குறுஞ்செய்தியை வாசித்து பயனடையுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
இன்னும் ஒரு சில கிராமங்களில் தேவனுடைய சபை கட்டுமான பணிக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
கிறிஸ்துவின் பணியில்
Bro, சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments