தேவன் பேசுவதும், சாத்தான் பேசுவதும்,

 உயர்ந்த முத்துக்கள் மூலமாக உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென்.

பரிசுத்த வேதாகமத்தில் தேவன் பேசுவதைம், சாத்தான் பேசுவதைம் குறித்து நாம் சிந்திக்க போகிறோம். 

வேதத்தில் தேவன் பேசுவதும் அதற்கு எதிராக சாத்தான் பேசுவதும் மிகத் தெளிவாக ஆவியானவர் எழுதி வைத்துள்ளார். 

வேதத்தை வாசிக்கிறவர்கள் ஆவியின் நிறைவோடு அதை வாசித்து தெரிந்து கொள்ளும்போது தான் சாத்தான் ஒரு மனிதனை எப்படி வஞ்சித்து ஏமாற்றுகிறான் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

1),தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.(ஆதி 2:16-17)

2),அப்பொழுது (சாத்தான்) சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து "தேவர்களைப்போல்" இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.(ஆதி 3:4,5)

தேவன் சொல்வதையும், சாத்தான் சொல்வதையும் கவனித்து பாருங்கள் எது பெஸ்ட் ஆக தெரிகிறது ?

தேவன் இந்த கனியை புசிக்கும் நாளிலே நீங்கள் சாகவே சாவீர்கள் என்கிறார்.

ஆனால் சாத்தான் இந்த கனியை புசித்தான் நீங்கள் தேவர்களைப் போல ஆவீர்கள் என்றான்.

சாத்தானின் வார்த்தைக்கு செவிக் கொடுத்தபடியால்

அ),ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.             (ஆதி 3:23,24)

ஆ), சகல சுக வாழ்வையும், அதிகாரங்களையும் இழந்து போனார்கள்.(ஆதி 3:19)

இ), மரணம் இல்லாத வாழ்வை இழந்து மரணத்தை அடைந்தார்கள்.(ஆதி 5:5)

ஈ),அவர்கள் நிமித்தம் பூமி சபிக்கப்பட்டது. (ஆதி 3:17)

உ), வேதனையோடு பிள்ளை பெறுவாய். (ஆதி 3:16)

ஊ) வருத்தத்தங்கள், முள்ளும், முகத்தின் வியர்வை,                 (ஆதி 3: 17-19)

தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிர்வாணத்தை தோல் உடையாள் மூடினார், பின்னர் நித்திய நம்பிக்கையை கொடுத்தார்.

சாபங்கள், மரணங்கள், வருத்தங்கள், வேதனையை மாற்ற ஒருவர் வருவார் என வாக்கு அருளினார்.(ஆதி 3:15) சாத்தானுக்கு சொன்ன வார்த்தையாக இருந்தாலும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஒரு நம்பிக்கையை அளித்தது. கடவுள் சொல்லுகிற வார்த்தையை விட பிசாசு சொல்லுகிற வார்த்தைகள் மேலானதாகவும் , சந்தோஷம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கலாம் ஆனால் அவை நிரந்தரம் அல்ல. 

கடவுளுடைய வார்த்தைக்கு நாம் கீழ்படியும் பொழுது அதனால் கிடைக்கிற சந்தோஷமும் சமாதானமே நிரந்தரமானது என்பதை இந்த கட்டுரையின் மூலமாக நாம் அறிந்து கொள்ளுகிறோம். ஆமென்.

இரண்டாம் ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவோடு சாத்தான் எப்படி பேசினான் என்பதையும் அடுத்த உயர்ந்த முத்துக்கள் மூலம் பார்ப்போம்.

தொடர்ந்து நாம் தியானிப்போம் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.



Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை