இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில்.....
இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில்.....
"ஒரு சீஷன், அல்லது தேவனுடைய ஊழியர்கள் பாடுபட வேண்டும்".
(1பேதுரு 2:21)
ஒரு சீஷன், அல்லது தேவனுடைய ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரிய சிலாக்கியமும், மகிமையும் என்னவெனில், இயேசு கிறிஸ்துவுக்காகவும் சுவிசேஷத்திற்காகவும் பாடு அனுபவிப்பதேயாகும்.
(மத்தேயு 5:10)
அவ்வாறு பாடு அனுபவிக்கும் போது விசுவாசிகள் கிறிஸ்துவின் முன்மாதிரியையும், அப்போஸ்தலர்களின் முன்மாதிரியையும் பின்பற்ற வேண்டும். (ஏசா 53; மத் 16:21;20:28;அப் 9:16;எபி 5:8)
1) கிறிஸ்தவர்கள் பாடுகளை அனுபவிப்பதற்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.
(1பேதுரு 4:1; 2கொரி 11:23-29),
அதாவது கிறிஸ்துவின் பாடுகளுக்கு தங்களைப் பங்குள்ளவர்களாகவும்
(1பேதுரு 4:13; 2கொரி 1:5; பிலி 3:10)
தங்களுடைய சேவையில் பாடு அனுபவித்தாலும் ஓர் பங்கு வகிக்கின்றது என்று எதிர்பார்த்தல் வேண்டும்.
(2கொரி 4:10-12; 1கொரி 11:1),
2) கிறிஸ்துவுக்காய்ப் பாடு அனுபவித்தல் என்பது
"தேவனுடைய சித்தத்தின்படி"பாடு அனுபவித்தல் என்று அழைக்கப்படும். (1பேதுரு 4:19).
அதாவது அவருடைய "நாமத்தின் நிமித்தம்"(அப் 9:16)
அவருடைய "சுவிசேஷத்தின் நித்தம்" (2தீமோ 1:8)
அவருடைய "நீதியினிமித்தம்" (அப் 3:14)
அவருடைய"இராஜ்யத்தின் நிமித்தம்"( 2தெச 1:5) பாடு அனுபவிப்பதாகும்.
3) கிறிஸ்துவுக்காய் பாடுகளைச் சகித்தல் நமக்கு ஆவிக்குரிய முதிர்ச்சியையும் (எபி 2:10),
தேவனுடைய ஆசீர்வாதத்தையும் (1பேது 4:14)
மற்றவர்களுக்கு ஊழியம் செய்யக் கூடியதான வாய்ப்பினையும் (2கொரி 4:10-12), பெறுவதற்கு வழி வகுக்கின்றது. கிறிஸ்துவுடனே கூட நாம் மகிமைப் படும்படிக்கும்
(ரோம 8:17)
நித்திய மகிமையை அடைவதற்கும் (ரோம 8:8)
கிறிஸ்துவின் பாடுகளுக்கு நாம் பங்குள்ளவர்களாய் காணப்படுதல் அவசியமாகும். இக்கண்ணோட்டத்தில் இதை நாம் தேவனிடத்திலிருந்து பெரும் விலையேறப்பெற்ற பரிசாக என்ன முடியும்.
(1பேதுரு 2:19;பிலி 1:29),
4) கிறிஸ்துவுக்காகவும், சுவிசேஷத்திற்காகவும் வாழும் போது, பாடுகளை நாம் நாடாமல், கிறிஸ்துவிற்கு நம்மை அர்ப்பணம் செய்திருப்பதன் பொருட்டு அவைகளைச் சகிக்க ஆயத்தமாயிருக்க வேண்டும்.
பேதுரு நிருபத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார்.
அவருடைய கிருபையையும், அவருடைய பலத்தையும் நாம் சார்ந்திருக்கும் பொழுது நாமும் பாடுகளின் ஊடாக கடந்து செல்ல முடியும் என்பதை இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியான செயல்பாடுகள் நம்முடைய கண்களுக்கு முன்பாக பிரதிட்சியமாய் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
தொடர்ந்து ஜெபிப்போம். ஆவியானவருடைய பலத்தில் கடந்து செல்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments