பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சார்.

பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சார்.
(2இரா 24:1)

புதிய பாபிலோனியப் பேரரசின் வல்லமை வாய்ந்த இராஜாவான நேபுகாத்நேச்சார், கி.மு. 605 முதல் 562 வரை ஆட்சி செய்தான். கி.மு.605 இல் அவன் பாலஸ்தீனாவை கைப்பற்றி எருசலேமிலிருந்து

கொஞ்ச பேரை கைதிகளாகப் பிடித்து பாபிலோனுக்கு கொண்டு சென்றான். இதிலிருந்து யூதாவின் 70 வருட சிறையிருப்புக் காலம் தொடங்கியது. இது எரோமியாவினால் முன்னுரைக்கப்பட்டிருந்தது.

(எரே 25:11,12) ஏரோமியா, எசேக்கியேல், மற்றும் தானியேல் நேபுகாத்நேச்சாரின் காலத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். யூதாவை நேபுகாத்நேச்சார் அழித்து மக்களைச் சிறை பிடித்து செல்லுதல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது.


1)கி.மு. 605 ல் யோயாக்கீம் ராஜா முறியடிக்கப்பட்டான்.

தேவாலய பொக்கிஷங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அரண்மனை அதிகாரிகளும் பிடிக்கப்பட்டனர். 

(தானியேலும் அவனுடைய மூன்று எபிரேய நண்பர்களும் உட்பட தானி 1:1-7) ராஜா சங்கிலிகளால் கட்டப்பட்டுப் பாபிலோனுக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

(2இரா 24:1-7; 2நாளா 36:6,7).


2)கி.மு.597 ல் எருசலே மறுபடியும் முறியடிக்கப்பட்டது.

யோயாக்கீன் இராஜாவையும், தேவாலய பொக்கிஷங்களில் மீதியாக இருந்தவர்களையும்,

10000 மனிதர்களையும், பாபிலோனுக்கு கொண்டு சென்று விட்டார்கள். 

(2இரா 24:14-16) 

அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் எசேக்கியேல் தீர்க்கதரிசியும் இருந்தான்.


3)கி.மு.586ல் கடைசித் தடவையாகப் பாபிலோனியர் எருசலேமுக்கு படையெடுத்து வந்தார்கள். இந்தத் தடவை அவர்கள் எருசலேம் நகரத்தையும், தேவாலயத்தையும் இடித்து அழித்து விட்டார்கள். சிதேக்கியா இராஜாவும் மிகவும் ஏழைகளான கொஞ்சம் மனிதர்களும் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

(2இரா 25:1-12; எரே 52:29).


4) பாபிலோன் அல்லது புதிய பாபிலோனிய பேரரசு, 

அசீரியர்களின் ஆதிக்கத்தை முறியடித்து கி.மு.605 முதல் 539 வரை உலகிலேயே மகா வல்லமையுள்ள வல்லரசாக திகழ்ந்தது. பாபிலோனியப் பேரரசு சுமார் 70 ஆண்டு காலம் நீடித்தது.

யூதர்களின் சிறையிருப்பின் காலமும் இந்த 70 வருடங்களே. ஆனால், கி.மு.539ல் பெர்சிய மன்னனான கோரேசினால் பாபிலோன் தோற்கடிக்கப்பட்டது. இந்தக் கோரேஸ் மன்னன் பாபிலோனில் சிறையிருப்பில் இருந்த யூத மக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் சொந்த தேசத்திற்கு போக அனுமதித்தான்.

(2நாளா 36:22,23;எஸ்றா 1:1-4).


5) கர்த்தர் சொன்ன வார்த்தையின் படியே.....

(2இரா 24:2)

பாபிலோனியரிடம் தென் தேசத்தின் வீழ்ச்சி 150 வருடங்களுக்கு முன்னரே தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருந்தது. 

(எசா 6:11,12; 39:6)

ஏரோமியா அது 70 வருடங்கள் நீடிக்கும் என்று கூறியிருந்தான்.

(எரே 25:11,12).


ஏன் இப்படி எல்லாம் நடந்தது?


யூதாவை தேவனுடைய சமூகத்தை விட்டு அகற்ற வேண்டும்.(2இரா 24:3)


மனாசேயின் கொடிய பாவங்களைச் செய்து வந்த பிடிவாதமும், கடின இருதயமும் உள்ள, 

மனந்திரும்பாதவர்கள் மீதுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் தான் யூதா வீழ்ச்சியடைந்தது.


1) விசுவாச மறுதலிப்பு 

உச்சகட்டத்தை எட்டியிருந்தது.

ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் பொய் சொன்னார்கள். 

(எரே 5:31; 6:13).

பேராசை, வஞ்சகம் (எரே 6:13)

விபசாரம், வேசித்தனம், 

(எரே 5:8,9)

அநீதி, கொடுமை (எரே 6:7)

கர்த்தருடைய வார்த்தையை புறக்கணித்தல்.(எரே 8:9,10)

உண்மையற்ற தன்மை 

(எரே 9:2,3) ஆகியவை யூதாவின் மக்களிடம் காணப்பட்ட பண்புகள் ஆகும். 


2) பழைய ஏற்பாட்டு மக்களுக்கு தேவனுடைய கடுமையான நியாயத் தீர்ப்பு, இன்றைய விசுவாசிகளுக்கு ஒரு பெரும் எச்சரிக்கையாக உள்ளது. இயற்கையான கிளைகளையே தேவன் விட்டு வைக்கவில்லை யென்றால் உலகத்தோடும், பாவ வாழ்க்கையோடும் இணைந்துள்ள ஒட்டுச் செடியின் கிளைகளை எம்மாத்திரம் ?

(ரோம 11:18-25).

பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்து மூலமாக பாவத்தின் சிறையிருப்பிலிருந்து நம்மை விடுதலையாக்கிருக்கிறார்.

திரும்பவும் பாவத்தில் ஈடுபட்டு துணிகரமான செயல்களை செய்யாதபடிக்கு நம்மை நாமே காத்துக் கொள்வோம்.  வேண்டிய கிருபைகளை தேவன் தாமே தந்து நம்மை ஆசிர்வதிப்பாராக. ஆமென். 

கிறிஸ்துவின் பணி சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை