விசுவாசத்தினால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.

விசுவாசத்தினால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
(மத் 17:20;)

இயேசு கிறிஸ்து அடிக்கடி உண்மையான விசுவாசத்தின் தன்மையைப் பாராட்டி பேசுகிறார்.

மலைகளைப் பெயர்க்கத்தக்க விசுவாசம் பற்றியும், அற்புதங்களைச் செய்யவும், நோய்களைக் குணமாக்கவும், ஆண்டவருக்காகப் பெரிய காரியங்களைச் செய்யவும் கூடிய உண்மையான விசுவாசத்தைப் பற்றியும் இயேசு கிறிஸ்து எடுத்துக் கூறினார்.

இங்கே இயேசு கிறிஸ்து கூறும் விசுவாசம் தான் என்ன ?

1) உண்மையான விசுவாசம் என்பது. பலன்களைத் தரக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த விசுவாசம் அது மலைகளைப் பெயர்க்கத்தக்க விசுவாசம்.


2) விசுவாசம் என்பது. ஒரு ஆற்றல் அல்லது சக்தி என்று மட்டும் நம்புவது உண்மையான விசுவாசம் அல்ல. ஆனால் தேவன் மீது கொள்ளும் விசுவாசம் ஆகும். 

(மாற் 11:22;)


3) உண்மையான விசுவாசம் என்பது கிறிஸ்தவர்களின் இருதயங்களில் தேவன் செய்யும் ஒரு கிரியை ஆகும். 

(மாற் 9:24;பிலி 2:13;)

நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதிலளிப்பார் என்று தேவனால் நமது இருதயங்களில் தரப்படும் ஒரு விழிப்புணர்வு உண்மையான விசுவாசத்தில் அடங்குகிறது ‌.(மாற் 11:23;)

இது பரிசுத்த ஆவியினால் நமது இருதயங்களில் உருவாக்கப்படுகிறது. 

இதை நம் உள்ளங்களில் நம்மால் உண்டாக்க முடியாது. 

(ரோம 12:3; 1கொரி 12:9;)


4) உண்மையான விசுவாசம் என்பது கிறிஸ்துவினால் நமக்கு அருளப்பட்ட ஒரு கிருபை வரமாக இருப்பதினால், நாம் கிறிஸ்துவைக் கிட்டிச் சேர்ந்து அவருடைய வார்த்தைகளை ஏற்று, விசுவாசித்து, அவர் மீது நமது நம்பிக்கையையும், அர்ப்பணிப்பையும் உறுதி செய்து ஆழமாக்க வேண்டும்.

(ரோம 10:17; பிலி 3:8-15)

நாம் எல்லா காரியங்களுக்கும் அவரையே சார்ந்திருக்கிறோம்.

"என்னாலேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது"(யோவா 15:5; 3:27;எபி 4:16; 7:25)

அதாவது நமது விசுவாசத்தைத் தொடங்குகிறவரும் முடிக்கிறவரும் இயேசு கிறிஸ்துவே என்பதை நாம் உணர வேண்டும். (எபி 12:1)

அவருடைய நெருங்கிய பிரசன்னம் நம்மோடு இருப்பதும், அவருடைய வார்த்தைக்கு நாம் பூரணமாக கீழ்படிவதும் விசுவாசத்தின் இரகசியமாகும்.(மத் 9:21,22; யோவா 15:7;).


5) உண்மையான விசுவாசம் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தேவனுடைய அன்பு, ஞானம், கிருபை, தேவ இராஜ்யத்தின் நோக்கம், 

ஆகியவற்றின் அடிப்படையில் விசுவாசம் தரப்படுகிறது. நம் மீது அவருக்குள்ள அன்பை வெளிப்படுத்தவும், அவருடைய சித்தத்தை நிறைவேற்றவும் விசுவாசம் தரப்படுகிறது. இதை நாம் நமது சொந்த நலன்களுக்காகவும், விருப்பங்களுக்காகவும் பயன்படுத்தக் கூடாது.

(யாக் 4:3;)

உங்களுக்கு வேண்டியவைகள் உங்கள் பிதா அறிந்திருக்கிறார். 

(மத் 6:32)

பரிசுத்த வேதாகமத்தில் விசுவாசம் மூன்று அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. 

முதலாவது தேவனுக்கு நம்பிக்கையாக இருப்பது. 

இரண்டாவது ஆவிக்குரிய கனிகளை வெளிப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. 

மூன்றாவது வரமாக சொல்லப்பட்டிருக்கிறது.

உங்களாலும் பெரிய காரியங்களை செய்ய முடியும் என்று வேதம் நம்மை அறிவுறுத்துகிறது. கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை