மனுஷகுமாரனின் வருகை.
மனுஷகுமாரனின் வருகை.
(மத் 24:37)
மனுஷகுமாரனின் வருகை குறித்து இயேசு கிறிஸ்து கூறுவதில் இரண்டு காரியங்கள் உள்ளன.
அவருடைய வருகையின் முற்பகுதி,
"யாரும் அறியாத, எதிர்பாராத நேரத்தில் வருதல்"
(அதாவது திருச்சபையின் பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளும் போது (மத் 24:42;
யோவா 14:3; வெளி 3:10)
இரண்டாவது பகுதி,
உபத்திரவ காலம் முடிந்த பின் வருதல். அப்போது அவர் அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அழித்துவிட்டு, நீதிமான்கள் அனைவரையும் தமது இராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வார். (வெளி 19:11 முதல்
20:4 வரை)
'நோவாவின் நாட்களில்' என்ற உதாரணத்தில் இயேசு கிறிஸ்து மூன்று வகையான மக்களை சுட்டிக்காட்டுகிறார்.
இதை படிக்கும் போது தான் இந்த வித்தியாசம் தெரிகிறது.
(மத் 24: 37-44)
கிறிஸ்துவோடு தொடர்புடைய அந்த மூன்று வகை மக்கள் பின்வருமாறு:
1) உபத்திரவ கால
அவிவிசுவாசிகள்.
நோவாவின் காலத்தில் பேழையின் வெளியே இருந்து வெள்ளப்பெருக்கில் அழிந்தவர்கள் இந்த வகை மக்களுக்கு மாதிரிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு கிறிஸ்துவின் வருகையின் நேரம் தெரியாது.
இவர்கள் ஆயத்தமில்லாதவர்கள்.
கடைசி காலத்தின் முடிவில் அழிக்கப்படுவார்கள்.
(மத் 24:38,39,43; லூக் 17:26-28). இது கிறிஸ்துவின் இரண்டாம் பகுதி. உபத்திரவ காலத்துக்கு பின் நடப்பது.
2) உபத்திரவ கால விசுவாசிகள்.
இவர்களுக்கு மாதிரியாக நோவா உள்ளான். முடிவு கால அடையாளங்களை கண்ட உபத்திரவக் காலப் பரிசுத்தவான்களுக்கு கிட்டத்தட்ட சரியான கிறிஸ்துவின் வருகை நேரம் தெரியும்.
அவர்கள் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாய் இரட்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் அவர்களுக்காக கிறிஸ்து வருவார்.(மத் 24:27; ஆதி 7:4;) இதுவும் கிறிஸ்துவின் வருகையில் இரண்டாம் பகுதியையே காட்டுகிறது.
3) இக்கால விசுவாசிகள். திருச்சபைகளில் உள்ள பரிசுத்தவான்கள். உபத்திரவ காலத்துக்கு முன் உள்ளவர்கள்.
இவர்களுக்கு மாதிரிகளாக இருப்பவர்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்.
அவர்களுக்கு கிறிஸ்துவின் வருகையின் நேரம் தெரிவதில்லை.
அவர்களை கிறிஸ்து எப்போது வந்து பரலோகத்துக்கு எடுத்துச் செல்வார் என்று தெரியாது.
(மத் 24:42,44; யோவா 14:3;
1தீமோ 4:14) அவர்களுக்காக கிறிஸ்து வருவதற்கு முன் அடையாளங்கள் எதும் இல்லை. அவருடைய வருகை எதிர்பாராத நேரத்தில் இருக்கும் என்று இயேசு கூறுகிறார். (மத் 24:42,44;) திருச்சபையின் பரிசுத்தவான்களை அதாவது சீஷர்களை இயேசு கிறிஸ்து நோவாவுக்கு அதாவது உபத்திரவ கால விசுவாசிகளுக்கு ஒப்பிடவில்லை என்பதை கவனியுங்கள். ஆனால், வெள்ளப்பெருக்கில் அழிந்தவர்களுக்கு ஒப்பிடுகிறார்.
"அவர்கள் எதையும் அறிந்திருக்கவில்லை"என்பதை (மத் 24:39) "நீங்கள் அறியாதிருக்கிறபடி"
என்பதுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.(மத் 24:42) அதாவது வெள்ளத்தில் அழிந்தவர்களைப் போல ஒரு விதத்தில் திருச்சபை பரிசுத்தவான்கள் இருக்கிறார்கள். அவர்களும் கிறிஸ்துவின் வருகை நேரத்தை அறியாதவர்கள். நோவாவின் காலத்தில் வெள்ளத்துக்கு பலியானவர்கள் வெள்ளம் வரும் நேரத்தை அறியாமலிருந்து, வெள்ளம் வந்ததும் ஆச்சரியப்பட்டது போல இயேசு கிறிஸ்து திரும்பி வருவதைக் கண்டதும் அவர்களும் ஆக்கினையை அடைவார்கள். எனவே, திருச்சபைப் பரிசுத்தவான்கள் எப்போது இயேசு கிறிஸ்து வந்தாலும், அவர் வருகைக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். (மத் 24:44).
எப்போது வருவீரையா....
என் உள்ளம் ஏங்குதையா...
எனப் பாடல் வரிகளைப் போல வாழ்க்கையில் காத்திருப்போம்.
எச்சரிக்கையாக இருப்போம் மாரநாதா. அல்லேலூயா. ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments