கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள். என்ற சத்தம் பரலோகத்திலிருந்து உண்டாக கேட்டேன்.
(1தெச 4:16;வெளி 14:13)
ஏனென்றால், முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
(வெளிப் 20:6)
உயிர்த்தெழுதலில் பங்கு பெறுகிறவர்களுக்கு தான்
ஆசாரியர், ராஜா, ஆயிர வருட அரசாட்சியில் பொறுப்பு கொடுக்கப்படும்.
இப்போது சும்மா பாடிகிடலாம்
ராஜாக்களும் நாங்களே ஆசாரியர்களும் நாங்களே என்று....
முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குப்பெற வேண்டுமென்றால் முதலாவது கிறிஸ்துவுக்குள் மரிக்க வேண்டும்.
ஆவிக்குரிய வாழ்க்கையில்-மாம்சத்தின் கிரியைகள் மரிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்து எந்த வழியாக ஒப்புக்கொடுக்கப்பட்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்தது போல
ஒவ்வொரு விசுவாசியும் இயேசுவின் வழியில் செல்ல வேண்டும்.
மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
(லூக்கா 24:7)
1) சபை அல்லது விசுவாசி பாவிகள் கையில் ஒப்புக்கொடுக்கப்படவும்,
2) சிலுவையில் அறையப்படவும்,
3) அடக்கம் பண்ணப்படவும்,
4) உயிர்த்தெழவும்,
வேண்டும்.
1) சபை அல்லது விசுவாசி
முதலாவது சொந்த ஜனங்களால்(கிறிஸ்தவர்களால்)பாதிக்கப்படுவார்கள்.
அதன்பின்பு புறஜாதிகளால் பாதிக்கப்படுவார்கள்.
அவர்கள் மற்றும் இவர்கள்
அடித்து, துன்புறுத்தி, பரிகாசம் பண்ணி
சிலுவையில் அறைய ஒப்புக் கொடுப்பார்கள்.
(மத் 17:22,23; 20:18,19)
2) சிலுவையில் அறையப்படவும்.
சபை அல்லது விசுவாசி அனுதினமும் சிலுவையை சுமக்க வேண்டும்.
(மத் 16:24)
நம்முடைய பழைய மனுஷன் சிலுவையில் அறையப்பட வேண்டும்.
(ரோமர் 6:6)
கிறிஸ்துவை உடையவர்கள்
தங்களுடைய மாம்சத்தின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்து இருக்க வேண்டும்.
(கலா 5:24)
கிறிஸ்துவோடு கூட சிலுவையில் அறையப்பட வேண்டும்.
(கலா 6:14)
தினமும் நம்முடைய வாழ்க்கையில் சிலுவையை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
3)மரிக்க வேண்டும். அடக்கம் பண்ண பட வேண்டும்.
மரித்தால் தானே உயிர்த்தெழ முடியும்.
நம்மை நாமே சாகடித்துக் கொள்வதல்ல....
கிறிஸ்துவுக்காக வாழ்ந்து மரிக்க வேண்டும்.
கிறிஸ்துவின் விருப்பத்தையும் அவருடைய சித்தத்தையும் செய்து முடித்து மரிக்க வேண்டும்.
(அப் 7:59, ஸ்தேவானை போல)
நம்முடைய அப்போஸ்தலர்கள் அந்த வழியாகவே கடந்து போனார்கள்.
4) உயிர்த்தெழ வேண்டும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வரும்பொழுது
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது உயிரோடு எழுந்திருப்பார்கள்.
கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் தம்முடைய ஆவினாலே உயிரோடு கூட எழுப்பினது போல
நம்மையும் கிறிஸ்துவோடு கூட கொண்டு வருவார் என்பது நிச்சயம்.
தொடர்ந்து விசுவாசத்தில் நிலைத்திருங்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments