கீழ்படிதல். 

ஆதி 22:18)


நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ஒரு மனிதன் கர்த்தருடைய சத்தத்திற்கு "கீழ்ப்படிந்து"

நடக்கும்பொழுது தேவனுடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்கிறான்.

(உபா 28:1-3)

பிதாவாகிய தேவன் ஆபிரகாமுக்கு அதைத்தான் சொல்லுகிறார் .

இன்று அநேகர் ஆசிர்வாதத்திற்காக  தங்களுடைய திருச்சபையை விட்டு  சபை சபையாக அலைந்து திரிவதை பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. கையில் வேத புத்தகம் இருக்கிறது,  பலமுறை படித்தேன் என்று சொல்லுகிறார்கள், பிறகு ஏன் அலைகிறார்கள் ?

காரணம் ஒன்றுதான்  வேத வசனத்திற்கு செவி கொடுப்பதில்லை அதாவது கீழ்ப்படிவதில்லை .

இதில் இன்னோன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஆசிர்வாதம் என்பது பணம், ஐஸ்வர்யம், ஆஸ்திகள், அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்று அநேகர் அதைத்தான் ஆசீர்வாதம் என்று சொல்லுகிறார்கள்.

ஆபிரகாம் தேவனுடைய அழைப்பை பெறுவதற்கு முன்பே 

ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்.

(ஆதியாகமம் 13:2) என்கிறது பரிசுத்த வேதாகமம்.

அப்படியானால் ஆசிர்வாதம் என்றால் என்ன ?

தேவன் மீது வைக்கும் விசுவாசம். அதாவது தன்னுடைய சரீரம் மற்றும் சாராளுடைய   கர்ப்பம் செத்துப் போனதையும் எண்ணாமல்  தேவனை மகிமை படுத்திக் கொண்டிருந்தான் .(ரோமர் 4:19-21)

நூறு வயதில் ஒரு குமாரனை  பெற்றெடுத்தான்.

ஆசிர்வாதம் என்பது ஒன்றுமே இல்லாத இருந்தோம் சகலத்தையும் உடையவர்களாக விளங்க பண்ணுகிறது.

தேவனுடைய ஆசிர்வாதம் நம்மை பாதுகாக்கிறது நம்மை வழி நடத்துகிறது நம்முடைய தேவைகளை சந்திக்கிறது நம்மை அவருக்காக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. என்பதை புரிந்து கொள்வது ஆச்சரியமான விஷயந்தான்.

ஆனால் வேத வசனத்திற்கு கீழ்ப்படிந்தவர்களுக்கு இது ஆச்சரியமல்ல அனுபவம் தேவனுடைய சாட்சிகளும் ஆகும்.

சின்ன சின்ன விஷயத்தில் கீழ்ப்படிய வேண்டும். 

சின்ன விஷயத்தில் கீழ்ப்படியாத போது பாவம் நமக்குள் பிரவேசிக்கிறது. 

(உபா 28:15 லிருந்து கடைசி வசனம் வரை)


நோவா நல்ல உதாரணம். 

தேவன் நோவாவிடத்தில் ஒரு காரியத்தை சொன்னார்.

ஆனால் நோவா அதை செய்தானா ? 

நோவாதற்கு கீழ்ப்படிந்தானா ?


(ஆதியாகமம் 8:15-16)

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி;

நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.

ஆனால் நோவா செய்தது. 

(ஆதியாகமம் 8:18)

அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்.

இதை மிக கவனமாக வாசிக்கும் பொழுது நோவாவின் கீழ்ப்படியாமையை கவனிக்க முடியும். ஆகையால் தான் வேதம் தெளிவாக கீழ்ப்படிதலை பற்றி நமக்கு போதிக்கிறது. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நமக்கு கீழ்படிதலை குறித்து சொல்லித் தந்தது மாத்திரமல்ல மரண பரியந்தம் அவர் கீழ்ப்படிந்து வாழ்ந்து காட்டினார். என்பதை நாம் வேதத்தின் மூலமாக நன்கு அறிவோம். 

ஆகையால் வேத வசனத்திற்கு கீழ்ப்படிய முயற்சி செய்யுங்கள். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

 9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை