தேவனால் எல்லாம் கூடும்.
தேவனால் எல்லாம் கூடும். இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். (மத்தேயு 19:26) மனிதனால் இந்த உலகத்தில் செய்ய முடியாத காரியங்கள் எவ்வளவோ இருக்கிறது. ஆனால் தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை .( லூக்கா 1:37) என்று வேதம் சொல்லுகிறது. உலகத்தில் விஞ்ஞானம் எவ்வளவு வளர்ச்சி பெற்று இருக்கிறது பாருங்கள். ஆனால் அவைகளால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்பதை அநேகர் கவனிக்க தவறி விட்டார்கள். விஞ்ஞானத்தால் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. விஞ்ஞானத்தால் மக்களுடைய வியாதிகளை குணமாக்க முடியாது. விஞ்ஞானத்தால் மக்களுடைய பசியை போக்க முடியாது. விஞ்ஞானம் மக்களை ஒரு நாளும் பாதுகாக்க முடியாது. விஞ்ஞானம் எப்போதுமே தன்னுடைய வளர்ச்சியையும், மக்களை அழிக்கும் ஆற்றலையும், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயங்களையும், மக்களை அடிமைப்படுத்தும் ஆற்றலை மட்டுமே கொண்டுள்ளது. ஆகையால் மனிதனால் அநேக பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஆகையால் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், மனுஷனால் கூடாதவைகள் தேவ...