அடுத்தடுத்து நடப்பது என்ன 2
(407) உயர்ந்த முத்துக்கள். உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன ? கடந்த நாள் முடிக்கும் பொழுது மீட்கப்பட்டவர்கள் மேல் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படும் (1பேது 1:2) ஏற்கனவே நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பை பெற்றிருக்கிறோம் (கொலே 1:14; எபே 1:7). அடமானம் வைத்த பொருளை மீட்பது போல, இயேசு கிறிஸ்து மூலமாக, பிதாவாகிய தேவன் நம்மை மீட்டுக் கொண்டார். (கிறிஸ்துவின் இரத்தத்தை கிரயமாக செலுத்தி) (1கொரி 6:20; 7:23). ஆதாம் ஏவாள் இருவரும் பிசாசுக்கு இடங்கொடுத்து தம்மையும், வருங்கால சந்ததியையும், தேவன் ஆதாமுக்கு கொடுத்த சகல ராஜ்ஜியங்களையும், அதிகாரங்களையும், வல்லமையையும் சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டான். (லூக் 4:6; மத் 4:9) இயேசு கிறிஸ்து, கல்வாரி சிலுவையில்(சர்வலோகத்தின் பாவத்திற்காக) தம்முடைய கடைசி சொட்டு இரத்தத்தையும், சிந்தி, மரித்து ,அடக்கம் பண்ணப்பட்டு , மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு, அவர் சொன்னதை கவனிக்க வேண்டும். (மத்தேயு 28:18ஐ) அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக்...