தேவனுடைய வார்த்தை

தேவனுடைய வார்த்தை

ஏசா 55:10-11 "மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்: அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்."

தேவனுடைய வார்த்தையின் தன்மை. தேவனுடைய வகளம் (அல்லது “கர்த்தருடைய வார்த்தை" அல்லது சுருக்கமாக "வார்த்தை”) என்பது வேதத்தில் பல சூழ்நிலைகளில் கூறப்பட்டுள்ளது. 
1) முதலாவதாக தேவன் நேரடியாகப் பேசியவற்றைக் குறிக்கிறது. தேவன் ஆதரம் ஏவானோடு பேசியபோது கூறிய வார்த்தைகள் 'தேவ வார்த்தைகள்' ஆகும்.
 (ஆதி 2:16-17; ஆதி 3:9-19). இது போலவே தேவன் ஆபிரகாமுடன்
 (உம் ஆதி 121- 3)
 ஈசாக்குடன் (ஆதி 26:1-5), யாக்கோபுடன்
 (உம் ஆதி 28:13-15), மோசேயுடன் (உம். யாத் 3-4) பேசினார். சீனாய் மலையில் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தபோது தேவன் இஸ்ரவேலின் முழு தேசமக்களுடன் பேசினார். (யாத் 20:1-19) அவர்கள் மலையினின்று கேட்ட வார்த்தைகள் "தேவனுடைய வார்த்தைகள் "ஆகும்.

2) நேரடியாகப் பேசியது போலவே தேவன் தீர்க்கதரிசிகள் மூலமாகவும் பேசினார். அவர்கள் தேவ மக்களுடன் பேசியபோது "என்று கர்த்தர் சொல்லுகிறார்" என்ற முடிவுச் சொல்லுடனோ அல்லது "கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி" என்ற ஆரம்பச் சொல்லுடனோ இணைத்துக் கூறினர். எனவே அவை தேவ வார்த்தைகளாகவே இருந்தன எனவே தீர்க்கதரிசிகளின் வாக்குக்கு இஸ்ரவேலர் செவி கொடுத்தபோது தேவ வசனத்தையே கேட்டனர்.

3) புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் "தேவன் சொல்லுகிறதாவது" எனும் அடைமொழியுடன் எழுதாவிட்டாலும் அவர்களால் கூறப்பட்டவை தேவ வார்த்தைகளாகவே இருந்தன. உதாரணமாக பிசீதியா அந்தியோகியாவில் பவுல் செய்த பிரசங்கம் (அப் 13:16-41) அங்குள்ள மக்கள் அனைவரையும் உணர்வடையச் செய்ததுடன் "அடுத்த ஓய்வு நாளிலே கொஞ்சங்குறைய பட்டணத்தார் அனைவரும் தேவ வசனத்தைக் கேட்கும்படி கூடி வந்தார்கள். (அப் 13:44) பவுலும் தெசேலானிக்கேயருக்கு எழுதும்போது, "ஆகையால், நீங்கள் தேவ வசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது அதை மனுஷர் வசனமாய் ஏற்றுக் கொள்ளாமல் தேவ வசனமாகவே ஏற்றுக் கொண்டீர்கள்." (1 தெச 2:13; அப் 8:25) என்கின்றார்.

4) இவை மட்டுமின்றி இயேசு பேசிய அனைத்தும் தேவவசனமாகும்; ஏனெனில் இயேசு தேவனல்லவா? (யோவா 11.18; 10:30; 1 யோவா 5:20) இயேசுவின் வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது அது தேவ வசனமாயிருந்தது என லூக்கா கூறுகின்றார். (லூக் 5:1) பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் “கர்த்தர் சொல்லுகிறார்"" என்றபோது இயேசு தனது செய்திகளுக்கு முன் "நான் சொல்லுகிறதாவது" என்றார். (உம். மத் 5:18,20,22,32,39: 11:22,24 மாற் 9:1; 10:15; லூக் 10:12: 12:4; யோவா 5:19: 6:26; 8:34) இயேசுவுக்கு தேவ வசனத்தைப் பேசும் தெய்வீக அதிகாரம் இருந்தது. "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பிளவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவனுண்டு" என இயேசு கூறினபடியால் அவருடைய வார்த்தைகளைக் கேட்பது மிகமிக முக்கியம். (யோவா 5:24) தேவனுடைய வசனத்துடன் இயேசுவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாலேயே அவரை "வார்த்தை" என வேதம் வர்ணிக்கிறது. (யோவா 1:1,14; 1 யோவா 11 வெளி 19:13-16; ).

5) தேவ வசனம் என்பது தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள், இயேசு இவர்கள் பேசியவற்றின் எழுதி வைக்கப்பட்ட பதிவேடாகும். (அதாவது வேதபுத்தகம்) புதிய ஏற்பாட்டில் "மோசே கூறினான்""தாவீது கூறினான்"" "ஆவியானவர் கூறுகிறார்" "தேவன் கூறுகிறார்" என வருபவற்றின் மத்தியில் பெரிய வித்தியாசமில்லை. ஏனெனில் எழுதப்பட்டவை தேவ வசனங்களாகும். (அப் 3:22, ரோம 10:5,19, எபி 3:7; 4:7; )

 வாக்கியங்களின் தெய்வீகத் 6) வேதத்தில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு இணையான அதிகாரமில்லையானாலும் இந்நாட்களில் போதகர்களும், தீர்க்கதரிசிகளும் சபையில் பிரசங்கிப்பவற்றையும் தேவவசனம் எனலாம். 
அ) சுவிசேஷ வார்த்தையினால் கூறப்பட்டவை தேவ வசனம் எனத் தனது வாசகர்களுக்குப் பேதுரு கூறுகின்றார். (1 பேது 1:25) வசனத்தைப் போதிக்கும்படி நீமோத்தேயுவுக்குப் பவுல் புத்திமதி கூறுகின்றான். 
(2 தீமோ 4:2), ஆனால் இப்படிப்பட்ட பிரசங் பார்க்கவும்.)
 ஆ) ஆராதனையின்போது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் வெளிப்பாடோ, தீர்க்கதரிசனமோ தேவ வசனமோ? (1 கொரி 14:26-32) ஆம், அது தேவ வசனமே. ஆனால் மற்ற தீர்க்கதரிசிகளின் மூலம் இவை சோதித்துப் பார்க்கப்பட வேண்டும். எனவே சில தீர்க்கதரிசனங்கள் தேவ வசனமாக இல்லாமலும் இருக்கலாம். (1 கொரி 14:29 குறிப்பைக் காண்க) எனவே இன்றைய தீர்க்கதரிசிகளின் வாக்குகளை எழுதப்பட்டுள்ள தேயகங்கள் எழுதப்பட்ட 
தேவ வசனங்களுக்குப் புறம்பானதாய் வித்தியாசமாய் இருக்கக்கூடாது. எனவே கொடுக்கப்படும் செய்தி தேவ வசனமா என அறிந்து கொள்ளும் அளவுகோல் எழுதப்பட்டுள்ள தேவ வசனமாகும் (பக் 1384இல் உள்ள "கள்ளப் போதகர்கள்" என்ற தலைப்பில் உள்ள கட்டுரையைப்

வார்த்தைகளின் அளவுக்கு உயர்த்திப் பேசுவது தகுதியன்று (1 கொரி 14:31 குறிப்பைக் காண்க பக் 1648இல் உள்ள "விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய வரங்கள்” என்ற தலைப்பில் உள்ள கட்டுரையையும், பக் 1710இல் உள்ள "திருச்சபையின் ஊழியங்களுக்கான ஆவிக்குரிய வரங்கள்" என்ற தலைப்பில் உள்ள சுட்டுரையை பார்க்கவும்).

தேவ வசனத்தின் வல்லமை: தேவ வசனம் பரலோகத்தில் நிலைத்திருக்கின்றது. (சங் 119:89; ஏசா 40:8; 1பேது 124-25) எனினும் அது அசைவற்றதாய் இல்லாமல் வல்லமையும், மகத்துவமும் உள்ளதாகப் பெரிய காரியங்களைச் செய்கின்றது. (எபி 4:12, எசா 55:11) 1) தேவ வசனம் உருவாக்குகின்றது.

படைப்பின் சரித்திரத்தின்படி தேவன் தமது வார்த்தையினால் உலகம் உருவாகியது. (ஆதி 13-4,6-7,9) இதனையே சங்கீதக்காரன், "கர்த்தருடைய வார்த்தையினால் வாளங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வ சேனைகளும் உண்டாக்கப்பட்டது" என்கிறான். (சங் 33:6, வ9) எபிரெயர் நிருபத்தை எழுதியவரும் "உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டது" என்கிறார். (எபி 11:3, 2 பேது 3:5) உலகை

உருவாக்க தேவன் பயன்படுத்திய வார்த்தை இயேசு கிறிஸ்துவே என (யோவா 11-3) யோவான் கூறுகின்றார். தலைப்பில் உள்ள கட்டுரையைப் பார்க்கவும்.). (பக் 6இல் உள்ள "சிருஷ்டிப்பு" என்ற M

2) படைப்பை நிலை நிறுத்தவும், தேவனுடைய வார்த்தைக்கு வல்லமையுண்டு. எபிரெயர் நிருபத்தை எழுதியவரும் தேவன் சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறார். (எபி 1:3) என கூறுகிறார். (சங் 147:15-18ஐயும் காண்க) உருவாக்கும் வார்த்தையைப்போல இந்த வார்த்தையும் இயேசுவுக்கு ஒப்பாக்கப்பட்டுள்ளது. எல்லாம் அவருக்குள் நிலைத்திருக்கிறது. (கொலோ 1:17) என பவுல் வலியுறுத்திக் கூறுகின்றார். 3) புது ஜீவனைக் கொடுக்க தேவனுடைய வசனத்துக்கு வல்லமையுண்டு, தேல் வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும்
ஜெனிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே என பேதுரு கூறுகின்றார். (1 பேது 1:23; 2 தீமோ 3:15; யாக் 1:18) இதனால்தான் இயேசு ஜீவ வார்த்தை என அழைக்கப்படுகின்றார். (1யோவா 1:1).

4) தேவனுடைய வார்த்தை, கிருபை, வல்லமை, வெளிப்படுத்தல் இவற்றைத் தருவதால் விசுவாசிகள் விசுவாசத்தில் வளர்ந்து இயேசு கிறிஸ்து வுக்குத் தம்மை அர்ப்பணிக்கின்றனர். ஏசாயா இதைக் குறித்து ஒரு விளக்கத்தைக் கூறுகின்றான். உலகின் பயிர்கள் வளருவதற்கு வானத்திலிருந்து பொழியும் மழைத்தண்ணீர் எவ்ளவு முக்கியமோ அதுபோல தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வசனங்கள் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் வளாச் செய்யும். (ஏசா 55:10-11) இதனையே பேதுருவும் களங்கமில்லாத வசனமெனும் ஞானப்பாலைப் பருகுவதால், இரட்சிப்பில் நாம் வளர்கிறோம் என்கின்றார்.

(12:2)

5) சாத்தானுடன் போரிட்டு ஜெயிப்பதற்கென தேவன் நமக்குத்தந்த பட்டயமும், தேவ வார்த்தையாகும். (எபே 6:17; வெளி 19:13-15) இயேசுவும் தனது சோதனையின்போது, "என்று எழுதியிருக்கிறதே" அதாவது "தேவனுடைய பிழையில்லாத வார்த்தை இது" எனக்கூறி தேவ வசனத்தின் மூலம் சாத்தானை ஜெயித்தார். (லூக் 4:1-11; மத் 4:1-11 குறிப்பைக் காண்க.).

6) இறுதியாக, தேவனுடைய வார்த்தை நம்மை நியாயம் தீர்க்க வல்லமையுள்ளதாகும். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளும், புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்களும் தேவனிடத்திலிருந்து வந்த நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளை உபயோகித்தனர். அவருடைய வார்த்தையே கடைசிநாளில் மக்களை நியாயம்தீர்க்கும் என இயேசு கூறினார். (யோவா 12:48) தேவனுடைய வார்த்தை இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறது. (நியாயம் தீர்க்கிறது) என எபிரெயரில் வாசிக்கிறோம். (எபி 4:12 குறிப்பைக் காண்க). தேவனுடைய வார்த்தையைத் தள்ளுபவர்களுக்கு ஒரு நாளில் அதுவே குற்றம் சுமத்தும் வார்த்தையாக வெளிப்படும்.

தேவனுடைய வார்த்தைக்கு நம்முடைய பதிலீடு: நாம் தேவனுடைய வார்த்தைக்கு எப்படி பதில் செய்யவேண்டுமென வேதம் தெளிவாகக் கூறுகின்றது. நாம் தேவ வார்த்தையை ஆவலுடன் கேட்க வேண்டும். (ஏசா 1:10; எரே 7:1-2; அப் 17:11) அதனைப் புரிந்து கொள்ள விரும்ப வேண்டும். (மத் 13:23) தேவனுடைய வார்த்தையைப் புகழ வேண்டும். (சங் 56:4,10) நேசிக்க வேண்டும். (சங் 119:47,113) அதை நம்முடைய மகிழ்ச்சியாகவும், இன்பமாகவும் கொள்ள வேண்டும். (சங் 119:16,47) தேவ வசனம் கூறுவதை நாம் ஏற்றுக்கொண்டு (மாற் 4:20; அப் 2:41; 1 தெச 2:13) நமது இருதயத்தில் மறைத்து வைத்து (சங் 119:11) அதனை சார்ந்து (சங் 119:42), அதனுடைய வாக்குத்தத்தங்களில் நம்பிக்கை வைக்க வேண்டும். (சங் 119:74,81,114:30:5) எல்லாவற்றுக்கும் மேலாக அவரது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து (சங் 119:17,67; யாக் 122-24) அதின்படி நடக்க வேண்டும். (சங் 119:9) தேவ வார்த்தையைப் போதிப்பவர்களை (1 தீமோ 5:17) சரியாகக் கையாண்டு (2 தீமோ 2:15) உண்மையாகப் போதிக்க வேண்டுமென (2 தீமோ 4:2) தேவன் கூறுகிறார். செல்லுமிடமெங்கும் தேவனுடைய வசனத்தின் செய்தியை அறிவிக்கும்படி எல்லா விசுவாசிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். (அப் 8:4).

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை