கிறிஸ்தவனின் தொடர்பு
இந்த உலகத்துடன் கிறிஸ்தவனுக்குத் தொடர்பு
1யோவா 2:15-16 "உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூறாதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தின் பிதாவின் அன்பில்லை, ஏனெனில் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவை களெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்"
கிரேக்க மொழியில் காஸ்மாஸ் என்று அழைக்கப்படும் இந்த யுகத்தில் நாம் கானும் பரந்து விரிந்த அண்ட கோளத்தைக் குறிக்கிறது. அது இப்பொழுது தேவனைவிட்டுத் தனித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சாத்தான் இதனை ஆளுகை செய்கிறான், உலகம் என்ற இந்த பதம் உலகத்திலுள தீமைகள், வேசித்தனம், பாவசிற்றின்பங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அதோடு, அது தேவனையும், அவருடைய வெளிப்பாடான வசனங்களையும் அசட்டை செய்யும் ஆவியையோ அல்லது அவற்றிற்கு 'எதிர்த்து நிற்கும் முரட்டாட்டமான ஆவியையோ குறிக்கும். அந்த ஆவி கிறிஸ்துவின் ஆளுகையில்லாத எல்லா மனித வர்க்கத்தினரிடமும் காணப்படும். இக்காலத்தில் சாத்தானானவன், இவ்வுலகத்தின் சிந்தனைகள், ஒழக்கவியல், தத்துவங்கள், மனோதத்துவம், ஆசைகள் ,ஆட்சிகள், கலாச்சாரங்கள், கல்வி அறிவியல், கலைநுட்பங்கள், மருத்துவம், இசை, பொருளாதார் கொள்கைகள் கலை நிகழ்ச்சிகள், மக்கள் தொடர்பு சாதனங்கள், மதங்கள், விளையாட்டுகள், விவசாயம் போன்ற அனைத்தையும் தன் வசப்படுத்தி அவற்றினைச் கொண்டு தேவனையும், அவருடைய பரிசுத்த நியமங்களையும், அவருடைய ஜனங்களையும், அவருடைய வார்த்தையையும் எதிர்த்து நிற்கிறான். (மத் 16:26,
1கொரி 2:12, 3:19; தீத் 2:12, 1 யோவா 2:15-16) உதாரணமாக, மருத்துவ முன்னேற்றத்தைப் பயன்படுத்திக் கருவில் உள்ள சிசுக்களை அழித்தும், விவசாயத்தின் மூலம் மது மற்றும் போதை வஸ்துக்களை உருவாக்கியும், கல்விதிட்டங்களைப் பயன்படுத்தி தேவ பக்தியற்ற மனித தத்துவங்களை முன்னேற செய்தும், பொழுது போக்கு சாதனங்களின் வழியாக பரிசுத்த குலைச்சலை உண்டுபண்ணியும் சாத்தானானவன் தேவனுக்கு விரோதமாய் எதிர்த்து நிற்கிறான். விசுவாசிகளாகிய நாம் இக்காலத்தில் அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான காரியம் என்னவெனில் நம்மை சுற்றி காணும் அனைத்து சம்பவங்களுக்கும்பின்பாக ஓர் ஆவி அல்லது வல்லமை தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் விரோதமாக சிறிய அளவிலோ சில சம்பவங்களில் பெரிய அளவிலோ செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இறுதியாக மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து மத அமைப்புகளும் மற்றும் வேதத்திற்குப் புறம்பான, உலகத்திற்கு ஒத்த குளிருமின்றி அனலுமின்றி இருக்கும்."கிறிஸ்தவ சபைகளும் ஸ்தாபனங்களும் கூட "உலகம்" என்ற வார்த்தையில் உள்ளடங்கியுள்ளன.
(1) சாத்தான் (மத் 4:10 ன்படி சாத்தான் தற்போதுள்ள உலக அமைப்பின் தேவனாயிருக்கிறான்(யோவா 12:31; 14:30, 16:11, 2 கொரி 4:4, 1யோவா 5:19). தனக்குக் கீழ்ப்பட்ட பொல்லாத ஆவிகளின் சேனையோடு அவன் அதைக் கட்டுப்படுத்துகிறான் (தானி 10:13; லூக் 4:5-7; எபே 6:12-13;
(2) சாத்தான் உலகத்தை தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் விரோதமாக உள்ளுர பகையை உண்டு பண்ணுகிறான். (யோவா 7:7; 15:18; யாக் 4:4; 1யோவா 2:16,18) அதன் பொல்லாப்பை வெளிப்படுத்தக்கூடிய அவருடைய சத்தியத்திற்கு கீழ்ப்படிய மறுக்கத் தூண்டுகிறான். அதற்கேற்றபடி உலகத்தின் (யோவா 7.7) அரசியல், கலாச்சாரம், பொருளாதாரம், சமய அமைப்புகள் ஆகியவற்றை நிறுவியுள்ளான்.
(3) உலகமும், பெய்யான திருச்சபையும் இரண்டு வித்தியாசமான மக்கட் குழுக்களைக் கொண்டுள்ளன. உலகம் சாத்தானின் அதிகாரத்தின் கீழ் உள்ளது (யோவா 10:1), திருச்சபை தேவனுக்கு மாத்திரம் சொந்தமானது (எபே 5:23-24 வெளி 21:2;)இவ்வாறாக, விசுவாசிகள் இந்த உலகத்திலிருந்து தங்களைம் பிரித்துக் கொள்ள வேண்டும்.
4) இந்த உலகத்தில் விசுவாசிகள் அந்நீரும் பரதேசிகளுமாயிருக்கிறார்கள் (எபி 11:13; 1பேது 2:11;).
அ) அவர்கள் உலகத்தை விட்டு பிரிந்து தனியே வர வேண்டும். (யோவா 15.19)உலகத்தோடு ஒத்துப் போகாமல்,
(ரோம 12.2 ) உலகத்தில் அன்பு கூரரமல் (1யோவா 2:15), உலகத்தை மேற்கொண்டு (1யோவா 5:4), உலகத்திலுள்ள தீமையை வெறுத்து. (எபி1:9;). உலகத்துக்கு மரித்து (கலா 6:14) உலகத்திலிருந்து விடுதலையடைந்து (கொலோ :13-14) உலகத்திலிருந்து வெளியே (யோவா 15:19) வரவேண்டும்.
(ஆ) உலகத்தில் அன்பு கூறுவது
(1 யோவா 2:15) தேவனோடுள்ள நம் ஐக்கியத்தைக் கெடுத்து ஆவிக்குரிய அழிவுக்குள் வழி நடத்துகிறது. உலகத்தையும் அதே நேரம் பிதாவையும் நேசிக்க முடியாது (மத் 6:26 15:13; யாக் 4.4;) உலகத்தில் அன்பு கூருவது என்பது அதனோடு நெருங்கிய ஐக்கியம் கொண்டு அதன் மதிப்புகள், விருப்பங்கள், வழிகள் இன்பங்கள் ஆகியவற்றில் பற்றுதலாயிருப்பதாகும். அதன் பொருள் என்னவென்றால் தேவனுக்குப்பகையாய் அவர் வெறுக்கும் காரியங்களில் இன்பம் கொண்டு அவற்றை அனுபவிப்பதாகும். (லூக் 23:35 ;)"உலகம்"! " பூமி" என்ற சொற்கள் அதே அர்த்தம் கொண்டவை அல்ல என்பதைக் கவனிக்கவும், உண்டாக்கப்பட்ட பூமியின் மேலுள்ள ஒரு அன்பை தேவன் தடுப்பதில்லை, அதாவது இயற்கை, மலைகள் ,காடுகள் ,போன்றவை .
(5)1யோவா 2:16;ன்படி
பாவ உலகத்தின் மூன்று காரியங்கள் தேவனிடம் பகையை உண்டு பண்ணுகின்றன.
(அ) "பாவ மனிதனின் ஆசைகள்"
அசுத்தபான ஆசைகள், பாவ இன்பங்களில் தொடர்வது, மரம்ச இச்சைகள் ஆகியவை இதில் அடங்கும் (1கொரி 6:18 ;பிலி 3:19;யாக் 1:14; )
ஆ) கண்களின் இச்சை" இது பாவ இன்பங்களைக் கொடுக்கிறவைகளைப் பார்ப்பதற்கான ஆசை உட்பட கண்களுக்குக் கவர்ச்சியான, ஆனால் தேவனால் தடைசெய்யப்பட்ட காரியங்களில் மோகம் வைத்து இச்சிப்பதைக் குறிப்பதாகும் (யாத் 20:17 ;ரோம 7:7) தற்போதுள்ள நவீன காலத்தில் மேடையில், தொலைக்காட்சியில் அல்லது சினிமாக்களில் அல்லது பத்திரிகைகளில் காண்பிக்கப்படும் ஆபாச காட்சிகள், வன்முறை, தேவபத்தியற்ற தன்மை, விபச்சாரம் ஆகியவற்றைப் பார்த்துத் தன்னை மகிழ்வூட்டும் ஆசைகள் இதில் அடங்கும்(ஆதி 3:6 ;யோசு7:21 ;2சாமு 11: 2;மத் 5:28).-
(இ) "ஜீவனத்தின் பெருமைகள்" தேவனை ஆண்டவராகவோ அல்லது அவருடைய வார்த்தையை மேலான கடைசி அதிகாரமுள்ளதாகவோ
அங்கீகரிக்காமல் இருக்கும் பெருமையின் ஆவி தன்னிறைவுள்ள சுதந்திரம் நாடும் ஆவி ஆகியவை இதில் அடங்கும். இது வாழ்க்மையின் மையமாக தன்னை உயிர்த்தி.
தன்னையே மகிமைப்படுத்தி முன்னேற நாடும் ஆவியாகும் (யாக்-416)
(6) விவாசிகள் இந்த உங்கத்தின் பொல்லாங்கான காரியங்களில் பங்கு கொள்வோரிடம் நெருங்கிய ஐக்கியம் கொள்ளாமல் (மத் 9:11 மற்றும் 2 கொரி6:14 )அவர்களின் பாவத்தைப் பகிரங்கமாக கண்டித்து (யோவா 7:7 எபேசி 5:11) அவர்களுக்கு வெளிச்சமாகவும் உப்பாகவும் இருந்து (மத் 5:13,14)அவர்கரில் அன்புகூர்ந்து (யோவான் 3.16)
அவனை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்த முயற்சிக்க வேண்டும் (மாற்16:15 யூதா 22:23)
(7) உண்மை கிறிஸ்தவன் உலகத்திலிருந்து துன்பம் (யோவா 16:2-3), வெறுப்பு (யோவா 15:19), உபத்திரவம் (மத் 5:10-12) தேவனை (ரோம 8:22-23 1பேதுரு 2:19-21) ஆகியவற்றை அனுபவிப்பான். உலகத்தின் கவர்ச்சிகளைப் பயன்படுத்தி சாத்தான் கிறிஸ்தவனிலுள்ள தேவனுடைய ஜீவனை அழிக்கும்படி தொடர்ந்து முயற்சி செய்வான் (2 கொரி 11:3 1பேது 5:8).
(இன்றைக்கு ஊழியர்களின் பிரசங்க மேடை கவர்ச்சிகளை ஆடம்பரங்களை கவனித்து பாருங்கள்.)
(8) இந்த உலகத்தின் முறை தற்காலிகமானது. அது தேவனால் அழிக்கப்படும் (தானி 2:34-35,44; 1 கொரி 7:31; 2 தெச 1:7-10; 2 பேது 3:10) வெளி 18:2) இப்போதுங்கூட அது கடந்து போகிறது (1 யோவா 2:17).
ஒவ்வொரு கிறிஸ்துவ விசுவாசிகளும் நிச்சயமாக வேதத்தை அதிகமாக வாசித்து நீங்கள் தெளிவுபட வேண்டும் அதுதான் கர்த்தருடைய சித்தம். நம்மை வசப்படுத்த நினைக்கும் பேச்சுக்கள், பிரசங்கங்கள், கவர்ச்சியான காரியங்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்காமல், நிதானித்து செயல்படுவோம் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை பலமாக இருக்கும்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்:சிலுவை ராஜா
தொடர்புக்கு: 9841711591.
Comments