ஓய்வு நாள்

 (405) உயர்ந்த முத்துக்கள்.

ஓய்வு நாள், வார ஓய்வு நாள். 


வார ஓய்வுநாள்.(கிரேக்க மொழியில் 'சபாற்றன்'இதன் பொருள், "ஓய்வு", கிரியைகளை நிறுத்துதல் என்பதாகும். வாரத்தின் ஏழாவது நாள், மோசேயின் சட்டத்தின்படி சாதாரண வேலைகள் அனைத்தையும் நிறுத்தி, அனைவருக்கும் ஓய்வு கொடுக்கும் நாள். அந்த நாளில் அனைவரும் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ள வேண்டும். (யாத் 20:10;உபா 5:14;யாத் 20:8)
ஓய்வு நாள் பற்றிய கொள்கைகள் அனைத்தும் கிறிஸ்தவர்களுக்கு நிரந்தரமாக பின்பற்றத்தக்கவை. எனவே வாரத்தில் ஒரு நாளை இதற்கென்று தனியாகப் பிரத்தியோகப் படுத்தி அன்று அனைவரும் ஓய்வு எடுக்கவும் ஆண்டவரை தொழுது கொள்ளவும் வேண்டும் என்பதற்கு உறுதியான காரணங்கள் உள்ளன. 

1) யூதர்களுடைய சட்டத்திற்கு முன்னரே "தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்".
(ஆதி 2:3;யாத் 20:11)
படைப்புக் காலநாட்களில் தேவன் ஏழு நாட்களில் ஒரு நாள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதத்தின் ஊற்றான ஒரு நாளாகவும், யூத இனத்திற்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் அது ஓய்வு நாளாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். 

2) இயேசு கிறிஸ்து ஒருபோதும் ஓய்வு நாளின் ஓய்வு எடுக்கும் கொள்கையை ரத்து செய்து நீக்கிவிடவில்லை. யூதத் தலைவர்கள் ஓய்வு நாளைத் தவறாகப் பயன்படுத்தியதைத்தான் கண்டித்தார்.
(மத் 12:1-8;லூக் 13:10-17;14:1-6).
ஓய்வு நாள் ஒவ்வொருவருடைய உடல் நலத்துக்கும் ஆவிக்குரிய நலத்துக்கும் தரப்பட்டுள்ளது. (மாற் 2:27)
இந்த கற்பனை விலக்கப்பட்டதாக, வேதாகமத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை.

3) ஏழாம் நாள் ஓய்வு கிறிஸ்தவர்களுக்கு ஆவிக்குரிய காரியங்களில் அதிக நன்மை பயக்கின்றது. பழைய ஏற்பாட்டில் இது ஓய்வாக இருக்கும் ஒரு நாளாகவும், பயன்படுத்தப்பட்டது. அதாவது அந்நாளைத் தேவனைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ளவும், அவரைத் தொழுது கொள்ளவும், தனியாகவும் வெளிப்படையாகக் கூட்டமாகவும், தேவனுடைய காரியங்களில் கவனம் செலுத்தவும் பயன்படுத்தினார்கள். 
(லேவி 24:8; எண் 28:9).
இன்று இது நமது நம்பிக்கையையும் சந்தோசமும் நமது ஆண்டவர் பேரிலேயே உள்ளது, இந்த உலகத்தின் மீதோ நமது சுயநலம் சொந்த வழிகள் மீதோ, உலகப் பிரகாரமான ஆஸ்திகள், ஐசுவரியங்கள், நமது உலக இன்பங்கள் மீதோ இல்லை என்பதை மீண்டும் உறுதிசெய்யும் வாய்ப்பை நமக்குத் தருகிறது.
(யாத் 20:10;34:21;ஏசா38:13) 
நாம் இந்த நாளை இயேசு கிறிஸ்துவுடன் நமது ஆரம்ப அர்பணிப்பை புதுப்பித்துக் கொள்ளவும், மற்ற விசுவாசிகளோடு நமது ஐக்கியத்தை உறுதிப்படுத்தவும், எழில் பங்கு மட்டுமல்ல நமது வாழ்க்கை முழுவதுமே தேவனுக்குச் சொந்தம் என்று காட்டவும் இது உதவுகிறது.
(எபி 4:9,10).

4) ஓய்வு நாள் இஸ்ரவேலர் அனைவரும் தேவனுடைய மக்கள் என்று காட்டுகிற ஒரு உடன்படிக்கையின் அம்சமாக, அடையாளமாக உள்ளது. 
(யாத் 31:16,17).
எனவே கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தினமான ஓய்வு நாள் (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவினுடையவர்கள் என்றும், கிறிஸ்து நமது ஆண்டவர் என்றும் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு அடையாளமாக உள்ளது.
புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள் வாரத்தின் முதல் நாளை தேவனைத் தொழுது கொள்வதற்காகவும் தெரிந்து கொண்டார்கள்.
 (அப் 20:7; 1கொரி 16:2)

5) ஓய்வு நாள் ஒரு பரிசுத்த நாளாயிருக்க வேண்டும் என்று தேவன் அதை ஒதுக்கினார். 
(ஆதி 2:3; யாத் 16:23;20:11;31:14; ஏசா 58:13)
இவ்விதமாக விசுவாசிகள் ஏழு நாட்களில் ஒரு நாளைப் பரிசுத்த நாளாக ஆசரித்து வருகிறார்கள். அவர்கள் தங்களையும் தேவன் இவ்வுலகத்திலுள்ள கெட்டுப்போன ஒரு தலைமுறையினர் மத்தியில் விசேஷித்தவர்களாக, பரிசுத்தமாக வாழ்க்கை வாழ்வதற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவர்களாக வைத்திருக்கிறார் என்பதை நினைவு கூற வேண்டும். 
(யாத் 31:13; 1பேது 2:9).

6) கடைசியாக ஓய்வு நாளானது தேவன் தம்மைத் தம் விசுவாசிகளுக்கென்று அர்ப்பணித்த நாளாகவும் இருக்கிறது. அவர் தம் மக்களுக்கான தமது சித்தத்தைச் செய்து நிறைவேற்றவும், அவர் எப்பொழுதும் தமது விசுவாசிகளின் கூப்பிடுதலுக்குச் செவி கொடுத்து, அவர்கள் தேவைகளைச் சந்திக்கும்படியாக, அவர்களுக்காகக் காத்திருக்கிறார். அவர்களுடைய ஜெபங்களையும், விண்ணப்பங்களையும், மன்றாட்டுகளையும் கேட்கவும், அவருடைய விருப்பத்தின்படி செயல்படவும் காத்திருக்கிறார். 
(யாத் 31:13; எசேக் 20:12).
என்பதை அறிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஓய்வு நாளை கனப்படுத்துங்கள். 
இந்த நாளை நமக்காக ஒதுக்கி வைத்து நமக்காக காத்திருக்கிறார். எனவே சபை கூடி வருவதை சிலர் விட்டு விடுவது போல நீங்கள் விட்டு விடாதீர்கள். 
சபைகளுக்கு போக விடாதபடிக்கு சில கள்ள போதகர்கள் மீடியாவிலே உங்களை அழைக்கிறார்கள். 
கவன தேவை 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை