உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன 4
(409) உயர்ந்த முத்துக்கள்.
உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன ?
கடந்த நாட்களில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் மீட்கப்பட்டுள்ளோம். என்று, மூன்று விதமான முறையில் நாம் கழுவப்படுவதையும் அல்லது சுத்திகரிக்கப்படுவதையும், மாத்திரமல்ல இயேசு கிறிஸ்துவின் இரத்தம், பூமியில் அல்ல, சீயோனில் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம் மேல் தெளிவுபடுத்தப்படும் என்பதை நாம் தொடர்ந்து சிந்தித்து வருகிறோம்.
ஆகையால் பரிசுத்த வேதம் சொல்கிறது.
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது;
(வெளிப் 14:13)
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலில் எழுந்தார்கள்.
பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
(1 தெசலோ 4:16-17)
இயேசு கிறிஸ்து யாருக்காக வருவார் ?
கிறிஸ்துவும் ........ தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்(எபிரெ 9:28).
உதாரணமாக,
யோவான் 11:1-45இல், லாசர் வியாதியாக இருந்து இறந்து, நான்கு நாள் கழித்து இயேசு கிறிஸ்து மூலமாக உயிரோடு எழுப்பப்பட்டதைக் காண்கிறோம்.
இங்கே லாசர், இயேசு கிறிஸ்துவின் சிநேகிதனென்றும், அவன் வியாதியாயிருக்கிறான் என்று இயேசு கிறிஸ்துவுக்கு ஆள் அனுப்பப்பட்டது.
லாசர், இயேசு கிறிஸ்துவை நன்றாக அறிந்திருக்க வேண்டும். அவர் செய்த அற்புத அடையாளங்கள் அனைத்தையும் கண்டு, அவரை விசுவாசித்திருக்க வேண்டும். அதனால் இயேசு கிறிஸ்து அவனை அதிகமாக சிநேகித்திருக்க வேண்டும். என்று நான் உணர்ந்தேன்.
உடன் பிறந்த இரு சகோதரிகளும் அவனுக்கு ஆறுதல் இப்படி சொல்லி இருப்பார்கள். தம்பி கவலைப்படாதே, இயேசு கிறிஸ்துவுக்கு நீ வியாதி பட்டதைச் சொல்லி அனுப்பி இருக்கிறோம், சீக்கிரமாய் அவர் வருவார் என்று அவனுக்கு நம்பிக்கையூட்டியிருப்பார்கள். அவன் அதை நம்பியே இயேசு வருவார் அவர் என்னை குணமாக்குவார் என்று நம்பியே இறந்து போனான்.
அவன் மரிக்கும் தருவாயில் இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்தே அல்லது எதிர்பார்த்தே மரித்தான். காத்திருந்து மரித்தவனுக்காக இயேசு கிறிஸ்து வந்தார்.
(யோவா 11:24-26) அவனை உயிரோடு எழுப்பினார்.
(யோவான் 11:43-44).
கிறிஸ்துவுக்குள் மறுபிறப்பு அடைந்து, கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து, கிறிஸ்துவுக்குள் மரணித்து, அவருக்காகவே காத்திருக்கிறவர்களுக்காக இயேசு கிறிஸ்து சீக்கிரம் வருவார்.
எனவே கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்.
நம்மிடம் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நமது பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய எங்கள் தேவனுக்குமுன்பாக எங்கள் ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடுகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
(வெளிப் 1:6; 5:10; 20:6)
சீயோனில் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக....
1) இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிவுபடுத்தப்படுதல்.
2) ஆசாரியத்துவம்
3) ராஜாக்களாக...
4) புது பாட்டை பாடி கர்த்தரை மகிமைப்படுத்துதல்.
5) இரண்டாம் மரணம் இல்லை
6) அவரோடு கூட என்றென்றும்
7) அவரோடு கூட ஆளுகை செய்வோம் ஆயிரம் வருடம்.
இன்னும் பல ஆச்சரியமான தகவல்கள் உள்ளன.
சிலர் பூமியிலே நாங்கள் ஆசாரியர்கள், ராஜாக்கள் என்று சொல்வதும் பாடுவதும் நல்லது தான், ஆனால், முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்கு பெற்றால் மாத்திரமே இது சாத்தியமாகும்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவை ராஜா.
Comments