ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ..
*(403) ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ...!..?*
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
(1 யோவா 4:1)
ஒவ்வொரு ஆவியையும் சோதித்தறிய வேண்டிய காரணம் (அதாவது ஒரு மனிதன் ஒரு ஆவியினால் அசைக்கப்பட்டிருப்பது அல்லது தூண்டுதல் பெற்றிருப்பது) அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் திருச்சபைக்குள் நுழைந்திருப்பதே. இது முக்கியமான உண்மை, எப்படியென்றால் பரிசுத்த வேதாகமத்திற்குப் புறம்பான உபதேசத்தை சகித்துக் கொள்வது கடைசி காலத்தில் அதிகரிக்கிறது.
(மத் 24:11; 1தீமோ 4:1; 2தீமோ:4:3-4; 2பேதுரு 2:1-2) ஐ வாசித்துப் பாருங்கள். *தங்களைக் கிறிஸ்துவ சுவிசேஷகர்கள், போதகர்கள், எழுத்தாளர்கள், பிரசங்கிகள், தீர்க்கதரிசிகள் என்று அறிக்கையிடும் எல்லாரையும், தனிப்பட்ட நபர் யாரும் அவனுடைய அல்லது அவளுடைய வேலை அல்லது செய்தி பரிசுத்த ஆவியினால் வருகிறது என்று உரிமை கோருபவரையும், சோதித்தறிய கிறிஸ்தவர்கள் கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள்.*
ஒரு ஊழியம் அல்லது ஆவிக்குரிய அனுபவம் தேவனிடமிருந்து வந்தது என்று ஒருவர் கூறுவதால் மாத்திரம் விசுவாசிகள் அதை ஒருபோதும் நம்பிவிடக் கூடாது. மேலும் எந்த போதனையோ அல்லது உபதேசமோ அதன் வெற்றி, அற்புதங்கள் அல்லது அபிஷேகம் பண்ணப்பட்டது போல் காணப்படுவதை வைத்து ஏற்றுக்கொள்ள படக்கூடாது.
(மத் 7:22; 1கொரி 14:29; 2தெச 2:8-10; 2யோவா 7; வெளி 13:4; 16:14; 19:20).
1) வேத வாக்கியங்களிலுள்ள தேவனுடைய சத்தியங்களைப் பற்றிய வெளிப்பாடுகளோடு ஒப்பிட்டு எல்லா போதனைகளும் சோதிக்கப்பட வேண்டும்.
(கலா 1:9) அறியாமை உள்ளவர்கள் போல ஆமென் போடக்கூடாது.
2) எந்த ஆவியோடு போதிக்கப்படுகிறது என்பது சோதித்தறியப்பட வேண்டும், புதிய ஏற்பாட்டு, அப்போஸ்தல போதனையைப் போல் அதே விதமான ஆவியோடும், வற்புறுத்தலோடும் போதிக்கப்படுகிறதா ?
பரிசுத்த வேதாகமத்தின் ஆரோக்கியமான விளக்கங்களால் ஆதரிக்கப்படாத எந்த போதனையும் பரிசுத்தாவியினிடமிருந்தோ அல்லது தேவ தூதனிடமிருந்தோ பெற்றுக் கொள்ளப்பட்டது என்று ஒருவரால் கூறப்பட்டால் எச்சரிக்கையாயிருங்கள்.
3) போதிக்கிறவர்களின் வாழ்க்கைகளில், தேவனற்ற உலகத்தோடுள்ள அவர்களுடைய உறவு எப்படி உள்ளது என்பதும் (1யோவா 4:5)யோடு ஆராய்ந்து கிறிஸ்துவின் ஆளுகைக்குள் அவர்கள் உறவு எப்படியுள்ளது என்பதும் சோதிக்கப்பட வேண்டும்.(1யோவா 4:2,6; ரோம 10:9)
எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்புவது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல
எல்லாவற்றையும் சோதித்து நலமானவை பிடித்து கர்த்தரை மகிமைப்படுத்துவது தான் தெய்வீக வாழ்க்கையாகும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 24:11 இல்,
சொன்னது போல இவர்கள் ஆத்மாக்களை திருடுகிறவர்கள், சமீபத்தில் நமது தேசத்தில் தேர்தல் அதிகாரிகள் மூலமாக ஓட்டு ஊழல் நடைபெற்றது போல இவர்களுடைய வஞ்சகத்தால் திருச்சபையிலுள்ள ஆத்துமாக்கள் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவப்பிள்ளைகள் எச்சரிக்கையாக இருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவை ராஜா
தொடர்புக்கு 9841711591.
Comments