உயிர்த்தெழுதலுக்கு முன்னும் பின்னும் நடப்பது என்ன?

 (410) உயர்ந்த முத்துக்கள். 

உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன ?

சீயோனில் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக கிறிஸ்துவின் ரத்தம் தெளிக்கப்பட்டு நாம் ஆசாரியர்களாக, ராஜாக்களாக ஆயிரம் வருடம் கிறிஸ்துவோடு கூட ஆளுகை செய்வோம் என்பதை குறித்து பார்த்தோம்.
ஆசாரியத்துவ ஊழியத்தை மூன்று காலங்களாக, அதாவது கடந்த(இறந்த) காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகும்.

1) கடந்த காலம்.
பழைய உடன்படிக்கையின் கீழ் உள்ள ஆசாரியர்கள் (யூத மத குருமார்கள்) 10 கட்டளைகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டது, ஆசரிப்புக்கூடாரத்திலும், பின்னர் கோவிலிலும் பலி செலுத்துதல், ஆராதனை நடத்துதல், மற்றும் உடன்படிக்கைப் பெட்டியைப் பாதுகாத்தல் போன்ற கடமைகளைச் செய்தல் வேண்டியிருந்தது. அவர்கள் மக்களுக்கு கடவுளின் சட்டத்தை எடுத்துரைத்து, அவர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் விதமாக பலரின் மூலம் பாவமன்னிப்பு பெற வேண்டும். 
ஆசாரியர்களின் முக்கிய கடமைகளாகும்:
பலி செலுத்துதல்: பழைய ஏற்பாட்டின்படி, மக்களுக்குப் பாவமன்னிப்பு கிடைக்க பலியிடும் கடமை ஆசாரியர்களுக்கு இருந்தது. மிருகங்களைப் பலி செலுத்துவது, மக்களை தேவனாகிய கர்த்தரிடம் நெருக்கமாகக் கொண்டுவந்தது. 
ஆராதனை: ஆசாரிகள் மக்களைக் கடவுளாகிய கர்த்தரிடம் கொண்டு செல்லவும், அவருடன் உறவுகொள்ளவும் உதவும் வகையில் பல கடமைகளைச் செய்ய வேண்டியிருந்தது. 
சட்டங்களை விளக்குதல்: மக்களுக்கு கடவுளின் சட்டங்களைப் புரிந்துகொள்ளும் வகையில் கற்பித்தல், மற்றும் சட்டத்தை மீறினால் அதற்கான தீர்ப்புகள் வழங்குதல் போன்ற பணிகளும் அவர்களுக்கு இருந்தன. 
உடன்படிக்கைப் பெட்டியைப் பாதுகாத்தல்: உடன்படிக்கைப் பெட்டியைப் பாதுகாப்பாக வைத்திருப்பது, கடவுளின் சட்டங்களை நினைவுபடுத்தும் ஒரு வழியாக இருந்தது. 
பரிசுத்த இடங்களைப் பாதுகாத்தல்: ஆசாரியர்கள் பரிசுத்தமான இடங்களுக்குள் நுழைந்து தேவனாகிய கர்த்தரை ஆராதிப்பது, மக்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதையும், பரிசுத்தமான இடத்தில் தேவனுடைய பிரசன்னம் இருப்பதைக் குறித்தது. 
பழைய உடன்படிக்கையானது, கடமையையும் சட்டத்தையும் வலியுறுத்தியது. 
இந்த ஊழியத்தை பரிசுத்த ஆவியானவர், அப்போஸ்தலன் பவுல் மூலமாக,சொல்வதை கவனிக்க வேண்டும்.
எழுத்துக்களால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.
ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு மகிமையுள்ளதாயிருக்கும்?
ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.
அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
(2 கொரி 3:7-11)
மோசேயின் நியாயப்பிரமாணம் செய்ய முடியாததை கிறிஸ்துவின் பலி செய்து முடித்தது.
(எபிரேய 10:1-11)

2) நிகழ்காலம்.
ஆனால் புதிய உடன்படிக்கையானது, கிருபையையும், இயேசுகிறிஸ்துவின் இரட்சிப்பையும் வலியுறுத்துகிறது. கடந்த காலத்தில், தன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக பலி செலுத்துவதற்கு பலிக்கு உண்டான மிருகத்தை தன்னுடைய வீட்டிலிருந்து எடுத்துச் சென்று ஆசாரியன் மூலமாக பாவ நிவாரண பணி செலுத்த வேண்டும்.
ஆனால் புது உடன்படிக்கையில் நமது பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக, மீறுதலுக்காக, கிறிஸ்துவானவர் கல்வாரி சிலுவையில் பலியானார். என்ற செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்பட வேண்டும்.
(மத் 28:19,20) அதை அறிவிக்கிறவர்கள் தான் புது உடன்படிக்கையின் ஆசாரியர்கள்.
(ரோமர் 15:15; 1பேதுரு 2:9)

3) எதிர்காலம்.

பரிசுத்த ஆவியானவர் மூலமாக அப்போஸ்தலர் பேதுரு மூலமாக சொல்லப்படுவதை கவனிக்கவும். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
ஜீவனுள்ளும் கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். அந்தப்படியே: இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலிகைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்;
(1 பேதுரு 2:4-6)
இது சீயோனில் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்பட்டு, ஆசாரியர்களாக, ராஜாக்களாக, பாடகர்களாக, கிறிஸ்துவோடு ஆளுகை செய்யக்கூடியவர்களாக யார் இருப்பார்கள் ?.
முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவர்கள் மாத்திரமே இந்த பாக்கியத்தை அடைவார்கள். இவர்கள் தேவனால் தெரிந்து கொள்ள பட்டவர்கள்.

இந்த பூமியில் தேவனால் தெரிந்து கொள்ளப்படாதவர்கள், தேவனால் அறியப்படாதவர்களும், ஊழியம் செய்கிறார்கள். பிசாசுகளை துரத்துகிறார்கள். நோய்களை குணமாக்குகிறார்கள். தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள். சுவிசேஷத்தை அறிவிக்கிறார்கள். அபிஷேக கூட்டத்தை நடத்துகிறார்கள். குடும்ப முகாம் நடத்துகிறார்கள். அப்போஸ்தல ஊழியத்தை செய்து வருகிறார்கள். இவர்களைப் பற்றி ஆண்டவர் சொல்லுகிற வார்த்தைகளை கவனித்து பார்க்க வேண்டும்.
(மத் 7:22-23; கலா 1:7; 2கொரி 11:13,-15; 2தீமே 3:5;வெளி 2:2;) குழந்தைகளின் அற்புத அடையாளங்களை கண்டு ஏமாந்து விடாதீர்கள்.
இவர்களுடைய பிரதான நோக்கம்
 பண ஆசை, மற்றும் 
பூமியில் தம்முடைய ராஜ்ஜியம்.
ஆகையால், தேவனுடைய பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்கு உள்ளவர்களாக தங்கள் வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து வாழ்வதற்கு முயற்சி செய்வோம். தேவனுடைய ஆயிரம் வருட அரசாட்சியில் மாத்திரமல்ல அவரோடு நித்தியம் நித்தியமாக ஆசாரியர்களாக ராஜாக்களாக நாம் வாழுவோம்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவை ராஜா.












Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை