Posts

புது சிருஷ்டி

*புது சிருஷ்டி* இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).   ஒரு வயதான மனிதருக்கு, ஒரு பழைய வீடு ஒன்று இருந்தது. அதை விற்கக் கேட்டு சிலர் அவரை அணுகினார்கள். அந்த மனிதரும் சந்தோஷமாய் அதை விற்க ஒப்புக் கொண்டு, அவர்கள் கேட்ட பணத்திற்கு விற்க ஒத்துக் கொண்டார். பிறகு, அந்த வீட்டிற்கு வெளியே பெயின்ட் அடித்து, மேலே கூரையை திரும்ப சரியாக்கி, அந்த வீட்டைக் கொடுக்கும்போது அழகாக கொடுக்க வேண்டும் என்று, வீட்டின் முன்னால் இரண்டு மரங்களையும் நட்டார். அதை வாங்கியவர்கள் இந்த வீட்டை வாங்கியதற்காக பெருமைப்பட வேண்டும் என்று அவற்றை செய்து முடித்து, அதை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் அந்த வீட்டை வாங்கியவர்கள், ஒரு புல்டோசரைக் கொண்டு வந்து அந்த வீட்டை இடிக்கத் தொடங்கினார்கள். அதைக் கண்ட அந்த வயதான மனிதன், பதறிப் போய், ‘ஏன் இடிக்கிறீர்கள்?’ என்றுக் கேட்டார். அதற்கு அந்த வீட்டை வாங்கியவர்கள், ‘ஐயா, எங்களுக்கு ஒட்டுப் போடப்பட்ட இந்த பழைய வீடு வேண்டாம், இந்த இடத்தில், வானளாவும் கட்டிடம் கட்டப் போகிறோ...

ஆசிர்வாதத்தின் தேவன்

ஆசீர்வாதத்தின் தேவன் * என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். - (மல்கியா 3:10). உபா 28:1,2,3 வசனத்திற்கு கீழ்ப்படியும் போதும் ஆசீர்வாதம். ஹென்றி பி. கிரோவெல் (Henry P. Crowell ) என்பவர், ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், அவரது சிறு வயதில் காசநோயினால் பாதிக்கப்பட்டார். அதினால் அவர் பள்ளியை விட வேண்டி இருந்தது. அவர் ஒரு நாள், டி.எல் மூடி பிரசங்கியாரின் செய்தியை கேட்க நேர்ந்தது. அப்போது அவர் தீர்மானித்தார், ‘என்னால் பிரசங்கிக்க முடியாது. ஆனால் சிறந்த தொழிலதிபராக முடியும், ஆண்டவரே, உமக்கு சித்தமாயிருந்தால், நான் ஆரம்பிக்கும் தொழிலில் நல்ல லாபம் அடைய உதவி செய்யும், நான் அதிலிருந்து உமக்கு உண்மையாக உம்முடைய ஊழியத்தை தாங்குவேன்' என்று பொருத்தனை செய்தார். வைத்தியர்களின் ஆலோசனைப்படி, அவர் இருந்த இடத்தை விட்டு வெளியே ஏழு வருடங்கள...

அழியாத ராஜ்ஜியம்

*அழியாத ராஜ்ஜியம்* நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். - (நீதி. 14:13.) தாவீது ராஜாவைப்பற்றியும், சாலமோன் ராஜாவைப்பற்றியும், அநேக சுவாரஸ்யமான கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒரு நாள் தாவீது ராஜா ஒரு கனவுக் கண்டாராம். அதில் ஒரு மோதிரத்தைக் கண்டார். அதை அணிந்தவுடன், அது, துக்கமுள்ள மனுஷனை மகிழ்ச்சியுள்ளவனாக்கவும், மகிழ்ச்சியுள்ள மனிதனை துக்கமுள்ளவனாக்கவும் மாற்றிற்று.   அடுத்த நாள் தூங்கி எழுந்தவுடன், அரண்மனையின் நகை செய்பவரை அழைத்து, அதே மாதிரி ஒரு மோதிரத்தை செய்யச் சொல்லி கட்டளையிட்டார். தன்னுடைய வாழ்க்கையின் நெருக்கமான நேரங்களில், அதை அணிந்து, சமாதானம் அடையப் போவதாகக் கூறி சீக்கிரமாய் அதைச் செய்யச்சொல்லி கட்டளையிட்டார்.   அதைக் கேட்டு அந்த நகை செய்பவர், தன்னால் எப்படி அந்த மாதிரி மோதிரத்தை செய்ய முடியும்? என்று கலங்கியவராக, தன் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வழியில் இளவரசன் சாலமோனைக் கண்டார். சாலமோனும் அவரைக் கண்டு, 'ஏன் இப்படி, கவலையோடு போய்க் கொண்டிருக்கிறீர்' என்றுக் கேட்டார். தட்டான் நடந்ததைக் கூறியவுடன், 'இதற்குப...

மாயை பாராதே

மாயை பாராதபடிக்கு நீர் என் கண்களை விலக்கி உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்*  (சங்கீதம் 119:37) -------------------------------------------------------- மேற்கண்ட வார்த்தைகள் சங்கீதக்காரனின் உள்ளம் கனிந்த ஜெபத்தின் வார்த்தைகள் ஆகும். மகா ஞானியான ஆகூர் என்பவர் "மாயை எனக்கு தூரப்படுத்தும்" (நீதி 30:8) என்று உள்ளமுருகி மன்றாடினார். அந்த தேவ பக்தர்களின் ஆசையும், ஆவலும், தாகமுமே நம்முடைய ஏக்கமும், வாஞ்சையுமாக இருக்கட்டும். உலகத்தில் மாயையை பற்றி கொண்டு அதை பின் தொடர்பவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு கொடிய ஆபத்தை குறித்து யோனா தீர்க்கன் "வீணான மாயை பற்றிக் கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையை போக்கடிக்கிறார்கள்,  (யோனா 2:8) எத்தனை பரிதாபகரமான காரியம் பாருங்கள் ! கர்த்தர் நமக்கு அளிக்கக்கூடிய மேலான கிருபைகளை நாம் போக்கடித்தால் நம்முடைய நிலை என்னவாகும் ! ஷணப்பொழுதில் நாம் அதமாகி போய் விடுவோம் அல்லவா ? உலகம் அளிக்கக்கூடிய மண், பெண், பொன் போன்ற நிலையற்ற மாயையை நாம் நாடித் தேடி அவற்றில் நம்முடைய பற்று, பாசத்தை வைப்போமானால் தேவன் நமக்கு அளிக்க காத்திருக்கும் பரலோக கிருபைகளை மாத்திரம் ...

முடிவு பரியந்தம் நிலைத்திரு

*முடிவுபரியந்தம் நிலைத்திரு*,  முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். - (மத்தேயு 10:22). இந்த கடும் கோடை காலத்தில் மரங்களிலிருந்து இலைகளெல்லாம் உதிர்ந்து விழுவதை பார்க்கிறோம். வெயிலின் கொடுமை தாங்காமல் இலைகளெல்லாம் காய்ந்து கீழே விழுகின்றன என்றே நாம் நினைப்போம். உண்மை என்னவென்றால் மரங்களில் அவைகள் மூலமாகவே ஆவியாகுதல் நடைபெறுகிறது. அதாவது மரம் தன்னிலுள்ள தண்ணீரை இலையிலுள்ள துளைகள் வழியாகவே ஆவியாக்குகிறது. வெயில் காலத்தில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே இருக்கும். ஆகவே வேருக்கு கிடைக்கும் நீரும் குறைந்து விடுகிறது. இந்த சூழ்நிலையிலும் மரம் தன் உயிரை காத்து கொள்ள வேண்டும். ஆகவே, இலைகள் இருந்தால் தன் வேரிலுள்ள நீர் ஆவியாகி கொண்டே இருக்கும். அதனால் தன் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று தன் இலைகளனைத்தையும் உதிர்த்து விடுகிறது. கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? தேவன் தாம் படைத்த ஒவ்வொன்றின் மூலமாகவும் நம்முடன் இடைபடுகிறார். வேதம் நமக்கு சொல்லுவதென்ன? முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். ஆம் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஓட்டத்தை துவக்குவது ஒரு அற்புதமான செயலே!...

இருப்பதுவோ ஒரே வாழ்வு

*இருப்பதுவோ ஒரு வாழ்வு* அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,.. - (எபிரேயர் 9:27).   காலை விடிந்து விட்டது. என்ன செய்தி இன்று புதிதாக? ம்ம்.. நான் அலுவலகத்திற்கு புறப்பட வேண்டும்... எங்கே எல்லாரும் போய்விட்டார்கள்? மணி எத்தனை ஆகிறது? ஓ! பத்து மணி ஆகப்போகிறது! நான் உடனே வேலைக்கு போயாக வேண்டுமே! இல்லாவிட்டால் அந்த பெரியது என்னை பார்த்து கத்துமே!  ஒரு நிமிடம்! நேற்று நான் படுக்க போனபோது, எனக்கு நெஞ்சு மிகவும் வலித்தது. அப்படியே நான் தூங்கி போனேன், அப்புறம் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லையே! எங்கே என் மனைவி போய்விட்டாள்? என் அறைக்கு வெளியே ஏதோ கூட்டமாய் நிற்கிறார்களே? என்ன விஷயம்? போய் எட்டி பார்த்தேன். ஐயோ, இது என்ன? நான் கீழே படுத்து கிடக்கிறேன்! என்னை சுற்றிலும் ஒரே கூட்டம்! சிலர் அழுகிறார்கள், சிலர் சோகமாய் இருக்கிறார்கள். 'நான் இங்கேதான் இருக்கிறேன்' என்று கத்துகிறேன். ஆனால் யாருக்கும் காதிலே விழவில்லை! 'நான் சாகவில்லை, என்னை பாருங்கள்' என்று மீண்டும் கத்தினேன். யாருமே அதை காதில் போட்டு கொள்ளவில்லை. ...

விசாலம் மற்றும் இடுக்கமான வழி

விசாலமான வழியும், இடுக்கமான வழியும்* இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். - (மத்தேயு 13-14). ஒரு புகழ்பெற்ற ஊழியர் தெருவில் நடந்து சென்று கொண்ருந்தபோது, ஒரு கூட்டமான பன்றிகள் ஒரு மனிதனை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. அவருக்கு ஆச்சரியம், எப்படி இந்த பன்றிகள் அந்த மனிதனை பின் தொடர்கின்றன என்று. என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காக அவரும் அந்த பன்றிகளின் பின்சென்றார். அவருடைய மிகப்பெரிய ஆச்சரியமாக அந்த பன்றிகள் அந்த மனிதனை பின்தொடர்ந்து, தங்களை கொல்லும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அவர் அந்த மனிதனை பார்த்து, 'எப்படி இந்த பன்றிகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த கொல்லும் இடத்திற்கு கொண்டு வந்தீர்கள்' என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன், 'இதோ என் கையிடுக்கில் அவரை கொட்டைகள் இருக்கின்றன. அவைகளை அவ்வப்போது கொஞ்சம் கீழே போடுவேன். அதை சாப்பிட தொடர்ந்து வந்த பன்றி கூட்டம் ...

கழுவப்பட்ட பன்றி

*கழுவப்பட்ட சில 🐷 பன்றிகள்.* (2 பேதுரு 2:22) ...... கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது. சில கிறிஸ்தவர்களுக்கு. சீனிகிழங்கை ருசி பார்த்த பன்னி செவி அறுத்தாலும் நிற்காது....... தாத்தாவுக்கு தோட்டம் உண்டு தோட்டம் சுற்றி வேலி உண்டு அவருக்கு அறிவு அதிகம் உண்டு எந்த பருவத்தில் எதை பயிறிட என்று.... அவருக்கு அது நன்று.... பருவம் ஒன்றில் சீனி கிழங்கை பயிரிட்டு.... அதற்கு நீர்விட்டு கொஞ்சம் நாளில் பச்சை பசுமையாக இலைதாள்கள் வளர அப்பப்பா பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சி.... அதுவும் மாலை ஐந்தாறு மணிக்கு மாலை தென்றல் மெதுவாக பறை அடிக்க அதின் இலைகள் அசைந்தாடும் காட்சி.... உள்ளத்தின் மாட்சி.... ஆஹா இந்த வருடம்.... மகசூல் அதிகம் கிடைக்கும் ன்னு காலையில மகிழ்ச்சியோடு போன தாத்தா... அதிர்ச்சியோடு நின்னாரு..... அவுன கயிறு பலத்தில் நிற்கும் பின்னால் ஓட்டையோடு நஞ்ச நூல்களோடு பட்டன் இல்லாத அரைக்கால் சட்டையோடு மேல் சட்டை இல்லாமல் செம்மண் புழுதி நிறைந்த கால்களோடு கிணற்றில் குதித்து குளிக்க சென்ற நான்..... தாத்தா தாத்தா என்னாச்சி உங்...

மிஞ்சி என்ன வேண்டாம்

மிஞ்சி எண்ண வேண்டாம்  'உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத்தேவன் பகிர்ந்தவிசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்'. - (ரோமர் 12:3). குத்து சண்டை போட்டியில் வீரனாக திகழ்ந்த முகமது அலியைக் குறித்து நாம் எல்லாரும் அறிவோம். அவர் 61 உலகளவிலான போட்டிகளில் 57 முறை வென்றும், தனக்கு எதிராக இருந்த 37 எதிர் போட்டியாளர்களை குப்புற வீழ்த்தினவர் என்றும் புகழ் பெற்றவர். அவர் தன்னை குறித்து சொல்லும்போது, “I am the greatest” என்று கூறிக் கொள்வார். தன்னை குறித்து மிகவும் பெருமை படைத்தவர். ஒரு முறை ஒரு விமானத்தில் பயணம் செய்த போது, சீட்பெலட் போடாமல் அமர்ந்திருந்தார். எல்லாரையும் பார்த்து சீட்பெல்ட் போடும்படி விமான பணிப்பெண் கூறிக் கொண்டே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரருகே வந்தவுடன், சீட்பெல்ட் போட சொன்னார். அதை கேட்ட அலி, 'நான் சூப்பர் மேன், எனக்கு சீட்பெல்ட் தேவையில்லை' என்று கூறினார். அதற்கு பணிப்பெண், 'சூப்பர் மேனுக்கு விமானமும் தேவையில்லை' என்று கூறினார். ஒன்றும் கூறாமல் அலி சீட்பெல்ட் போட்டு கொண்டார். தன்னை குறி...

என்றும் ஜீவிக்கிறார்

*இன்றும் என்றும் ஜீவிக்கிறார்* அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். - (மாற்கு 16:6).   மூன்று மனிதர்கள் மற்றவர்களுக்கு விரோதமாக குற்றம் செய்தார்கள் என்று விசாரிக்கப்பட்டார்கள். இருவர் தவறு செய்திருந்தனர் ஒருவர் எந்த தவறும் செய்யவில்லை. மூன்று பேரும் அரசாங்கத்தால் விசாரிக்கப்படடனர், இருவருக்கு அவர்கள் செய்த குற்றத்திற்கு சரியான தண்டனை விதிக்கப்பட்டது ஒருவருக்கு சரியான தீர்ப்பு வழங்கப்படவில்லை. மூன்று பேருக்கும் சிலுவை சுமக்க கொடுக்கப்பட்டது இருவர் அதை சுமக்கும்படி தவறு செய்திருந்தனர். ஒருவர் அதை சுமக்கும் அளவு எந்த தவறும் செய்யவில்லை. மூன்று பேரையும் கிண்டல் செய்து அவர்கள் மேல் துப்பினர், இருவர் திரும்ப திட்டி சபித்து, அவர்கள் மேல் திரும்ப துப்பினர், ஒருவர் அமைதியாக எல்லாவற்றையும் சகித்துக் கொணடார். மூன்று பேரையும் சிலுவையில் ஆணிகளால் அறைந்தார்கள், இருவர் அதற்கு பாத்திரராயிருந்தார்கள்,ஒருவர் அதற்கு எந்தவிதத்திலும் பாத்திரராயிருக்கவில்லை. மூன்று பேரும் சிலுவை...