தேர்தலுக்காக ஜெபிக்கலாமா ?

 *(422) உயர்ந்த முத்துக்கள்.*

*தேர்தலுக்காக ஜெபிக்கலாமா ?*

எங்கு பார்த்தாலும் தேர்தலுக்கான ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகின்றன, இந்த ஜெப விண்ணப்பங்களை கர்த்தர் அங்கீகரிப்பாரா ?

பரிசுத்த வேதாகமம்  என்ன சொல்லுகிறது என்பதை சிந்திப்போம்.

*தேவனுடைய சித்தத்திற்கு மாறான எந்த ஜெபத்தையும் அவர் அங்கீகரிக்க மாட்டார்.*

(மத் 26:39,42; 1யோவா 5:14).

ஆகையால் தான் பரிசுத்த ஆவியானவர் சபைகளில் தேவனுடைய சித்தத்தை அறிகிற அறிவில் நிரம்பும் படியாக பரிசுத்தவான்கள் மூலமாக போதித்தார்.

(கொலே 1:9)

தேவ சித்தம் என்னவென்றால் ஒரு திருச்சபை தேவனுடைய சித்தத்தின்படி,  உலகத்துக்காக அல்ல, பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்ய வேண்டும். 

(யோவா 17:9;ரோம 8:27) 

இயேசு கிறிஸ்து மிகத் தெளிவாக ஜெபிக்கிறார்.

(யோவா 17:14,16) இல்

நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. நாம் தேவனுடையவர்கள், அவருடைய இராஜ்யத்திற்குரியவர்கள், வருங்கால இளவரசர்கள். அவருடைய இராஜ்யத்தில் ஆயிரம் வருடம் நல்லாட்சி செய்யப் போகிறோம்.

(வெளி 20:4,6)

தேவனுடைய இராஜ்ஜியம் தான் பூமியிலுள்ள அரசாங்கத்தையும், அதிகாரங்களையும் நிர்ணயிக்கிறது. அது  தேவனுடைய திட்டத்தின் படி அமல்படுத்தப்படுகிறது. மனிதர்களுடைய சித்தத்தின்படி அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது திருச்சபை தேர்தல் விண்ணப்பத்தினால் போடுகிற கட்டளைக்கு அல்லது ஜெபத்திற்கு கீழ்ப்படிகிறவர் அல்ல, தேவன். அவர் யாரை கொண்டு வருகிறாரோ அவர்களுடைய அதிகாரத்திற்கு நாம் கீழ்படிய வேண்டும் என்பதுதான் தேவ திட்டம்.(ரோம 13:1,2; நீத்து 3:1;1பேதுரு 2:14). 

பரிசுத்த வேதாகமம், தேவனுடைய இருதயத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது, இவரைத்தான் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டுமென்று ஜெபிக்க சொல்லவில்லை. மாறாக பதவியில் இருக்கும் இராஜாக்களுக்காக (உதா, CM,MP,MLA,...)

தான் ஜெபிக்க சொன்னார். 

ஏனென்றால், 

மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; (ரோமர் 13:3).

நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.

(1 தீமோ 2:2)

அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும் என்பது (1தீமோ 2:1 இறுதி பகுதி,) ஜெபங்களையும், விண்ணப்பங்களையும், ஸ்தோத்திரங்களையும்  ஏறெடுக்க வேண்டும்.

ஏன், அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; அதற்காகத்தான் ஜெபிக்க வேண்டும்.


*மனிதர்களுடைய ராஜ்ஜியத்தை பூமியில் கொண்டு வருவதற்காக நம் ஜெபிக்க கூடாது.* அதற்கு நாம் வாக்களித்தால் போதும். 

*ஆனால் தேவனுடைய இராஜ்ஜியம் இந்த பூமியில் வருவதற்காக நாம் ஜெபிக்க வேண்டும்.*

 (மத் 6:10).

*நம்முடைய நிரந்தர முதல்வர்,*  

*இயேசு கிறிஸ்து பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல,* என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

(யோவான் 18:36)

ஆகையால் *உங்கள் ஜெபம் தேவனுடைய ராஜ்ஜியம் இந்த பூமியில் வருவதற்காக ஜெபம் பண்ணுங்கள்.* 


*பரிசுத்தவான்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.*


*உங்களுக்கு காணிக்கை தரும் ஒவ்வொரு ஊழியர்களுக்காகவும், விசுவாச மக்களுக்காகவும் ஜெபத்தில் நினைத்துக் கொள்ளுங்கள்.*. 


தற்போது இந்த, 

*உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்;* 

(யோபு 9:24)

*நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.*

(1 யோவ 5:19)

உலக அரசியலை ஸ்நேகிக்க வேண்டாம். 


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 


கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை