உயிர்த்தெழுந்த பின்பு என்ன நடக்கும்.
வேதாகமத்தின்படி, ஒரு கிறிஸ்தவன் உயிர்த்தெழும்பொழுது அவனுடைய வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அறிந்து கொள்வோம்:
மரித்தவர்கள் முதலில் உயிர்த்தெழுதல்:
இயேசு கிறிஸ்து இரண்டாம் முறை வரும்போது, முதலில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிர்த்தெழுவார்கள்.
மகிமையான சரீரம் பெறுதல்:
உயிர்த்தெழும் விசுவாசிகள் அழியாத, மகிமையான, ஆவிக்குரிய சரீரத்தைப் பெறுவார்கள்
(1 கொரி 15:42-44,). இந்தச் சரீரம் இயேசுவின் மகிமையான சரீரத்தைப் போன்றதாக இருக்கும்
(பிலிப் 3:21,).
மறுரூபமாக்கப்படுதல்:
அந்த நேரத்தில் உயிரோடிருக்கும் விசுவாசிகள் மரணத்தை ருசிக்காமல், ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாக்கப்படுவார்கள்
(1 கொரி 15:51-52,).
ஆகாயத்தில் கர்த்தரைச் சந்தித்தல்:
உயிர்த்தெழுந்தவர்களும் மறுரூபமானவர்களும் மேகங்கள் மேல் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆகாயத்தில் கர்த்தரை எதிர்கொண்டு போவார்கள்.
கர்த்தரோடு நித்தியமாக இருத்தல்:
அதன் பிறகு, அவர்கள் எப்போதும் கர்த்தருடனேகூட இருப்பார்கள்.
கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்றல்:
ஒவ்வொரு விசுவாசியும் தான் செய்த நற்கிரியைகளுக்குத் தக்க பலனைப் பெறுவதற்காக கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்பார்கள் (2 கொரி 5:10).
முக்கிய வசனங்கள்:
(1 தெசலோ 4:16-17:)
"...கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக... ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்".
(1 கொரிந் 15:23:)
"அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான்...".
அதன்பின்பு நடப்பவை:
(வெளிப்படுத்தல் 1:6)ன்படி
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது (இயேசு கிறிஸ்துவின்)இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, "(தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக)"
[பரலோகத்தில் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நடக்கப் போகிற நிகழ்வு]
(மத் 5: 12,16,48; 6:1;7:1 இப்படி பல வசனங்கள் பரலோகத்திலிருக்கிற பிதா என வாசிக்கிறோம்.)
இங்கேதான் அவருடைய இரத்தத்தினாலே நாம் கழுவப்பட்டு குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாற்றப்படுகிறோம்.
அதன்பின்பு நம்மை
(வெளிப்படுத்தல் 5:10)
எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
(வெளிப்ப 20:6)ன்படி
முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
அல்லேலூயா.
இப்படிப்பட்ட நித்திய நம்பிக்கையை உமக்கு தருகிறது.
ஆகையால் தேவனுடைய பிள்ளைகள் இப்படிப்பட்ட நித்திய வாழ்வை இழந்து விட வேண்டாம்.
உங்கள் வாழ்வை காத்துக் கொள்ளுங்கள்.
தொடர்ந்து வேதத்தோடு தொடர்புடன் இருங்கள். ஜெபத்துடன் இருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
Comments