தேவனுடைய மனுஷன்.

*தேவனுடைய மனுஷன்.*
(2இரா 4:21)

அக்காலத்தில் எல்லா மக்களாலும் எலிசா ஒரு 'தேவனுடைய மனுஷன்' என்று அறியப்பட்டிருந்தான்.
(2 இரா 4:9,16,22,25,27,40; 5:8;
6:6,9,10; 8:4,8,11;).

எந்த ஒரு தேவ ஊழியனுக்கும்,
"தேவனுடைய மனுஷன்"என்னும் பெயர் கிடைப்பது ஒரு உயர்ந்த பாக்கியம் ஆகும்.
இந்த தேவனுடைய மனுஷனின் ஐந்து சிறப்பு அம்சங்கள் கீழே தருகிறேன் ஆவியானவரின் துணையோடு தியானியுங்கள்.

1) எலிசா எப்போதும் தேவனோடு உள்ள நெருங்கிய தொடர்பைக் காத்துக் கொண்டான்.

2) அவன் ஒரு பரிசுத்தவான். தன்னுடைய காலத்தில் இருந்த அனைத்து சமய, ஒழுக்க நெறி சமரசப் போக்குக்கு முற்றிலும் விலகி, இஸ்ரவேலின் தேவனுக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்திருந்தான்.

3) இஸ்ரவேல் மக்களின் விசுவாச மறுதலிப்பு, உடன்படிக்கையின் மக்களுடைய பாவங்கள், 
விக்கிரகாராதனை, ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தான்.

4) கர்த்தருடைய ஆவி அவன் மேல் இருந்தது அதனால் அவனால் ஆவியின் வல்லமையுடன் பேச முடிந்தது. தேவனுடைய பிரதிநிதி என்ற நிலையில் அவருடைய வார்த்தையை மக்களிடம் அதிகாரத்துடன் அறிவித்து வந்தான். 

5) ஒரு மாபெரும் தீர்க்கதரிசி, வரங்கள் பெற்றவன் என்ற நிலையில், தேவன் அவனை அங்கீகரித்து, அவன் மூலம் பல அதிசயங்களும், அடையாளங்களும் நடைபெறச் செய்தார்.

இன்றைக்கும் நமக்கும் தேவனுடைய பிள்ளைகள் அல்லது தேவனுடைய மனுஷன் அல்லது தேவனுடைய ஊழியக்காரன். என்னும் பெயர்கள் கிடைத்திருப்பது நமக்கு பெரிய பாக்கியம் ஆகும். 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை