பாவத்தை மேற்கொள்வது எப்படி ?

பாவத்தை
மேற்கொள்ளக்கூடிய சில வழிகளை உங்களுக்கு தருகிறேன் வேதத்தின் மூலமாக.

[ ] பாவம் என்றால் என்ன ?

[ ] பரிசுத்த வேதாகமத்தின் சட்டத்தை மீறுதல்: 
பாவம் என்பது தேவனுடைய நியாயப்பிரமாணத்தை (பத்துக் கட்டளைகள் போன்றவை) மீறுவது அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமல் போவது ஆகும்.

[ ] இலக்கை தவறுதல்: 
பரிசுத்த வேதாகமத்தின் மூல மொழியில் பாவம் என்பது 'குறி தப்புதல்' (missing the mark) என்பதைக் குறிக்கிறது. இது தேவனின் மகிமைக்குத் தகுதியற்றதாக வாழ்வதைக் குறிக்கிறது.

[ ] எண்ணம் மற்றும் செயல்: 
பாவம் என்பது வெளிப்படையான செயல்கள் (கொலை, களவு, விபசாரம்) மட்டுமல்ல, மனதின் சிந்தனை, நோக்கம், மற்றும் அசுத்தமான எண்ணங்களும் பாவம்தான். இதில் அடிமைப்பட்டு கிடக்குது மனித இனம்.

[ ] பாவத்தின் விளைவு: 
பாவம் தேவனிடத்திலிருந்து மனிதனைப் பிரிக்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம்; இது ஆவிக்குரிய மற்றும் நித்திய மரணத்தைக் கொண்டுவருகிறது.
ஆகையால்...

[ ] பாவத்தை மேற்கொள்வது எப்படி ?

[ ] 1. பாவத்தை ஜெயிப்பதற்கான வேதாகம வழிமுறைகள்.
தேவனுடைய வார்த்தையை இருதயத்தில் வைத்திருத்தல்: 
(சங்கீதம் 119:11) கூறுவது போல, "நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்". வேதாகம வசனங்களை தியானிப்பது சாத்தானின் சோதனைகளை முறியடிக்க உதவும் மிகப்பெரிய ஆயுதம்.
[ ] ஆவியானவரால் மாம்சத்தின் கிரியைகளை அழித்தல்: 
(ரோமர் 8:13)-ன் படி, ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். சொந்த பலத்தால் அல்லாமல் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு மட்டுமே பாவத்தை முழுமையாக ஜெயிக்க முடியும்.

[ ] சோதனைகளைத் தவிர்த்தல்: 
"மாம்ச இச்சைகளுக்கு இடங்கொடுக்கத்தக்கதாக உடலைப் பேணாதிருங்கள்" (ரோமர் 13:14). பாவம் செய்யத் தூண்டும் சூழ்நிலைகளில் இருந்து விலகி ஓடுவதே சிறந்த வழி.

[ ] ஜெபம் மற்றும் விழிப்புணர்வு: 
 சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் செய்யுங்கள் (மத்தேயு 26:41). இயேசு கிறிஸ்துவும் சோதனைகளை எதிர்கொண்டபோது வசனத்தாலும் ஜெபத்தாலும் வெற்றி பெற்றார். 

[ ] 2.பரிசுத்தவான்களின் சாட்சியங்கள்
பரிசுத்த அகஸ்டின் (Saint Augustine): 
ஆரம்ப காலத்தில் சிற்றின்பங்களுக்கு அடிமையாக இருந்த இவர், (ரோமர் 13:13-14) வசனங்களை வாசித்தபோது ஏற்பட்ட மாற்றத்தினால் தன் பாவ வழிகளை விட்டு விலகி, சபையின் மிகச்சிறந்த பரிசுத்தவான்களில் ஒருவராக மாறினார்.

[ ] விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்: 
இவள் செய்த பாவம் ஊரறிந்த விஷயமாக இருந்தாலும், இயேசு அவளுக்கு மன்னிப்பு வழங்கி, "நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே" (யோவான் 8:11) என்று கட்டளையிட்டார். அவருடைய மன்னிப்பின் அன்பு அவளை ஒரு புதிய மனிதராக மாற்றியது.

[ ] பழைய ஏற்பாட்டு யோசேப்பு: அவனுடைய வாழ்க்கையில் போத்திப்பார் மனைவி மூலம்
பாவ சோதனை வந்தது. ஆனாலும் அவன் தன் வஸ்திரத்தை விட்டு விட்டு ஓடி பாவத்தை மேற்கொண்டான்.
(தனி அறையில் அவளோடு உல்லாசமாய் இருப்பதை காட்டிலும் தேவனோடு கூட சிறைச்சாலையில் இருப்பதை அவன் பாக்கியமாக எண்ணினான்) பாவத்தை விட்டு ஓடின படியினால் கர்த்தர் அவனை எகிப்து தேசத்திலே அதிகாரியாக உயர்த்தி அவனை ஆசீர்வதித்தார்.
(ஆதி 39:7-21; 41:40-43),
 
[ ] 3. முக்கிய வசன ஆதாரங்கள்
(1 கொரி 10:13:)
 "உங்களுக்கு நேரிட்ட சோதனை மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறல்ல... சோதனையைச் சகிக்கத்தக்கதாக, சோதனையோடுகூடத் தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும் அவர் உண்டாக்குவார்".
(1 யோவா 1:9:)
 "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்".
(யாக்கோபு 4:7:)
 "தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." 

எப்பொழுதும் பரிசுத்த வேதாகமத்தின் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய குறைவுகளை அறிந்து அதை அறிக்கை செய்து விட்டு விடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை