தேவனை தேடுங்கள்.
ஆசா கர்த்தரின் பார்வைக்கு நன்மையும், செம்மையுமானதைச் செய்தான்.(2நாளா 14:2)
( 2நாளா 12 ஆம் ஆதிகாரம்).ரெகொபெயாமின் ஆட்சிக் காலத்திலும், அபியாவின் ஆட்சிக்காலத்திலும் (2 நாளா 13 அதிகாரம் 1 இரா 15:1-8) யூதாவில் தேவனை உண்மையுடன் தொழுது கொள்ளும் பழக்கம் குறைந்தது. அக்காலத்தில் விக்கிரகாராதனை எங்கும் பரவியது. விக்கிராராதனை செய்வதற்குப் பல இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டன.
(1 இரா 14:21-24; 15:3).
ஆசா இராஜாவான போது அவன் விக்கிரக ஆராதனையை ஒழிக்கப் புறப்பட்டான். யூதாவின் மக்கள் அனைவரையும் கர்த்தருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படியவும், தேவனை தேடும் படி தூண்டவும் திட்டமிட்டான்.(2நாளா 14:3-5).
(2 நாளா 14:4)ல்
கர்த்தரை தேடுங்கள்
தேவனுடைய மக்கள் மத்தியில், எழுப்புதலோ, சீர்திருத்தமோ ஏற்பட வேண்டுமானால் அதற்கு முதல் தேவை கர்த்தரை தேடுவதாகும்.
(2நாளா 7:14)
நாளாகம புத்தகத்தை எழுதியவர் (தேவனைத்)'தேடுங்கள்'என்னும் வினைச்சொல்லை அதிகாரங்கள் 14 முதல் 16 ல் ஒன்பது இடங்களில் பயன்படுத்தி உள்ளார்.
(2நாளா 14:47; 15:2,4,12,13,15; 16:2) நாளாகம புத்தகத்தில் மொத்தமாக 29 இடங்களில் பயன்படுத்தி உள்ளார். இதன் பொருள் என்னவென்றால் மிகவும் ஆர்வத்துடனும், ஊக்கத்துடனும், ஆண்டவருடைய பிரசன்னத்தையும், உறவையும், இராஜ்யத்தையும், பரிசுத்தத்தையும் பெற்றுக் கொள்ள முயற்சிப்பது என்பதாகும்.(1நாளா 16:11) தேவனைத் தேடுதல் என்பதில் கீழ்க்கண்ட காரியங்கள் அடங்கியுள்ளன.
1) ஊக்கமான ஜெபத்தோடும், முழு இருதயத்தோடும் தேவனிடம் திரும்ப வேண்டும். (ஏசா 55:6 எரோ 29:12,13).
2) தேவனுடைய சமூகத்தைக் கண்டடைய நீதியின் மேல் பசி, தாகம் உள்ளவர்களாயிருக்க வேண்டும்.(2 நாளா 15:2;சங் 24:3-6; எசா 51:1;மத் 5:8;யோவா 4:14; மத்5:6);
3) தேவனுக்கு பிரியம் இல்லாத அனைத்து காரியங்களையும் வெறுத்து தள்ளிவிட்டு, தேவனுடைய சித்தத்தை மட்டுமே செய்ய அர்ப்பணிக்க வேண்டும். (2நாளா 14:2-7; 7:14;)
4) கர்த்தர் எனக்கு சகாயர் என்று கூறி தேவனை விசுவாசித்து தேவனையே சார்ந்து இருக்க வேண்டும். (எபி 13:6). "அவர் தம்மை தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்.(எபி 11:6; 2நாளா 14:11).
அன்பு சகோதர, சகோதரிகளே விசுவாசமும், அன்பும், தேவனை தேடுகிற தேடுதலும் கொஞ்சம் கொஞ்சமாக அநேக கிறிஸ்துவ மக்களிடம் குறைந்து கொண்டிருக்கிற காலம் இது. இந்தக் காலத்தில் அநேகரை பார்த்து பார்த்து நீங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் சோர்ந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மனிதர்களை தேடாமல்...
மனிதனிடம் உங்கள் காரியங்களை தெரியப்படுத்தாமல்.
உங்கள் வீட்டை பூட்டிக்கொண்டு முழங்கால் படியிட்டு ஊக்கத்துடனே ஜெபியுங்கள்.
கர்த்தரை உண்மை மனதுடன் தேடுங்கள். நிச்சயமாக கண்டடைவீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்,
சிலுவை ராஜா
தொடர்புக்கு.
9841711591.
Comments