கனத்துக்குரிய பாத்திரங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாம் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றும் கனத்திற்குரிய பாத்திரங்க(ள்) ளைப் பற்றி பரிசுத்த வேதாகமம் மிகத் தெளிவாகக் கூறுவதை
சில வசனங்களுடன் பார்ப்போம்.

1. கனத்துக்குரிய பாத்திரமாவது எப்படி?
ஒரு பெரிய வீட்டில் பல்வேறு பாத்திரங்கள் இருப்பது போல, தேவனுடைய ராஜ்யத்திலும் உண்டு. ஒருவன் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால் அவன் கனத்துக்குரிய பாத்திரமாகிறான். 
"ஆகையால்(பாவங்களை ) ஒருவன் இவைகளை விட்டு, (இயேசுவின் நாமத்தினாலும்,வேத வசனத்தினாலும், பரிசுத்த ஆவியின் புதிதாக்குதலினாலும்)தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்."
(2 தீமோத் 2:21 )

2.தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம்
(அப் பவுல்)
தேவன் ஒருவரைத் தம்முடைய பணிக்காக விசேஷமாகத் தெரிந்தெடுக்கும்போது அவரைத் "தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம்" என்று அழைக்கிறார். 
"கர்த்தர் அவனை நோக்கி: நீ போ; அவன் என்னுடைய நாமத்தைப் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் முன்பாகக் கொண்டுபோகிறதற்காக, நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்."
(அப் 9:15 )

3. குயவனும் களிமண்ணும்
தேவன் நம்மை உருவாக்குபவர். அவர் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்கும், மற்றொன்றைக் கனவீனமான காரியத்திற்கும் பண்ண அவருக்கு அதிகாரம் உண்டு. 
"மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?"
(ரோமர் 9:21)

4. பரிசுத்த ஜாதியும் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமும் 
விசுவாசிகள் அனைவரும் தேவனுக்குச் சொந்தமான, மேன்மையான பாத்திரங்களாகக் கருதப்படுகிறார்கள்.
"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்."
(1 பேதுரு 2:9)

பாத்திரத்தின் தகுதிகள்:
சுத்திகரிப்பு: 
பாவங்களை விட்டு விலகித் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பரிசுத்தம்: 
தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ வேண்டும்.
ஆயத்தம்: 
எந்த நற்கிரியைக்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். 
என்பதை வலியுறுத்துகிறது.
தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தேவ ஜனங்கள் எப்பொழுது கனத்துக்குரிய பாத்திரமாகவும், தேவன் எப்பொழுது நம்மை பயன்படுத்தும் படியாகவும், ஆயத்தமா இருக்கவும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு தெரியப்படுத்துகிறார்.
தொடர்ந்து வேதத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை