திருவிவிலியமும் திருகுராஆன்.

திருக்குர்ஆன் இயேசுவை (ஈஸா) மரியாவின் மகன், இறைவனின் தூதர், ஒரு தீர்க்கதரிசி, மற்றும் கடவுளின் வார்த்தை (கலிமா) என்று போற்றுகிறது; அவர் அற்புதங்களை நிகழ்த்தினார், ஆனால் கடவுள் அல்ல, கடவுளின் குமாரன் அல்ல; அவர் தொட்டிலில் பேசினார், இறையியல் போதனைகளை வழங்கினார், மேலும் சிலுவையில் அறையப்படவில்லை, ஆனால் அது அவருக்குத் தோற்றமளித்தது,
 "இறுதியில் அவர் கடவுளிடம் ஏறிச் சென்றார் என நம்பப்படுகிறது,"
(அனைத்து நபிமார்களும் மரித்து பூமியில் அடக்கம் பண்ணப்பட்டிருக்க இயேசு கிறிஸ்து மாத்திரம் ஏன் வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். 
(யோவா 6:38,42; 9:39; 10:10; 12:46,47; 16:28, 
(யோவான் 16:28)
நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.)
அவரைப் பின்பற்றுபவர்கள் கடவுளுக்கு முழுமையாக அடிபணிந்தவர்கள் (முஸ்லிம்கள்). 
திருக்குர்ஆனில் இயேசுவைப் பற்றிய முக்கிய அம்சங்கள்:
இறைத்தூதர் 
(Prophet): இயேசு, முஹம்மது நபிகள் (ஸல்) போன்றே, இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர் (ரஸூல்) மற்றும் தீர்க்கதரிசி என்று குர்ஆன் குறிப்பிடுகிறது 
(சூரா 2:136, 3:84).
மரியாவின் மகன்
 (Ibn Maryam): அவர் மரியம் (Mary) என்ற கன்னிப் பெண்ணிடமிருந்து, தந்தையின்றி பிறந்தார், இது கடவுளின் அற்புதத்தைக் குறிக்கிறது 
(சூரா 19:20-22).
(மத்தேயு 1:18,21)
இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

அற்புதங்கள்: 
அவர் இறந்து போனவர்களை எழுப்பினார், 
 (திருவிவிலியம் யோவான் 11:43-44) லாசர் மற்றும் நயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது (திருவவிலியம் லூக்கா 7:14-15), 

நோயாளிகளைக் குணப்படுத்தினார், 

(திருவிவிலியம், லூக்கா 6:19)
பறவைகளைப் போன்ற வடிவங்களை உருவாக்கி அவற்றில் ஊதி, அவை பறக்கும்படி செய்தார் (சூரா 3:49).
(திருவிவிலியம், 
யோவான் 1:3)
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
கடவுளின் வார்த்தை (Kalima): அவர் கடவுளின் வார்த்தை (கலிமா) என்று குறிப்பிடப்படுகிறார்,
(திரு விவிலியம், யோவான் 1:1)
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
இது அவருக்கு கடவுளிடமிருந்து கிடைத்த ஒரு சிறப்பு நிலையைக் குறிக்கிறது 
(சூரா 4:171).
சிலுவை: 
கிறிஸ்தவர்கள் நம்புவது போல இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறக்கவில்லை; அது அவருக்குத் தோற்றமளிக்கப்பட்டதே என்று குர்ஆன் கூறுகிறது 
(சூரா 4:157).

(திரு விவிலியம் ரோமர் 8:3)
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை "தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்."
(திருவிவிலியம்,
கொலே 1:20)
"அவர் (இயேசு) சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று."
அவருடைய மரணத்தின் மூலமாக பாவ மன்னிப்பு உண்டாயிற்று. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை. ஆகையால் தான், நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் (இஸ்லாமியர்களுக்கும்)பைத்தியமாயும் இருக்கிறார்.
(1 கொரி 1:23)
 


தெய்வீக நிலை மறுப்பு: 
இயேசு தன்னை கடவுள் என்று கூறவில்லை, அப்படிச் சொல்பவர்கள் இறைமறுப்பாளர்கள் (காஃபிர்கள்) என்று குர்ஆன் கண்டிக்கிறது (சூரா 5:73, 116).

இயேசு கிறிஸ்து தன்னை ஆண்டவர் என்று சொன்ன வசனங்கள்.
(மத் 21:3; யோவா 13:14; அப் 2:36)
மண்ணினாலே மனிதனை உருவாக்கினார். அந்த மண்ணுக்கு உயிர் கொடுத்ததும் இயேசுவே இதிலிருந்து அவருடைய தெய்வீகத்தை அறியலாமே. 
பறவைகளை களிமண்ணால் உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து விளையாடினார் என்று குர்ஆன் சொல்லுகிறது. அதிலிருந்து அவருடைய தெய்வீகத்தை உணராத இஸ்லாமியரை நினைத்து வருந்துகிறேன்.

இஸ்லாமிய நிலைப்பாடு: 
இயேசுவும், அவரைப் பின்பற்றுபவர்களும் கடவுளுக்கு முழுமையாக அடிபணிந்தவர்கள் (முஸ்லிம்கள்). 
ஆதாரங்கள் (குர்ஆன் வசனங்கள்):
சூரா 3:49:
 "அவர் (ஈஸா) நபிமார்களுள் ஒருவராக இருந்து, 'நான் உங்கள் இறைவனிடமிருந்து வந்த அத்தாட்சியுடன் உங்களிடம் வந்துள்ளேன். நான் உங்களுக்காக மண்ணால் ஒரு பறவையின் உருவத்தைச் செய்து, அதில் ஊதும்போது, அது (இறைவனின் அனுமதியால்) பறவையாக ஆகிவிடும், மேலும் பிறந்திருந்தவனையும், வெண் குஷ்ட நோயாளியையும் குணப்படுத்துவேன், இறந்தவர்களை (இறைவனின் அனுமதியால்) உயிர்ப்பிப்பேன், நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேமித்து வைப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன்' என்று கூறுவார்".
(மத் 8:2 ல் ஒரு குஷ்டரோகியை தம்முடைய சித்தத்தின்படி குணமாக்கினார்.)

சூரா 4:157: "மேலும், 'நாங்கள் அல்லாஹ்வுடைய தூதராகிய மர்யமுடைய மகன் ஈஸாவை கொன்றோம்' என்று அவர்கள் (யூதர்கள்) கூறியதாலும் (இதை அவர்களுக்குத் தண்டித்தோம்). ஆனால் அவர்கள் அவரை கொல்லவுமில்லை, அவரை சிலுவையில் அறையவுமில்லை, ஆனால் (அவருக்கு அது) அப்படி காண்பிக்கப்பட்டது".

 கிறிஸ்துவின் மரணத்தை மறுதலிக்கிறார்கள். ஆதலால் இரட்சிப்புக்கு தூரமாக இருக்கிறார்கள். சுவிசேஷத்தை இவர்களுக்கும் அறிவிப்போம்.

இயேசு கிறிஸ்துவை பிதாவாகிய தேவனே நம்முடைய பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக, மீறுதலுக்காக, பாவத்தை போக்கும் பலியாக கல்வாரி சிலுவையில் ஒப்புக்கொடுத்தார். என திருவிவிலியம் நமக்கு சொல்லுகிறது. 
வேத வாக்கியங்கள் எல்லாம் பரிசுத்த ஆவியானவரால் நமக்கு அருளப்பட்டிருக்கிறது என்பதை நாம் விசுவாசிக்கிறோம். 
தெளிவாக வாசித்து புரிந்து கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை