நெகேமியா

 உயர்ந்த முத்துக்கள்


                   நெகேமியா


நான் ஜெபம் பண்ணினேன்.

(நெகே 2:4)

நெகேமியாவின் முதல் ஆவல் எப்பொழுதும் ஜெபிக்க வேண்டும் என்பதே. அரசன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் முன் நெகேமியா தேவனிடம் அவருடைய உதவிக்காகவும், ஞானத்துக்காகவும் ஜெபித்தான். இப்படி பல தடவைகள் ஜெபித்ததுண்டு. கீழ்க்கண்ட பகுதிகளில் அந்த ஜெபங்களை காணலாம். 

(நெகே4:4-5,9;5:19;6:9,14;13:14,22,29,31).


1) இந்நிகழ்ச்சியின் போது, நெகேமியா அரசனின் முன்பு நின்று கொண்டு, இருதயத்திலிருந்து தேவனை நோக்கிக் கதறி அழுதான். நெருக்கடியான நேரங்களில் நீண்ட ஜெபங்களுக்கு நமக்கு நேரம் கிடைப்பதில்லை. நெகேமியாவின் சுருக்கமான ஜெபம் தேவனைத் தொட்டது.

ஏனெனில் அதற்கு முன் கூட்டியே அவன் நான்கு மாத ஜெபம் மற்றும் உபவாசம் பண்ணி இருந்தான். இது "ஜெபிக்கும் அடிப்படை"யில் நிகழ்ந்தது. 


2) நாள் முழுவதும் அடிக்கடி ஜெபிக்கும் பழக்கமானது, நமது வாழ்வில் பெரிதான தேவனுடைய கிருபையும், ஒத்தாசையும், ஞானமும் வழிந்தோட வழிவகுக்கும். தேவன் பேரில் நாம் சார்ந்திருக்கிறதையும் அவருடைய சமூகம் நம்மோடு நாள் முழுவதும் இருக்க வேண்டுவதின் அவசியத்தையும் மறப்பதென்பது, நமது வாழ்வில் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை மட்டுப்படுத்தி விடும். (எபே 6:18; 1தெச 5:17)

நம்முடைய அனுதின வாழ்க்கையில் தொடர்ந்து தேவ சமூகத்தை நாடுவோம், ஜெபிப்போம், கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 


Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை