வாரத்தின் முதலாம் நாள் ..

கிறிஸ்தவ விசுவாசத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இதற்கான சில முக்கிய காரணங்களை சில வசன ஆதாரங்களுடன் தியானிப்போம்.

1. இயேசுவின் உயிர்த்தெழுந்த நாள் 
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தது வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதுவே ஞாயிறு ஆராதனையின் மிக முக்கியமான அடிப்படை. 
வசனம்: 
"வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில்... அவர்கள் கல்லறை அண்டையில் வந்தார்கள்."
(லூக் 24:1, மத் 28:1). 

கூடி வந்து ஆராதித்தல் (சபை ஐக்கியம்): 
விசுவாசிகள் அனைவரும் ஒன்றுகூடி தேவனைத் துதிக்கவும், அப்பம் பிட்கவும் (பந்தி ஆசரிக்க) ஏற்ற நாள். "சபையிலே கூடிவந்து..." 
(1 கொரி 11:18, 20) மற்றும் "வாரத்தின் முதல்நாளிலே..." 
(அப்போ 20:7) எனும் வசனங்கள் இதனை வலியுறுத்துகின்றன.

சரீர மற்றும் ஆத்தும ஓய்வு: 
சரீர உழைப்பிலிருந்து ஓய்வுபெற்று, ஆத்துமா தேவனை நோக்கிப் பார்க்கவும், தேவனோடு ஐக்கியப்படவும் இந்த நாள் உதவுகிறது. 

2 .ஆவிக்குரிய வளர்ச்சி (வார்த்தையைத் தியானித்தல்): 
சபை கூடிவந்து தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, ஆவிக்குரிய ரீதியில் வளரவும், வறண்ட நிலத்தில் வேர்விட்ட விசுவாசத்தில் நிலைத்திருக்கவும் உதவுகிறது.

ஆதி திருச்சபையின் வழக்கம்
ஆதி திருச்சபை விசுவாசிகள் அப்பம் பிட்கவும், தேவனுடைய வார்த்தையைக் கேட்கவும் வாரத்தின் முதல் நாளிலேயே கூடிவந்தனர். 
வசனம்: 
"வாரத்தின் முதல் நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில்..." (அப்போ 20:7). 

3. காணிக்கை சேகரித்தல்
சபையின் தேவைகளுக்காகவும், தர்ம காரியங்களுக்காகவும் வாரத்தின் முதல் நாளில் காணிக்கை பிரித்து வைக்கும்படி அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுறுத்தினார்.
வசனம்: 
"வாரத்தின் முதல் நாள்தோறும், உங்களில் அவனவன் தன்தன் வருமானத்திற்குத் தக்கதாக ஒரு தொகையைத் தன்னிடத்திலே சேர்த்து வைக்கக்கடவன்."
(1 கொரி 16:2). 

4. கர்த்தருடைய நாள் (The Lord's Day)
புதிய ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை "கர்த்தருடைய நாள்" என்று அழைக்கப்படுகிறது. இது கர்த்தரைத் துதிப்பதற்கும், அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும் ஒதுக்கப்பட்ட நாள். 
வசனம்:
 "கர்த்தருடைய நாளில் நான் ஆவிக்குள்ளானேன்..." (வெளிப்படுத்தல் 1:10).

5. ஐக்கியமும் உற்சாகப்படுத்துதலும்
விசுவாசிகள் ஒன்றாகக் கூடிவருவது ஒருவரை ஒருவர் விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், தேவனை ஒருமனப்பட்டுத் துதிக்கவும் உதவுகிறது. 
வசனம்:
 "சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்."
(எபிரெயர் 10:25).
தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள்.
வசனங்கள் மூலமாக சந்தேகங்களை விவரித்து காண்பியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில் சகோதரன்
சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை