உலகத்திற்காக என்ன செய்தார்கள் பிதாவும் குமாரனும்.

பிதாவாகிய தேவனும் இயேசு கிறிஸ்துவும் உலகத்திலுள்ள அனைத்து மனுக்குலத்திற்காக செய்த மகத்தான காரியங்களை வேதாகமத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்ளுங்கள்:

1. தேவன் தம்முடைய குமாரனை உலகிற்கு அனுப்பினார் 
தேவன் உலகத்தின் மேல் வைத்த அளவில்லாத அன்பினால், தன் ஒரேபேறான குமாரனைப் பலியாகக் கொடுத்தார். இதன் மூலம் எவரும் அழியாமல் நித்திய ஜீவனைப் பெற வழிவகை செய்தார்.
வசனம்:
 "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." (யோவான் 3:16) 

2. இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் 
நாம் அனைவரும் பாவம் செய்திருந்தபோது, நம்முடைய தண்டனையை இயேசு சிலுவையில் ஏற்றுக் கொண்டார். நாம் நீதிமான்களாக மாற்றப்பட அவர் ஒரு மாசில்லாத பலியானார்.
வசனம்:
 "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்."
(ரோமர் 5:8)
வசனம்: 
"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்." (ஏசாயா 53:5) 

3. தேவனோடு நம்மைக் ஒப்புரவாக்கினார் 
பாவத்தினால் மனிதன் தேவனிடமிருந்து பிரிந்திருந்தான். இயேசுவின் பலி அந்த இடைவெளியை நீக்கி, மனிதர்களை மீண்டும் தேவனோடு இணைத்தது.
வசனம்: 
"தேவன் கிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி..."
(2 கொரி 5:18) 

4. மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் 
இயேசு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். இதன் மூலம் மரணத்தின் பயத்திலிருந்து விடுதலையையும், உயிர்த்தெழுதலின் நம்பிக்கையையும் நமக்கு அளித்தார். 
வசனம்:
 "கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்."
(1 கொரி 15:20) 

5. நமக்காக பரிந்து பேசுகிறார் 
தற்போது இயேசு பரலோகத்தில் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து, விசுவாசிகளுக்காக இடைவிடாமல் பரிந்து பேசி வருகிறார். 
வசனம்: 
"...அவர் எப்போதும் அவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு உயிரோடிருக்கிறவராகையால்..."
(எபிரெயர் 7:25)
மேலும் பிதாவாகிய தேவனும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த உலக மக்களுக்காக என்ன செய்தார் என்பதை பரிசுத்த வேதத்தின் மூலமாக அறிந்து பயனடைந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை ஒருமுறைதான் அதைத் திரும்ப அடைய வேண்டுமென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு வாழுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை