புறப்பட்டு போங்கள்

இயேசு கிறிஸ்துவின் பிரதான கட்டளைகளில் முதன்மையான ஒன்று.

மத் 28:19, உலகத்தின் கடைசி பரியந்தமும் போங்கள்....
சீசராக்குங்கள்......
ஞானஸ்நானம் கொடுங்கள்.

ஒவ்வொரு தலைமுறையினரிலும் தம்மை பின்பற்றுபவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுக்கும் 'பிரதான கட்டளை' இதுவே. 
கிறிஸ்தவ நற்செய்தி பணியில் லட்சியம், பொறுப்பு ,அதிகாரம் ,ஆகியவற்றை நிலைநாட்டுகிறது.

1) திருச்சபையானது உலகத்தின் கடைசி பரியந்தமும் சென்று ,அப்போஸ்தலர்களும், புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவும், வெளிப்படுத்துகிற படி கிறிஸ்துவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.(எபே 2:20,)
இந்த நற்செய்திப் பணியின் 
பணியாளர்களை மிஷனரிகளாக எல்லா தேசங்களுக்கும் அனுப்புதல் முக்கியமான பொறுப்பாகும். 
(அப் 13:1-4.)
ஒவ்வொரு திருச்சபையிலும் மிசினர்களுக்கு காணிக்கை கொடுப்பது , அனுப்புவது நல்லது தான், ஆனால் பணியாளர்களை அனுப்புகிறோமா என்பதை ஒவ்வொரு போதகர்களும் சிந்திக்க வேண்டும்.
அல்லது திருச்சபைக்கு வந்த விசுவாசிகளை சப்பாணிகளாக மாற்றி தேவனிடம் பிச்சை கேட்க பழக்கி வைத்திருக்கிறோமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

2) அறிவிக்கப்படும் நற்செய்தியானது, மனம் திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் மையமாகக் கொண்டிருக்க வேண்டும். (லூக் 24:47). மேலும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக் கொள்ள வழி நடத்த வேண்டும்.(அப் 2:38)
இந்த உலகத்தில் தீமைகளைச் செய்து வாழும் அக்கிரமக்காரர்களை விட்டு விலகி பரிசுத்த ஜாதியாராக இருக்க வேண்டும்.(அப் 2:40).
பரலோகத்தில் இருந்து இயேசு கிறிஸ்து மறுபடியும் வருவதை எதிர்நோக்கி ஆயத்தமாகக் காத்திருக்க வேண்டும்.(அப் 3:19,20 1தெச 1:10)
3) இந்த நற்செய்தியின் பணியின் நோக்கம் இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மக்களை கிறிஸ்துவின் சீஷராக்குதலாகும்.
இந்தப் பகுதியில் நேரடியான ஒரே கட்டளை இதுவே. நற்செய்திப் பணியின் மூலமும், மிஷனரிகளின் சாட்சிகளின் மூலமும், மக்கள் மனம் திரும்ப தீர்மானிப்பார்கள் என்று மட்டும் கிறிஸ்து 

எதிர்பார்க்கவில்லை. 
திருச்சபைகள் நற்செய்திப் பணியின் மூலம் அநேகரைச் சபையில் சேர்த்து சபை விரிவாகவும் உறுப்பினர் எண்ணிக்கை பெருகவும் மட்டும் முயற்சித்தால் போதாது. ஆனால், நற்செய்திப் பணியின் மூலம் அநேகர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவின் கட்டளைகளை ஏற்றுக் கீழ்ப்படிந்து, தங்கள் முழு இருதயத்தோடும் ,
முழுமனதோடும் ,முழுசித்தத்தோடும் கிறிஸ்துவைப் பின்பற்றும் உண்மையான சீஷர்களாக ஆக்கப்பட வேண்டும். (யோவா 8:31)

4) மேலும் சமுதாயத்தை கிறிஸ்தவ மையமாக்குவதற்கும் அல்லது இந்த உலகத்தையே ஆதாயப்படுத்திக் கொள்வதற்கும் இயேசு கிறிஸ்து கட்டளை கொடுக்காமல் 'இழந்து போன ஆத்துமாக்கள்'ஆன ஆண்களையும் பெண்களையும் சந்தித்து அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இயேசுகிறிஸ்து கட்டளையிடுகிறார்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் தாம் வாழும் தீமை நிறைந்த உலகைவிட்டு விலகி ,ஒழுக்ககேட்டையும் பாவங்களையும் விட்டு பிரிந்து வாழ்ந்து,(ரோம 13:12. 2கொரி 6:14) உலகத்தின் தீமையை வெளிப்படுத்த வேண்டும். (எபே 5:11).

5) கிறிஸ்துவை விசுவாசித்து, நற்செய்தியை ஏற்றுக் கொள்கிறவர்கள் தண்ணீரினால் மூழ்கி ஞானஸ்நானம்
பெற வேண்டும்.
இது அவர்களை அசுத்தமான பாவங்களையும், உலகத்தையும், தங்கள் பாவ சுபாவங்களை வெறுத்து, தங்களை முற்றிலுமாக கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து, அவருடைய ராஜ்ஜியத்தின் நோக்கங்களுக்காக வாழ அவர்கள் செய்யும் உடன்படிக்கை உறுதிமொழியைப் பிரதிபலிப்பதாகும்(அப் 22:16).

6) தம்முடைய கீழ்ப்படிதலுள்ள ஊழியக்காரர்களைக் கிறிஸ்து பரிசுத்த ஆவியின் பிரசனத்தினாலும் வல்லமையாலும் நிரப்பி வழிநடத்துவார்.(மத் 28:20. 1:23,18:20,) உன்னதத்திலிருந்து பரிசுத்த ஆவியின் வல்லமையை தரித்துக்கொண்ட பின்னரே அவர்கள் எல்லா தேசங்களுக்கும் சென்று கிறிஸ்துவை குறித்துச் சாட்சியாக அறிவிக்க வேண்டும் (லூக்கா 24:49 அப் 1:8)

மேலும் நீங்கள் வேதத்தை அதிகமாக வாசிக்க வேண்டும். 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா 
தொடர்பு:9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை