அந்நிய பாஷையை தடை பண்ணாதிருங்கள்.
பெந்தகோஸ்தே அனுபவத்தைப் பெற்றவர்கள் அந்நிய பாஷை பேசுவது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான். எனினும், இதைக் குறித்து வேதம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
முக்கியமான வேத ஆதாரங்களுடன்:
1. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு அடையாளம்
அப்போஸ்தலர் புத்தகத்தில், விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டபோது அந்நிய பாஷைகளில் பேசினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது:
(அப்போஸ் 2:4: )
"அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்".
(அப்போ 10:46:)
கொர்நேலியுவின் வீட்டில் இருந்தவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசிக் கடவுளைப் புகழ்ந்ததைக் கேட்டுப் பேதுருவும் மற்றவர்களும் ஆச்சரியப்பட்டனர்.
(அப்போஸ் 19:6:)
பவுல் எபேசுவிலுள்ள விசுவாசிகள் மேல் கைகளை வைத்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று அந்நிய பாஷைகளில் பேசினார்கள்.
2. இயேசுவின் வாக்குறுதி
(மாற்கு 16:17:)
"விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: ... நவமான பாஷைகளைப் பேசுவார்கள்" என்று இயேசு கூறினார் .
3. தனிப்பட்ட பக்திவிருத்தி
(1 கொரி 14:2, 4:)
அந்நிய பாஷையில் பேசுகிறவன் மனிதர்களிடத்தில் பேசாமல், தேவனோடு பேசுகிறான்; அவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாக்குகிறான்.
முக்கியமான கட்டுப்பாடுகள்
(1 கொரி 14):
அந்நிய பாஷை பேசலாம், ஆனால் சபையில் செய்யும்போது கீழ்க்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்:
சபை ஒழுங்கு:
சபையில் அந்நிய பாஷை பேசும்போது அதற்கு
வியாக்கியானம்
(பொருள் கூறுபவர்)
இருக்க வேண்டும். இல்லையெனில், பேசுகிறவர் சபையில் மௌனமாக இருந்து தனக்குள்ளும் தேவனிடமும் பேசிக்கொள்ள வேண்டும்
(1 கொரி 14:27-28)
தடை செய்யாதிருங்கள்:
"அந்நிய பாஷைகளைப் பேசுகிறதைத் தடைபண்ணாதிருங்கள்" என்று பவுல் தெளிவாகக் கூறுகிறார்
(1 கொரி 14:39)
சுருக்கமாக:
வேதாகமத்தின் படி அந்நிய பாஷை பேசுவது ஆவிக்குரிய ஒரு வரமாகும். அது சபைக்குப் பிரயோஜனமாகவும், ஒழுக்கமாகவும் செய்யப்பட வேண்டும்.
தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள்.
மற்றவர்கள் ஆயிரம் கருத்தை பதிவிடலாம். வேதமே வெளிச்சம்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
Comments