கிறிஸ்தவர்கள் பாவம் செய்யலாமா ?
*நாம் பாவம் செய்யலாமா?*
(ரோமர் 6:15)
பவுலின் காலத்தில் சபையில் இருந்த சிலர், கிருபையானது பாவத்தை மன்னிப்பதாலும், கிறிஸ்தவன் பாவத்துக்கு விரோதமாக போராடத் தேவையில்லை என்று நினைத்தார்கள். இதற்கு பதிலுரையாக அப்போஸ்தலன் பவுல், ஒவ்வொரு கிறிஸ்தவனும் பாவத்துக்கு எதிர்த்து நிற்கவும்; கிறிஸ்துவைப் பின்பற்றவும் (ரோம 6:19) தொடர்ந்து மனதில் உறுதி செய்து, அவனோ அல்லது அவளோ எடுத்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவரிக்கிறான்.
1) கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு விசுவாசிகள் தாங்கள் யாரை சேவிக்கப் போகிறார்கள் என்று தொடர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். (ரோம 6:16)
அ) அவர்கள் மறுபடியும் பாவத்துக்குக் கீழ்படிந்து, தங்கள் சொந்த வாழ்க்கையில் அதன் ஆளுகைக்கு எதிர்த்து நிற்பதை நிறுத்திவிட்டு, மறுபடியும் அதற்கு அடிமையாகி, முடிவில் மரணத்தை (ஆவிக்குரிய நித்திய) அடைய முடியும்.
(ரோம 6:16,21,23) அல்லது
ஆ) அவர்கள் பாவத்திலிருந்து விடுதலையாகி(ரோம 6:17)
தேவனுக்கும், நீதிக்கும், அடிமைகளாக தங்களைத் தொடர்ந்து ஒப்புக்கொடுத்து பரிசுத்தமாக்குதலையும், முடிவில் நித்திய ஜீவனையும் (ரோம 6:19,22) அடைய முடியும்.
2) ரோமர் 6: 15-23ன் வெளிச்சத்தில் பார்த்தால், கிறிஸ்துவின் ஆளுகைக்குத் தங்களை ஒப்புக்கொடாமல்,
தங்கள் சொந்த வாழ்க்கையில், பாவத்தின் ஆளுகைக்கு எதிர்த்து நிற்காதவர்கள் கிறிஸ்துவை இரட்சகர் என்று சொல்ல எந்த உரிமையும் கிடையாது.
"இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது."
(மத் 6:24;லூக் 6:46; 2கொரி 6:14-7:1;யாக் 4:4 1 யோவா 2:15-17)
மேலும் அநேக வசன ஆதாரங்கள் உண்டு. தேவனுக்கு முன்பாக நிற்பதற்கு வேதத்தில் அமை காத்துக் கொள்ளக்கூடிய அல்லது பாவத்தை மேற்கொள்ளக்கூடிய அனைத்து ஆலோசனைகளும் கூறப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவரின் துணை கொண்டு செயல்படுவோம். பாவத்தை மேற்கொள்வோம்.
தேவனோடு என்றென்றும் இருப்போம்.
கர்த்தர் ஆசிர்வதிப்பாராக ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711 591.
Comments