கிறிஸ்துவை பற்றியது அல்ல

*(425) உயர்ந்த முத்துக்கள்*
*அந்நிய பண்டிகைகள் கிறிஸ்துவை பற்றியது அல்ல*

பழைய ஏற்பாட்டு பண்டிகைகள்,
1)பஸ்கா பண்டிகை
2)புளிப்பில்லாத அப்ப பண்டிகை
3)முதற்கனி பண்டிகை
4)அறுவடை பண்டிகை
5)எக்காள பண்டிகை
6)பாவநிவிர்த்தி பண்டிகை
7)கூடாரப் பண்டிகை
ஏழு பண்டிகைகள் தேவன் இஸ்ரவேலருக்கு கொண்டாடும்படி கொடுத்தது. அதனோடு இன்னும் இரண்டு பண்டிகைகள்  சேர்த்து கொண்டாடுகின்றனர். எஸ்தர் புத்தகத்தில் உள்ள பூரிம் பண்டிகையும், தேவாலய பிரதிஷ்டை பண்டிகையான ஹனுக்கா பண்டிகையும் சேர்த்து (9 பண்டிகைகள்) கொண்டாடுகின்றனர்.
குறிப்பாக பஸ்கா, புளிப்பில்லாத அப்ப பண்டிகை, முதற்கனி பண்டிகை (பெந்தெகோஸ்தே) போன்றவை, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், பரிசுத்த ஆவியின் வருகை மற்றும் மீட்பின் பணியைக் குறிக்கும் நிழல்களாகும்

*1)பஸ்கா:" இஸ்ரயேலர் எகிப்திலிருந்து விடுதலையானதை நினைவுபடுத்துவது, இயேசு "தேவ ஆட்டுக்குட்டியாக" நமக்காக பலியானதைக் குறிக்கிறது
(யோவ 1:29, 1 கொரி 5:7). 
*2)புளிப்பில்லாத அப்ப பண்டிகை:*
 பாவமில்லாத இயேசுவின் உடலையும், கல்லறையில் அவர் இருந்ததையும், புதிய வாழ்வையும் குறிக்கிறது (யாத் 12:15-20, 1 கொரி 5:8). 
*3)முதற்கனி பண்டிகை/பெந்தெகோஸ்தே;* இயேசுவின் உயிர்த்தெழுதலின் முதற்பலன்
(1 கொரி 15:20) மற்றும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் திருச்சபையின் பிறப்பு (அப் 2) ஆகியவற்றைக் குறிக்கிறது. 
*பண்டிகைகளும், இயேசு கிறிஸ்துவுடனான ஒப்பீடும்:பஸ்கா பண்டிகை 
(Passover): பழைய ஏற்பாட்டில்:*
 இஸ்ரயேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக, அடித்துக்கொண்ட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் நிமித்தம் காப்பாற்றப்பட்டனர் (யாத் 12).
*இயேசு கிறிஸ்து:*
 இயேசுவே பாவத்திலிருந்து நம்மை மீட்கும் தேவ ஆட்டுக்குட்டி; அவருடைய இரத்தம் நம்மை நித்திய மரணத்திலிருந்து விடுவிக்கிறது
(யோவ 1:29, 1 கொரி 5:7).
*புளிப்பில்லாத அப்ப பண்டிகை (Unleavened Bread):பழைய ஏற்பாடு:*
 இஸ்ரயேலர் புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிட்டனர்; புளிப்பு பாவத்தைக் குறிக்கும் (யாத்தி 12:15-20).
*இயேசு கிறிஸ்து:*
 இயேசு பாவமில்லாதவர், அவர் பலியாகி கல்லறையில் வைக்கப்பட்டதை இது குறிக்கிறது; நாம் அவரில் பாவமற்ற புதிய வாழ்வைப் பெறுகிறோம்
(1 கொரி 5:7-8).
*முதற்கனி பண்டிகை (Firstfruits):பழைய ஏற்பாடு:*
 அறுவடை காலத்தில் முதல் கனியை தேவனுக்கு அர்ப்பணித்தனர் (லேவி 23:9-14).
*இயேசு கிறிஸ்து:*
 இயேசுவே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த முதற்பலன்
(1 கொரிந் 15:20, 23).
*பெந்தெகோஸ்தே (Pentecost / வாரங்களின் பண்டிகை):பழைய ஏற்பாடு:*
 முதற்கனி அறுவடைக்குப் பிறகு, பரிசுத்த ஆவியின் வல்லமையால் திருச்சபை பிறந்த நாள் (அப்2).
*இயேசு கிறிஸ்து:*
 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் பரிசுத்த ஆவியானவர் திருச்சபையின் மேல் இறங்கி, விசுவாசிகளை அபிஷேகித்து, வல்லமையளித்தது (அப் 2). 
*வேத வசன ஆதாரங்கள்:*
(கொலே2:16-17)
 "ஆகையால், போஜனத்தைப் பற்றியும், பானத்தைப் பற்றியும், பண்டிகைகளையாகிலும், அமாவாசைகளையாகிலும், ஓய்வுநாட்களையாகிலும் குறித்து ஒருவனும் உங்களை நியாதீர்ப்பிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் வரவிருக்கிறவைகளுக்கு நிழலாச்சுதே; அவைகளின் உருவம் கிறிஸ்துவே."
*(1 கொரி 5:7-8:)*
 "ஆகையால், பழைய புளிப்பை நீக்கிப்போட்டு, தூமையற்றவர்களும், பொல்லாப்புமில்லாதவர்களுமாயிருக்கிறவர்களாகியப் புளிப்பில்லாத அப்பங்களைப்போல், உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.

மேலே நாம் மூன்று பண்டிகைகளை குறித்து பார்த்திருக்கிறோம்.
ஒவ்வொரு பண்டிகைக்கும் அர்த்தம் உண்டு. உலகத்தில் உள்ள பண்டிகைகள் அர்த்தமற்றவையாகும்.
அது பொழுதுபோக்காகவும், மக்களுக்கு பாரமாகவும், மன அழுத்தமுமாக இருப்பதை அநேகர் இன்னும் உணரவில்லை. ஒவ்வொரு தீபாவளி அல்லது பொங்கல் வரும்போது எல்லாம் அநேக குடும்பங்கள் பல லட்சங்களை கடன் வாங்கி அதை கொண்டாடுகிறார்கள். முடிந்தவுடன் வருத்தத்தோடு அனேக குடும்பங்கள் இருப்பதை நான் கவனித்து இருக்கிறேன்.
ஆனால் பைபிளில் சொல்லப்படும் பண்டிகைகள் அப்படிப்பட்டது அல்ல,
அது ஒவ்வொரு மனிதனுக்கும், தெய்வீக சமாதானத்தையும், மன அமைதியையும், பெருக பண்ணுகிற பண்டிகையாகும். அதில் நித்திய நம்பிக்கை உண்டு.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா. 

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை