கவலை
*(423) உயர்ந்த முத்துக்கள்*
*திருச்சபை பற்றிய கவலை*
இவை முதலானவைகளையல்லாமல், *எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற "கவலை" என்னை நாள்தோறும் நெருக்குகிறது.*
அப்போஸ்தலன் பவுலுக்கு அநேக கவலைகள் இருந்தன, ஆனாலும் அவைகளைப் பற்றி கவலைப்படாமல் திருச்சபைகளை குறித்த கவலை நாள்தோறும் நெருக்குகிறது என்கிறான்.
(2 கொரி 11:22-28)வரை வாசித்து பாருங்கள்.
இயேசு கிறிஸ்துவின் சபையைப் பற்றிய "கவலை" மற்றும் அதன் மீது அவர் கொண்டுள்ள "அக்கறையை" பரிசுத்த வேதாகமத்தின் வசனங்களின் அடிப்படையில் கீழே காணலாம்.
*1.) கிறிஸ்துவின் சொந்தச் சொத்து (அப்போ 20:28)*
"தேவன் தம்முடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு..." என்று இந்த வசனம் கூறுகிறது. சபை என்பது ஏதோ ஒரு சாதாரண அமைப்பு அல்ல, அது கிறிஸ்துவின் இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்டது. எனவே, அதன் தூய்மை மற்றும் பாதுகாப்பு குறித்து அவர் மிகுந்த கவலை (அக்கறை) கொண்டுள்ளார்.
*2.) சபை கிறிஸ்துவின் சரீரம் (எபேசியர் 1:22-23)*
சபை என்பது கிறிஸ்துவின் சரீரம் என்றும், அவரே அதற்குத் தலையாயிருக்கிறார் என்றும் வேதம் கூறுகிறது. ஒரு மனிதன் தன் சொந்த உடலைப் பேணிப் பாதுகாப்பது போல, கிறிஸ்து தம்முடைய சரீரமாகிய சபையைப் பராமரிக்கிறார் .
*3.) பரிசுத்தமும் மாசற்றதுமான சபை (எபேசியர் 5:25-27)*
கிறிஸ்து சபையை நேசித்து, அது "கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல்... பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக" தமக்குமுன் நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார். சபை உலகப் போக்கினால் அசுத்தமடைந்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாய் இருக்கிறார்.
*4.) சபையின் தலைவர்களுக்கான எச்சரிக்கை (1 பேதுரு 5:2-4)*
சபையை வழிநடத்தும் போதகர்கள் மற்றும் மூப்பர்கள் மந்தையை (சபையை) அடிமையாக்காமல், மாதிரியாகவும் மனப்பூர்வமாகவும் கண்காணிக்க வேண்டும் என்று வேதம் அறிவுறுத்துகிறது. பிரதான மேய்ப்பராகிய கிறிஸ்து வெளிப்படும்போது சபையைச் சரியாக வழிநடத்தியவர்களுக்கு மகிமையுள்ள கிரீடம் உண்டு .
*5.)உபத்திரவங்களில் பாதுகாப்பு (மத்தேயு 16:18)*
"இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை" என்று இயேசு கூறினார். சபை சோதனைகளையும் கவலைகளையும் சந்தித்தாலும், அது அழியாமல் பாதுகாப்பதில் அவர் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.
சுருக்கமாகச் சொன்னால், சபை என்பது கிறிஸ்துவின் மணவாட்டி. அவர் அதன் வளர்ச்சி, பரிசுத்தம் மற்றும் விசுவாசத்தைக் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்பதை (யோவான் 10:11-14 )போன்ற வசனங்கள் மூலம் அறியலாம்.
இன்றைக்கு அநேகர் திருச்சபையின் மீது கவனம் செலுத்தாமல், *YouTube Live, Instagram, Facebook,* வலைதளங்களில் அதிக மோகமாக இருப்பதை காண முடிகிறதே ஒழிய திருச்சபைகளில் காண முடியவில்லை.
எல்லா விசுவாசிகளிடமும் subscribe, like, share , தொடர்ந்து மற்றவர்களுக்கும் forward பண்ணுங்கள்.
அப்புறம் 10 million viewers, அதைத் பார்த்துவிட்டார்கள், மீடியாவுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் தன்னுடைய திருச்சபைக்கு கொடுப்பதில்லை. அதைப்பற்றி துளி கூட கவலை இல்லை, அதற்கான ஜெபம் இல்லை, மீடியா ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு சபையாரிடத்தில் வருத்தம் தெரிவித்தல். வீடியோ ஊழியம் மிகப்பெரிய ஊழியம் மாதிரி பேசுவது.
ஆனால் பவுல் அப்போஸ்தலன் சபையை பற்றிய கவலையை சொல்லுகிறார்.
ஆகையால் தேவனுடைய பிள்ளைகளே சிந்தியுங்கள், செயல்படுங்கள்,
*மீடியா ஊழியங்களை சபைக்கு வெளியே இருப்பவர்களுக்கு மட்டுமே இருக்கட்டும்.*
அதாவது
மாற்றுத்திறனாளிகள்.
ரகசிய கிறிஸ்தவர்கள், வியாதியில் படுத்திருப்பவர்கள்,
கிறிஸ்தவத்தை விமர்சிக்கிறவர்கள். யூட்யூபில் வருமானத்தை தேடுகிறவர்கள்.
பெயர் புகழை விரும்புகிறவர்கள் பார்க்கட்டும்.
ஆனால் தேவனுடைய பிள்ளைகள் சபை கூடி வருதலை விட்டு விடாதீர்கள் என்று ஆவியானவர் சபைக்கு சொல்லுகிறார்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments