கள்ள ஊழியர்களின் அடையாளங்கள்

 *(421)உயர்ந்த முத்துக்கள்.*

*கள்ள ஊழியர்களின் அடையாளங்கள்.*


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனிப்பட்ட விதத்தில் இரவு, பகல் நேரங்களில் ஜெபித்தார். அதே நேரத்தில் சீஷர்களுடனும் ஜெபித்தார்,

(லூக் 5:16; 6:12; 9:18; 9:28;) வாசித்து பாருங்கள். 

ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு ஊழியர்களுடைய வாழ்க்கையிலும் ஜெபம், உபவாசம், தேவனுடைய பாதத்தில் காத்திருத்தல், வேத வாசிப்பு எனப்பல இருக்கும். வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி பயணிக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இவை எல்லாவற்றையும் தொலைத்து விடுவார்கள். இவர்களிடத்தில் வேத வசனம் மாத்திரமே இருக்கும். 

*ஆனால், இயேசு கிறிஸ்துவின் ஆரம்ப கால ஊழியத்திலிருந்து., அவருடைய ஊழியம், சிலுவையில் எல்லாம் முடிந்தது என்று சொல்லும் வரை ஜெபம் இருந்தது.* 

அப்படிப்பட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  தம்முடைய சீஷர்களுக்கு ஜெபத்தை கற்றுக் கொடுத்தார்.

(மத் 5:44; 6:5,-7,9) வாசிக்கவும். இதை பேதுரு சொல்லும் பொழுது இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகள் என்கிறார். இது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் அடிச் சுவடுகள் ஆகும்.

(1பேது 2:21)

இதை ஒவ்வொரு ஊழியர்களும், விசுவாசமக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். 

ஆனால் கள்ள ஊழியர்கள்.....

ஜெப பங்காளர் திட்டத்தை ஆரம்பித்து அதற்கு மாத கட்டணத்தை நிர்ணித்து, 

1) இளம் பங்காளர் திட்டம். 

2) கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைகளுக்கு திட்டம். 

3) குடும்ப பங்காளர் திட்டம். 

4) வியாபார பங்காளர் திட்டம்,

இப்படி பல திட்டங்களை ஆரம்பித்து மக்களை ஜெபிக்க விடாமல் உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் நீங்கள் சும்மா இருந்தால் போதும் என்று சொல்லுகிற பிரபல சுவிசேஷர்கள், ஊழியர்கள் பெருகிவிட்டனர். 

24 மணி நேரமும் ஜெபம் என்பார்கள். அவர்களுக்கு தங்களுடைய ஊழியத்துக்கே ஜெபிப்பதற்கு நேரமில்லை என்பதை கடவுளைத் தவிர வேறு யார் அறிவார்.


இன்னும் வல்லமையான கள்ள ஊழியர்கள். 


ஜெபம் பண்ணினால் இந்திய தேசம், தமிழ்நாடு, மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள், இரட்சிக்கப்பட்டுவிடும்.

வாருங்கள் ஜெபிப்போம் என ஜெப மாநாடு, தேசத்திற்காக திறப்பில் நிற்போம். பல பெயர்களில் பிரார்த்தனை திருவிழா நடைபெறுகிறது. 


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒவ்வொரு தனி நபருக்காகவும், இனிவரும் சந்ததிகளுக்காகவும் கல்வாரி சிலுவையில் தம்முடைய இரத்தத்தை சிந்தி பாவ மன்னிப்பாகிய மீட்பை உண்டு பண்ணி வைத்துள்ளார், என்ற நற்செய்தி ஒவ்வொரு நபருக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான் தேவனுடைய கட்டளையும் சித்தமும் ஆகும். (மத் 28:19,20; ரோமர் 10:14,15;) திரும்பத் திரும்ப வாசியுங்கள்.

ஆனால் இந்த கள்ள ஊழியர்கள் ஜெபம் பண்ணினால் ஒரு அவிவிசுவாசி இரட்சிக்கப்பட்டு விடுவான் என்கிறார்கள். 


ஜெபத்தினால் ஒரு அவிவிசுவாசி இரட்சிக்கப்பட்டு விட்டால் இயேசு கிறிஸ்து  சிலுவையில் ஏன் மரிக்க வேண்டும்.?


ஏன் அப்போஸ்தலர்கள் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள் ? 

வெளிநாட்டு மிஷனெரிகள் தங்களுக்கு தரிசனம் கிடைத்தவுடன் ஜெபித்துக் கொண்டு அங்கே இருக்கவில்லை. மாறாக இந்தியாவிற்கு வந்தார்கள், செயல்பட்டார்கள். அதன் மூலமாகத்தான் இன்றைக்கு நீங்களும் நானும் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


எழுப்புதல் எழுப்புதல் என்று பிரசிங்கிக்கிற ஊழியர்களுடைய வாழ்க்கையில் ஜெபம் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு தனி நபருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படவில்லை,

 2026 ஆண்டுகளாகியும் சுவிசேஷம்  பரவவில்லை. தரிசனம் உள்ளவனுக்கு பாரம். பாரம் உள்ளவன் கதறும் சத்தம் தான் ஜெபம். 

புறப்பட்டு போங்கள் என்ற சத்தம் கேட்டவனுடைய கால்கள் தேவனுக்காக ஓடுவதில் ஓய்வதில்லை. 

இயேசு கிறிஸ்துவை அறியாமல் என் இனம் என் ஜனம் மாழுகிறதே என்று சொல்லி ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபிப்போம் 

 என்பதை அந்தரங்கத்திலேயே அறை வீட்டிலே வைத்துக்கொள். 

வெளியே உன் வாய் கிறிஸ்துவை பேசட்டும். 


கிறிஸ்துவின் பணியில் 

சகோடரன் 

சிலுவை ராஜா.

 






 



Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை