உம்முடைய வழிகளை

 உம்முடைய வழிகளை எனக்கு தெரிவியும் (சங் 25:4)

மோசேயைப் போல (யாத் 33:13)

சங்கீதக்காரன் மனப்பூர்வமாக கர்த்தரை தேட வாஞ்சித்தான். தேவனுடைய நடவடிக்கைகளைப் பற்றிய சிலவற்றை விசுவாசிகள் அறிந்து கொள்ளக்கூடும். 

(உதாரணமாக. இரட்சிப்பு, அற்புதங்கள், சங் 103:7), ஆனால் தேவனையோ அல்லது அவருடைய வழிகளையோ முழுவதும் அறிவதென்பது உண்மையில் ஒருபோது இயலாது. 

(அதாவது நம்மில் கிரியை செய்வதிலும், நம்மை வழி நடத்துவதிலும் உள்ள விவேகத்தின் தத்துவங்களை).

தேவனுடைய வழிகளை அறிந்து கொள்வதற்கான இந்த சங்கீதத்தில் உள்ள அடிப்படை தத்துவங்கள் பின்வருமாறு:


1) தேவனுடைய நீதியான வழிக்குள்ளும், மற்றும் அவருடைய வார்த்தையின் சத்தியத்திற்குள்ளும் நடத்தப்படுவதற்குரிய ஒரு உண்மையான ஆவல் நமக்கு இருக்க வேண்டும். (சங் 25:4).


2)"நாள் முழுவதும்"நமது நம்பிக்கையே தேவன் மேல் வைப்பதற்கு நாம் ஆவலோடு இருக்க வேண்டும்.


3) நாம் தாழ்மையுடன் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.

(சங் 25:9).

தேவ பக்தியுள்ள வாழ்க்கைக்கும் மற்றும் கர்த்தருக்குப் பயப்படவும் 

(சங் 25:12-14)

நம்மை ஒப்பு கொடுக்க வேண்டும் (சங் 25:10).


4)  தேவனையும் அவருடைய வழிகளையும் அறிந்துக் கொள்வதற்கு பாவம் ஒரு தடையாக இருப்பதினால்,

பாவம் விட்டுவிடப்பட்டிருக்கவும், சுத்திகரிக்கப்பட்டிருக்கவும், மேலும் மன்னிக்கப்பட்டிருக்கவும் வேண்டும்.(சங் 25:4-8)

"என் இருதயத்தில் அக்கிரம சிந்தைக் கொண்டிருந்தேனானல், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்"(சங் 66:18; 1யோவா 2:1-6). 


5) நமது வாழ்வில் ஏற்படுகிற கடுமையான துன்பங்களுக்கு தேவனுடைய தயவின்மை ஒரு அடையாளமாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.(சங் 34:19)

தேவனையும், அவருடைய வழிகளையும் அறிவது நம்மை கஷ்டங்களிலும், நஷ்டங்களிலும் நடத்தி இருக்கலாம். 

மற்றபடி நாம் நேருக்கு நேர் இவ்வகை துன்பங்களை எதிர் கொண்டிருக்கமாட்டோம்.

(உதாரணமாக. அப் 14:22; 20:22-23). இந்த சத்தியத்தின் முடிவான எடுத்துக்காட்டு, தேவனுடைய சித்தத்தை முழுமையாக பின்பற்றினவராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே, அவர் துன்பத்தையும், துக்கத்தையும், காட்டிக் கொடுத்தலையும், சிலுவையையும் அனுபவித்தார். தேவனுடைய சித்தத்தில் நிலைத்திருக்கிற விசுவாசியும் அதையே எதிர்பார்க்க வேண்டும். 

(மத் 10:24)).

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை