உங்களை பாவத்திற்கு

 *உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாக எண்ணிக் கொள்ளுங்கள்.*

(ரோமர் 6:11)


6ம் அதிகாரத்திலுள்ள அடிப்படை விவாதம் கிறிஸ்துவின் மரணத்திலும், ஜீவனிலும் விசுவாசிக்கு அவரோடுள்ள ஐக்கியம் பற்றியதாகும். ஆகவே, நீ ஒரு உண்மையான விசுவாசியாயிருந்தால், நீ பாவத்துக்கு மரித்திருக்கிறாய். இந்த விஷயத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும். நீ பாவத்திற்கு மூன்று வழிகளில் மரித்திருக்கிறாய்.


1) நீ தேவனுடைய பார்வையில் பாவத்துக்கு மரித்திருக்கிறாய். நீ கிறிஸ்துவோடு சிலுவையில் மரித்து அவருடைய உயிர்த்தெழுதலால் எழுப்பப்பட்டிருக்கிறாய் என்று 

(ரோம 6:5-10) தேவனால் கருதப்பட்டிருக்கிறாய். 


2) நீ, ஆவியானவரால் மறுபடியும் பிறந்த போது பாவத்துக்கு மரித்திருக்கிறாய். பாவத்துக்கு எதிர்த்து நிற்கவும்(ரோம 6:14-18) அதின் தீய இச்சைகளுக்கு அனுதினமும் சாகவும்(ரோம 8:13;) தேவனுக்கு கீழ்ப்படிந்து புதிய வாழ்க்கை வாழவும் (ரோம 6:5-14,18,22;) கிறிஸ்துவின் அதிகார உனக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


3) நீ பாவத்துக்கு மரித்ததையும் அதை தள்ளிவிட்டு, கிறிஸ்துவுக்காக வாழ உன்னை ஒப்புக்கொடுத்ததையும் அறிக்கை செய்தபடியால், தண்ணீர் ஞானஸ்நானத்தினால் நீ பாவத்துக்கு மரித்திருக்கிறாய். 

(ரோம 6:3-5; 6:4)


*பாவம் ஆளாதிருப்பதாக*

(ரோம 6:12)

பாவம் ஆளுகை செய்யும் உரிமையை நீக்கிவிட்டபடியால், அது மறுபடியும் உரிமையை எடுத்துக் கொள்ளாதபடி அதன் முயற்சிக்குத் தொடர்ந்து எதிர்த்து நிற்க வேண்டும். முக்கியமாக பாவம் சரீரத்தின் இச்சைகள் மூலம் ஆளுகை செய்ய முயற்சிப்பதால் கிறிஸ்துவிடம் விசுவாசம் வைத்திருக்கவர்கள் அந்த இச்சைகளோடு போராட வேண்டும். மாம்ச இச்சைகளுக்குக் கீழ்ப்படியாமல் (ரோம 6:12), நம் சரீர அவையங்களை பாவம் விரும்பும் வழியில் செல்ல அனுமதி கொடுக்காமல் (ரோம 6:13)

நம்முடைய சரீரங்களையும் முழு ஆளுமை தன்மையையும் தேவனுக்கும், நீதிக்கும்,(ரோம 6:13-19) அடிமைகளாய் ஒப்புக்கொடுப்பதன் மூலம் நாம் அவ்வாறு செய்ய முடியும்.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென் 


கிறிஸ்துவின் பணியில் சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

98 41 711 591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை