திருச்சபைகளுக்கு ஒரு எச்சரிக்கை

 

(411) உயர்ந்த முத்துக்கள்.)

*திருச்சபைக்கு ஓர் எச்சரிக்கை*

கிறிஸ்துவுக்காக உண்மையும் உத்தமமாக செயல்படும் ஊழியங்கள் இனிவரும் நாட்களில் அதிகமாக சிதறடிக்கப்படும் , அதிக பாடுகளையும், உபத்திரங்களையும், ஏன் மரணத்தையும், திருச்சபை சந்திக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம்.
இயேசு கிறிஸ்து சொன்னார்.
அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
(மத்தேயு 16:21; லூக் 9:22)
இயேசு கிறிஸ்து எந்த வழியாக கடந்து சென்றாரோ அதே வழியாகத்தான் கிறிஸ்துவின் சபையும் கடந்து செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சபை யார் மூலமாக பாதிக்கப்படும் என்பதை நாம் ஆராயுவோம் என்று சொன்னால்....
1) மூப்பர்கள் அல்லது பாஸ்டர்கள்.
2) தலைவர்கள் அல்லது தலைமை போதகர்கள்.
3) வேத பாரகர்கள் அதாவது வேதத்தை நன்றாக அறிந்தவர்கள்.

இவர்கள் மூவரும் சேர்ந்து திருச்சபையை புறஜாதியார் கையில் ஒப்பு கொடுப்பார்கள்.
(மத் 20:19; லூக் 18:32; அப் 21:11;)
தற்போது அநேக போதகர்கள் அரசியலை தழுவுவதை நாம் பார்த்து வருகிறோம்.
இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பின் மாற்றத்தை அடைந்து புறவினத்தார் போல மாறிவிடுவார்கள். இவர்களோடு கூட பல ஊழியங்கள் இணைக்கப்பட்டு பின்பு அடிமையாக்கப்பட்டு, திருச்சபைகள் தூசிக்கப்பட்டு, காரி துப்பப்பட்டு, பின்பு அடிக்கப்பட்டு, அதன் பின்பு சிலுவையில் அறையப்பட்டு, திருச்சபை கொல்லப்பட்டு அடக்கம் பண்ணப்படும்.

இதில் உண்மையாக வாழும் திருச்சபைகளும் இதில் அடங்கும். ஆனால் அவைகள் கிறிஸ்துவின் வருகையில் உயிர்த்தெழும்.

ஆதலால் தேவனுடைய திருச்சபைகள் மனுஷக்குமாரனுக்கு முன்பாக நிற்பதற்கு பாத்திரவான்களாக நடந்து கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை