தகப்பனும் தாயும்


(412) உயர்ந்த முத்துக்கள்.


*"என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும்", கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.* (சங்கீ 27:10)
"தந்தை தாய் கைவிட்டாலும்" என்ற சொற்றொடர், வாழ்க்கையின் கடினமான காலங்களில் எவ்வளவு ஆதரவு கிடைத்தாலும், நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறது. உலகமே உங்களை கைவிட்டாலும், உங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். 
* அறம் மற்றும் நம்பிக்கை:* 
இந்தச் சொற்றொடர் பெரும்பாலும் நம்பிக்கையும், விடாமுயற்சியும் முக்கியம் என்பதை உணர்த்துகிறது. உங்கள் பெற்றோர் கைவிட்டாலும், வேறு யார் உங்களைக் கைவிட்டாலும், தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. கர்த்தருடைய ஆவியானவரால் எழுதப்பட்ட வார்த்தைகள் எவ்வளவு உண்மையும் சத்தியமாக இருக்கிறது.

பரிசுத்த வேதாகமம் கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம் அல்ல, அது முழு உலக மக்களுக்கும் எழுதப்பட்ட புத்தகமாகும்.
வேதத்தை வாசிக்கும் பொழுது அநேக நல்ல தகப்பன்மார்களை குறித்தும் தாய்மார்களை குறித்தும் வாசிக்கிறோம். அதே நேரத்தில் பிள்ளைகளுக்கு துரோகம் செய்யும் தாய் தகப்பன்மார்களை குறித்தும் வேதத்தில் வாசிக்கிறோம். இருவருக்குமே கர்த்தருடைய ஆவியானவர் நல்ல ஆலோசனைகளை இந்த வேதத்தில் எழுதி வைத்துள்ளார். எனவே தான் கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாக இருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று சங்கீதம் சொல்கிறது. இந்த வேதத்தை கேளாதபடிக்கு தன்னுடைய செவியை அடைக்கிறவன் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்றும் வேதம் சொல்கிறது. எந்த தாய் தகப்பனும் வேதத்திற்கு செவி கொடுக்கவில்லை என்றால் அவர்கள் பிள்ளைகள் மீது அக்கரை கொள்ள மாட்டார்கள். ஆகையால் தான் இயேசு கிறிஸ்து ஒருவனுக்கு அவன் வீட்டாரே சத்துரு எனச் சொன்னார்.
இன்றைக்கு பொதுவாக அநேக தகப்பன்மார்கள் மதுபான பழக்கங்களுக்கும், போதை வஸ்துகளுக்கும், விபசாரத்துக்கும், கோல் வார்த்தைகளைக் கேட்கிறவர்களுமாக இருக்கிறார்கள்.
இவர்கள் எப்பொழுதுமே தன் பிள்ளைகளுக்கு சத்துரு வுதான்.
எனவே தேவனுடைய பிள்ளைகளே தாய் தகப்பனால் பாதிக்கப்பட்டவர்களே கவலை வேண்டாம். இந்த வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தின் முடிவு பரியந்தமும் நம்மோடு இருக்கிறார், அவர் நம்மை நாளும் கைவிடமாட்டார்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை