காணிக்கை கொண்டு வருகிறான்

415) உயர்ந்த முத்துக்கள்.

ஒரு காணிக்கை கொண்டு வருகிறான்.
(லேவி 1:2)
'காணிக்கை' என்ற (எபிரேய மொழியில் 'கொர்பான்') பெயர் சொல்'கிட்டிச் சேருதல்' என்னும் வினைச்சொல்லுடன் தொடர்புடையது. எனவே காணிக்கை என்பது இஸ்ரவேலின் விசுவாசிகள் தேவனுடைய சமூகத்தில் அவரருகில் வந்து அவருடைய உறவையும், ஆசீர்வாதங்களையும் பெற்று அனுபவிப்பதற்காக அவருக்குப் படைக்கும் ஒரு வெகுமதியாகும்.
(சங்க 73:28)

லேவி 1 ஆம் அதிகாரங்கள் 1 முதல் 7 வரை ஐந்து காணிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன :

தகன பலி (லேவி 1:3-17),

போஜன பலி (2:1-16),

சமாதான பலி (3:1-17),

பாவநிவாரண பலி (லேவி , அதிகாரம் 4),

குற்ற நிவாரண பலி (லேவி 5:14-6:7; 7:1-7),

      2.  காணிக்கை படைத்தவர்களின் நோக்கங்கள் :
நன்றி செலுத்துதல், தமது விசுவாசத்தை அறிக்கையிடுதல், தமது உறவை புதுப்பித்துக் கொள்ளுதல், தேவனோடுள்ள பற்றுதலை உறுதிப்படுத்துதல், தமது பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுதல், காணிக்கைகள் உண்மையில் செயல் முறைப்படுத்தப்பட்ட அவர்களுடைய விண்ணப்பங்களாயிருந்தன. (சங்க 116:17;ஒசியா 14:2;எபி 13:5).
        3.  பல தடவைகளில் ஒரு காணிக்கை என்பதில் ஒரு தியாகம் அடங்கியிருந்தது. அதாவது ஒரு மிருகத்தின் உயிர் பலியிடப்பட்டது.
(லேவி 9:8)
        4.  இந்தப் பலிகள் இஸ்ரவேலருக்குப் போதித்தவைகள் :

மனிதர் அடிப்படையிலேயே பாவிகள். அவர்களுடைய பாவங்களின் பலன் 'மரணம்'

இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை.
(லேவி 17:11;எபி 9:22)

ஒருவருக்காக இன்னொருவர் உயிர் விடுதல் மூலம் பாவ நிவாரணம் உண்டாக்கப்பட வேண்டும்.(லேவி 1:4; 17:11)

தேவனுடைய பரிசுத்தம் மனித வாழ்க்கையை ஒழுங்குப்படுத்தி, ஒவ்வொரு பகுதியிலும் வழி காட்ட வேண்டும். (லேவி 10:3)

தேவன் கிருபை நிறைந்தவராகவும், மன்னிக்கிறவராகவும், மக்களினத்தோடு உறவு கொள்ள விரும்புகிறவராகவும் இருக்கிறார்.   (யாத் 34:6,7).
      5.    ஒரு காணிக்கை தேவனுக்குப் பிரியமாயிருந்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், அங்கே ஒரு இதய பூர்வமான மனம் திரும்பிய நிலையும், தேவனுடைய நீதியிலும், உண்மையிலும் நடப்பதாக முழு அர்ப்பணம் செய்திருத்தலும் அவசியம். (லேவி 23:27-29;ஏசா 1:11-17; மீகா 6:6-8)

இன்றைய உயர்ந்த முத்திலிருந்து காணிக்கை பற்றிய ஆய்வு தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை