கிறிஸ்துவை அறிகிற அறிவு

 *(418) உயர்ந்த முத்துக்கள்.*


*இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவு.*


தேவனுடைய பிள்ளைகளுக்கு பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களை பற்றிய செய்தியே 99% சதவீதம் பிரசிங்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்தி   1% சதவீதமே, ஆனால், பரிசுத்த ஆவியானவர், பிதாவையும், குமாரன் இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என போதிக்கிறார். (யோவா 17:3) அப்,பவுல் மூலமாக 

(1 கொரி 2:2)ல்,  

இயேசுகிறிஸ்துவை, "சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்."எனக் கூறுவதை கவனிக்கிறோம்.

இன்றைக்கு திருச்சபையில் ஒரு பரிதாபமான நிலை என்னவென்றால் ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, யோசேப்பு, மோசே, யோசுவா, நெகேமியா, எஸ்றா,தீர்க்கதரிசிகள், இவர்களை அறிந்த அளவிற்கு இயேசு கிறிஸ்துவை சபை அறியவில்லை.

தற்போது கேட்கிற செய்திகள், மற்றும் பாடல்கள் கிறிஸ்துவை பிரதிபலிப்பாக இல்லை. பிறகு எப்படி ஒருவன் கிறிஸ்துவை அறிந்து கிறிஸ்துவை பின்பற்ற முடியும் ?

பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிப்பது.

சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, *"தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து,"* கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,(கொலே1:10;2பேது 3:18)ஐ வாசி. அதுமாத்திரமல்ல, *"என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்".* (பிலி 3:8)

அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

கிறிஸ்துவை அறிகிற அறிவு நாம் எதை மேன்மையாக, ஆசீர்வாதமாக எண்ணுகிறோமோ அதை பவுல் அப்போஸ்தலன் குப்பை என்று சொல்லுகிறார், இந்த உலகத்தில் பெரிய மேன்மை என்னவென்றால் கிறிஸ்துவை அறிவதே ஆகும்.


1) *"நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே நம்முடைய ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தருகின்றது",* 

(2 பேதுரு 1:3) உலக வாழ்க்கைக்கு தேவையானது மாத்திரம் அல்ல நம்முடைய ஆவிக்குரிய வாழ்வுக்கு தேவையான யாவற்றையும் நமக்கு கிடைக்க பண்ணுகிறது.


2) அவரை அறிகிற அறிவு தான் நமக்கு கனியுள்ள வாழ்க்கையை தருகிறது (2பேது 1:8)

தன்னை நேசிப்பது போல பிறணையும் நேசிக்கக் கூடிய கனியுள்ள வாழ்க்கை உண்டாகிறது.


3) அவரை அறிகிற அறிவு தான் உலகத்தின் அசுத்தங்களுக்கு நம்மை தப்புவிக்கிறது. 

(2பேது 2:20) இதனால் நமக்கு கிடைப்பது பரிசுத்தம். ஜீவனுள்ள தேவனை தரிசிப்பதற்கு தகுதி கிடைக்கிறது.


4) அவரை அறிகிற அறிவு தான் அவரோடு ஐக்கியமாய் இருப்பதற்கும். நாம் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்கும் நம்மை தகுதியாக்குகிறது. 

(பிலி 3:10) மரணம் ஒரு முடிவல்ல அது நித்தியத்தின் துவக்கமாக இருக்கிறது. அன்னை தெரேசா சொன்னது. இயேசு கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டது போல அவர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிற ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் உயிர்பிக்கப்படுவார்கள். எழுப்பப்படுவார்கள். அதற்கு அவரை அறிகிற அறிவு தேவை.


ஆகையால் என் அன்பு தேவனுடைய பிள்ளைகளே பிதாவாகிய தேவனையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதற்கு ஒவ்வொரு நாளும் தேவ கிருபையால் நிரப்பப்படுங்கள். பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம் அதற்கு வழியை காட்டுவதாக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா.



Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை