பொய் சாட்சி

 (413)உயர்ந்த முத்துக்கள்


பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக (யாத் 20:16)

பரிசுத்த வேதாகமத்தில் வெகுமதி கிடைப்பதற்காக தாவீதினிடத்தில் பொய்யாகிய கட்டுக் கதையைச் சொன்னான்.

சவுல் ராஜாவை நான்தான் கொன்றேன் என்று தாவீதிடம் பொய் சொன்னான் (2சாமு 1:9,10).

பொய்களை பேசுகிறவன் தப்புவதில்லை அவன் நாசம் அடைவான். (நீதி 19:5,9).                  பொய் பேசுகிறவன் தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்(யோவா 8:44)

ஆனால் பரிசுத்த ஆவியானவர் (1சாமு 31:3-6) வசனங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

(3)சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு,

(4)தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடி, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதன்மேல் விழுந்தான்.

(5)சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, ​​அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.

(6)அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்.

(1 நாளாகமம் 10:13-14) ல். அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான். அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்.

5ஆம் வசனத்தில் சவுல் செத்துப் போனான். 

6ஆம் வசனத்தின் அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப் போனார்கள். இது பரிசுத்த ஆவியானவர் சொல்லும் உண்மையாகும்.

ஆனால் தேவனுடைய சிங்காசனத்திற்கு விரோதமாக போராடும் அமலேக்கியரின் சந்ததியில் வந்த அந்த வாலிபன் உண்மையை சொல்வானா என்ன. சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு நாம் அமலேக்கிய வாலிபன் சொல்வது தான் உண்மை என்று நமது பிரசங்கத்தில் பிரசங்கித்து வருகிறோம்.

அப்படியானால் ஆவியானவர் சொல்வது பொய்யா ?

அமலேக்கிய வாலிபனின் கட்டுக்கதையே அவனுடைய மரணத்திற்கு காரணமாயிற்று (2சாமு 1:15)

இதே போல தான் நமது பிரசங்கத்தில் அநேக பொய்கள் கலந்து இருப்பதை அநேகர் கண்டுபிடிப்பதில்லை. காரணம் மற்றவர்களுடைய பிரசங்கங்களை நாம் கேட்டு மனதில் பதிந்துள்ளதால் வேதத்தை கவனமாக வாசிப்பதில் தவறிவிடுகிறோம். அது கூடுமான அளவு வேதத்தை கவனித்து பாருங்கள். பொய் சாட்சிகளை தவிர்த்து விடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.



கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை