வீட்டாரே சத்துரு

 ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. (மத்தேயு 10:36)

வேதத்தில் இரண்டு வித சத்துருக்கள் உண்டு.
(1) வீட்டார்கள்.
(2) சத்துரு பிசாசு;
(மத்தேயு 13:39)
நாம் பார்க்கப்போவது ஒருவருக்கு வீட்டாரே சத்துரு.
வேதத்தில் நல்ல சகோதரன், சகோதரிகளை குறித்து வாசித்திருக்கிறோம்.
உதாரணமாக ஆரோன்,மோசே, மரியம், புதிய ஏற்பாட்டில். மார்த்தாள், மரியாள்,லாசர் இப்படிப்பட்ட சகோதர சகோதரிகளை பார்க்கும் பொழுது எவ்வளவு அன்பு, பாசம், ஒவ்வொருவருக்கும் இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். (யாத் 2ஆம் அதிகாரம்.யோவான் 11 ஆம் அதிகாரம்) முழுவதும் வாசித்தவர்கள் புரிந்து கொள்ளலாம்.
லாசருக்கு கிடைத்த இரண்டு அக்கா போல ஒரு தம்பிக்கு கிடைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்.!

எனக்கும் ஒரு அக்காவும், ஒரு தங்கையும், ஒரு தம்பியும் உண்டு.
இவர்களுடைய சண்டையில் தம்பி தற்கொலை செய்து கொண்டான். கடைசியில் பிறந்தவன் முதலாவதாக மரித்தான். அவனுடைய மரணம் என் வாழ்க்கையில் பெரிய இழப்பு இன்றுவரை.
அடுத்து இருப்பது அக்கா,தங்கை,
அவ்வளவுதான். நான் ஊழியத்தில் இருக்கிறேன். என் அக்கா தங்கை வீட்டில் நடக்கும் அநேக விஷேசங்களில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அக்கா மகள் திருமண காரியத்தில் கலந்து கொண்டேன். வேறு எந்த நிகழ்விலும் தான் கலந்து கொள்ளவில்லை.
திடீரென்று என்ன நடந்ததென்று தெரியவில்லை, இவர்கள் எனக்கு விரோதமாகவும், என் மகளுக்கு விரோதமாகவும் எழும்பி விட்டனர்.
என் தங்கை, என் மகளுடைய வாழ்க்கையை கெடுக்கக்கூடிய அத்தனை செயல்களையும் செய்தால், மற்றவர்கள் நம்பத்தக்கதான ஈனமான செயல்களை பரப்பினால், சிலரை வீட்டுக்கு ஏவி விட்டால், நான் காவல்துறையில் அவர்கள் மீது வழக்கு செய்யக்கூடிய அளவுக்கு பிரச்சனை வரச் செய்தவள். அவள் திட்டமிட்டு தயாரித்த போலியான செய்திகளை என் தாய் தகப்பன் மற்றும் சகோதரி மற்றும் சொந்த பந்தங்கள் எல்லாரையும் நம்ப பண்ணி என்னை உயிரோடு கொண்றவள். என் மகளை அவமானப்படுத்தியவள். அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பதை மறந்து துணிகரமாக அந்த ஈனச் செயலை அவள் செய்தால்.
நல்ல வேலை காவல்துறையில் அகப்பட்ட அந்தக் கூட்டத்தினர் எல்லாமே உங்கள் தங்கை சொல்லி தான் இதையெல்லாம் செய்தோம் என்று ஒத்துக் கொண்டார்கள். அது மாத்திரமல்ல மொபைல் மூலமாக ஐபி அட்ரஸ் கண்டுபிடிக்கப்பட்டு அது என் தங்கையின் மொபைல் என்பதும் தெரிய வந்தது.
என்னிடம் பாசம் காட்டுவது போல் ஒரு வேஷத்தை போட்டால் பாருங்கள்.
இவள் எவ்வளவு பெரிய சத்துரு.
இதை வாசிக்கின்ற அருமையான தேவப்பிள்ளையே அல்லது தேவனை அறியாத பிள்ளையாக கூட இருக்கலாம்.
சொந்த பந்தங்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். இதைத்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு சொல்லித் தருகிறார்.
சில நேரங்களில் நமக்கு அது புரியாது. ஆனால் சூழ்நிலைகளை அனுபவிக்கும் போது இந்த வசனத்தினுடைய விளக்கம் புரிகிறது.
தாயும் தகப்பனும் கைவிடுவார்கள் என்று பைபிள் சொல்லுகிறது. இது எவ்வளவு பெரிய உண்மை என்னுடைய மகள் திருமண த்தில் என் தாய் தகப்பன் கலந்து கொள்ளவில்லை. என் உறவினர்களுக்கு கலந்து கொள்ளவில்லை.
ஏனென்றால் அவர்களுடைய காரியத்தை கர்த்தர் செயல் இழக்க பண்ணினார். அடியானுடைய காரியத்தை கர்த்தர் வாய்க்கப்பன்னினார்.
பிசாசை விட மோசமானவர்கள் நமது வீட்டார்களே
ஆகையால் ஜாக்கிரதையாக இருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை