கண்காணியானவன்
(414) உயர்ந்த முத்துக்கள்.
கண்காணியானவன், ஐயர், மேய்ப்பர்கள்
"கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்".
(1 தீமோத்தேயு 3:1-2)
ஒரு மனிதன் "கண்காணி"யாக விரும்பினால் (கிரே.எபிஸ்கோபோஸ், அதாவது ஐயர் சம்பந்தமான மேற்பார்வை; ஒரு ஐயர்).
அவன் ஒரு முக்கியமான வேலையை விரும்புகிறான். (1தீமோ 3:1). ஆனாலும் அப்படிப்பட்ட மக்களின் அந்த விருப்பம் தேவனுடைய வார்த்தையாலும் திருச்சபையாலும் உறுதி செய்யப்பட வேண்டும்,(1தீமோ3:1-10;4:12). ஏனெனில் திருச்சபைக்கென்று சில திட்டவட்டமான தகுதிகளை நிறுவியுள்ளார். ஐயருடைய வேலையைச் செய்யும்படி தேவனுடைய அழைப்பு உள்ளது என்று அறிக்கை பண்ணுகிறவர்கள், சபை அங்கத்தினரால் வேதாகமத்தில் (1தீமோ) 3:1-13;4:12;தீத்1:5-9) கூறும் தகுதிகளுக்கு ஏற்றவாறு உள்ளதா என்று சோதிக்கப்பட வேண்டும்.
திருச்சபையானது ஒரு மனிதனுடைய விருப்பம், கல்வி, பாரம் அல்லது அவர் கூறும் தரிசனம் அல்லது அழைப்பை அடிப்படையாக வைத்து ஊழியத்தின் வேலைக்கு சம்மதம் அளிக்கக்கூடாது. தற்காலத்து சபைக்கு பரிசுத்த ஆவியானால் தேவன் குறித்து வைத்த தகுதிகளை குறைக்க எந்த உரிமையும் கிடையாது. அவைகளை நிபந்தனைகளாகக் கருதி தேவனுடைய நாமம், அவருடைய இராஜ்ஜியம், கண்காணியின் அந்த உயர் தகுதியின் நம்பத் தகுந்த நிலை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அதை பின்பற்ற வேண்டும்.
1) கண்காணியானவருக்காகப் பட்டியல் செய்யப்பட்ட உயர் தகுதிகள் முக்கியமாக ஒழுக்கம் சம்பந்தமானது, ஆவிக்குரிய பிரகாரமுமானவையுமாகும். திருச்சபையில் தலைமைத்துவத்தை நாடுபவரின் நிரூபிக்கப்பட்ட நன்னடத்தையானது அவர்களுடைய ஆளுமை, போதிக்க கூடிய வரங்கள், நிர்வாக திறமைகள் கல்வி சிறப்புகளை விட மிகவும் முக்கியமானவை. தகுந்த முழு கவனமும், தெய்வ பக்தியோடு கூடிய ஞானம், சரியான தேர்ந்தெடுப்பவர்கள், சொந்த வாழ்க்கை பரிசுத்தம் ஆகியவற்றை தொடர்ந்து செயல்படுத்துதல் அவருடைய நல்ல நடத்தையில் செலுத்தப்படுகிறது. கண்காணிப்பின் ஊழியத்தை விரும்புகிறவரது ஆவிக்குரிய வரலாறு (சரித்திரம்) "பரிசோதிக்கப்பட வேண்டும்".(1தீமோ 3:10) இவ்வாறாக பரிசுத்த ஆவியானவர், கண்காணியாக விரும்புகின்றார். ஒருவர், இயேசு கிறிஸ்துவையும், அவருடைய நீதியின் கொள்கைகளையும் தொடர்ந்து சார்ந்திருக்கும் ஒரு விசுவாசியாக இருக்க வேண்டுமென்பதற்காகவும் உயர்ந்தவர் தகுதியை முன் வைத்திருக்கிறார். வேறு விதமாகச் சொன்னால் அவருடைய நடத்தை (மத் 25:21)ல் உள்ள கிறிஸ்துவின் போதனையின்படி "கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய்", அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்" என்ற நிலைமைக்கு வழி நடத்தும் என்பதை பிரதிபலிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
2) எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்துவ தலைவர்கள்,"விசுவாசிகளுக்கு மாதிரியாக இருக்க வேண்டும்"(1தீமோ 4:12;1பேது 5:3), அதாவது அவர்களுடைய கிறிஸ்துவர் வாழ்க்கையும், நிலைத்து நிற்கும் விசுவாசமும் மற்றவர்களால் பார்த்து பின்பற்ற தகுதியானதொன்றாக சபை மக்கள் முன் வைக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும்.
கண்காணியானவர்கள் தேவ பக்தி, உண்மை விசுவாசம், சோதனையின் மத்தியில் தூய்மையோடிருத்தல், கிறிஸ்துவிடம் சுவிசேஷத்தின் மேலும் உண்மை பற்றும் அன்பும் கொண்டிருத்தல் ஆகியவற்றில் விட முயற்சியோடுள்ளமைக்கு மிக உயர்ந்த முன் மாதிரியாக இருக்க வேண்டும். (1தீமோ 4:12,15)
தேவனுடைய மக்கள் கிருஸ்துவ ஒழுக்கவியலையும் உண்மையான தேவபக்தியையும் தேவனுடைய வார்த்தையிலிருந்து மாத்திரம் அல்ல, அப்போஸ்தல தகுதியோடு வாழ்க்கை நடத்தும் போதகர்களின் முன்மாதிரியிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவ தலைமைத்துவத்தைக் குறித்த தேவனுடைய திட்டத்தில், விசுவாசத்துக்கு உதாரணமாய் விளங்கும் போதகர்களின் தரமான வாழ்க்கை மிகவும் முக்கியமானது. திருச்சபை மக்கள் பின்பற்றக்கூடிய, கறையற்ற வாழ்க்கை முறையை தெய்வ பக்தியுள்ள தலைமைத்துவக் கொள்கை, புறம்பே தள்ளி வைப்பது வேதம் வாக்கியங்களில் தெளிவான போதனையை அசட்டை செய்வதாகும். கிறிஸ்துவின் மேல் போதகர்களுக்கிருக்கும் உண்மை விசுவாசம் பிறருக்கு முன்மாதிரியான வாழ்க்கைத் திட்டமாக இருக்கும்படியாக போதகர்கள் இருக்க வேண்டும். (1கொரி 11:1;பிலி 3:17; 1தெச 1:6;2தெச 3:7,9;2தீமோ1:13)
3) தன் வீடு, திருமண வாழ்க்கை, குடும்ப உறவுகளில் விசுவாசிகளின் தலைமைத்துவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பரிசுத்த ஆவியானவர் மதிக்கிறார். (1தீமோ 3:2,4-5;லீக் 1:6). கண்காணியானவர் தேவனுடைய குடும்பத்துக்கு விசேஷமாக அவருடைய மனைவி, பிள்ளைகளிடம் உண்மை பற்று வைத்திருப்பதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் கண்காணியானவர் தோல்வியுற்றவராக இருந்தால் "தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பார் ?" (1தீமோ 3:5). அவர் "ஒரே மனைவியுடைய புருஷராக" இருக்க வேண்டும் (1தீமோ 3:2). இந்த சொற்றொடர் கண் காணியாக ஊழியம் செய்ய விரும்புகிறவர், அவருடைய மனைவிக்கு ஒழுக்க நெறிப்படி உண்மை விசுவாசத்தோடிருக்க வேண்டும் குறிக்கிறது. கிரேக்க மொழியில் உள்ள மொழிபெயர்ப்படி (மியாஸ் குனெய்காஸ், இனவிருத்தி செய்யும் பண்பு) அதன் பொருள் "ஒரே பெண்ணை மனைவியாக கொண்ட மனிதர்"என்பதாகும், அதாவது அவருடைய மனைவியிடம் உண்மையான விசுவாசமுள்ள மனிதர்.
கண்காணியாக விரும்புகிறவர் எல்லா முக்கியத்துவமும் அடங்கிய இந்த பகுதியில் உண்மையுள்ளவராக தம்மை நிரூபித்திருக்க வேண்டும் என்பது இதற்கு அர்த்தமாகும். ஒருவர் தம் மனைவியிடமும் குடும்பத்தினரிடமும் தொடர்ச்சியாக ஒழுக்க நெறியில் உண்மையுடனிருப்பது, தலைவராகவும், சபைக்கு முன்மாதிரியாகவும் இருக்க விரும்பும் யாவருக்கும் இருக்க வேண்டிய முக்கியமான தகுதியாகும்.
4) முடிவாக, சபைக்குள்ளிருக்கும் நிர்வாகிகள் பயங்கரமான பாவத்தினால் அல்லது ஒழுக்க நெறியை மீறி நடந்தால் குற்றவாளிகளாகும் போது ஐயர் பதவியிலிருந்து பிற கண்காணிப்பு பணிகளிலிருந்து விலக்கப்பட்டு, அப்பதவிகளுக்குத் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்
(1தீமோ 3:8-12). அப்படிப்பட்ட ஆயர் அல்லது மக்கள் தேவனுடைய கிருபையால் அபரிமிதமாக மன்னிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் தோல்வி அடையாத ஊக்கமுள்ள விசுவாசம், அன்பு , தூய்மை, ஆரோக்கியமான உபதேசம் ஆகியவற்றில் முன்மாதிரிகளாக இருக்கும் தகுதியை இழந்து விடுகிறார்கள். (1தீமோ 4:11-16; தீத் 1:9) ஏற்கனவே பழைய ஏற்பாட்டில் தேவனுடைய மக்கள் மத்தியில் உள்ள தலைவர்கள், உயர்ந்த நல்லொழுக்க ஆவிக்குரிய தகுதிகளை எப்போதும் காத்துக் கொள்கிறவர்களாக எதிர்பார்க்கப்பட்டார்கள் என்று அவர்கள் அவ்வாறு இல்லாததினால் மற்றவர்கள் அவர்களுடைய பதவியில் வைக்கப்பட்டார்கள் என்றும் தேவன் தெளிவாக போதித்திருக்கிறார்
(ஆதி 49:4; லேவிய 10:2;21:7,17;எண் 20:12; 1சாமு 2:23எரே 23:14;29:23) ஆகியவற்றை வாசிக்கவும்.
5) மேலும் 1தீமோ 3:2,7 ல் கண்காணியானவர் தேவனிடமும், அவருடைய வார்த்தையிடமும் உள்ள பற்றுதலையும், தம் மனைவியிடமும் குடும்பத்தினிடமும் உள்ள உண்மை விசுவாசத்தையும் விட்டுவிட்டால் கண்காணியாயிருக்கும் அவர் பதவியில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்ற கொள்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரைக் "குற்றஞ் சாட்டப்படாதவர்" என்று கூற முடியாது. தேவனுடைய மக்கள் மத்தியில் விபச்சாரம் செய்பவரைப் பற்றி "அவன் நிந்தை ஒழியாது" என்று தேவனுடைய வசனம் கூறுகிறது. (நீதி 6:33,32) வாசிக்கவும்.
6) தேவன் அல்லது திருச்சபை மன்னிக்க மாட்டார்கள் என்று இதனால் அர்த்தங்கொள்ளக் கூடாது. தேவனுக்கேற்ற துக்கம், மனஸ்தாபம் அந்த பாவத்தைக் குறித்து உண்டானால் 1தீமோ 3:1-13 ல் பட்டியலிடப்பட்ட எந்த பாவத்தையும் தேவன் நிச்சயமாக மன்னிப்பார். அப்படிப்பட்ட ஒருவர் இரக்கத்தோடு மன்னிக்கப்பட்டு தேவனிடமும், திருச்சபையினிடமும் உள்ள சரியான உறவுக்கு மறுபடியும் கொண்டு வரப்படலாம் என்பது தெளிவாகியுள்ளது. ஆனாலும் பரிசுத்த ஆவியானவர் கூறுவது என்னவென்றால் சில பாகங்களின் மூலம் வரக்கூடிய அவமானமும், வெட்கக்கேடும் (அதாவது நிந்தனை) அது மன்னிக்கப்பட்ட பிறகும் கூட அவர்களின் வாழ்க்கை முழுவதும் அந்த நபரிடம் தங்கியிருக்கும் அளவு பயங்கரமானதாக இருக்கும். (2சாமு 12:9-14).
7) ஆனால் தாவீது ராஜாவின் காரியம் என்ன? விபசாரம் , கொலை
(2 சாமு 11:1-21; 12:9-15) குற்றங்களுக்குப் பின்னும் இஸ்ரவேலரின் ராஜாவாக தொடர்ந்து இருந்த வேதாகமப் பகுதியை நியாயப்படுத்தி கண்காணியானவர் மேற்கூறப்பட்ட தகுதிகளுக்கு மீறி நடந்தாலும் அந்த பதவியில் தொடர்ந்து இருக்கலாம் என்று சில நேரங்களில் என்னப்படுகிறது. ஆனாலும் இவ்வாறு ஒப்பிடுவது பல வழிகளில் தவறானதாகும்.
பழைய உடன்படிக்கையின் கீழ் உள்ள இஸ்ரவேலரின் ராஜாவுடைய பதவியும், புதிய உடன்படிக்கையின் கீழுள்ள இயேசு கிறிஸ்துவின் சபையில் ஆவி கூறிய கண்காணியாக இருப்பவரின் பதவியும் முற்றிலும் வித்தியாசமான இரண்டு காரியங்களாகும். தேவன் தாவீதை மாத்திரம் அல்ல, மிகவும் கெட்டவர்களாகிய அநேக ராஜாக்கள் இஸ்ரவேலரின் ராஜாக்களாக இருக்கும் படி அனுமதித்தார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் விலை கொடுத்து வாங்கப்பட்ட புதிய ஏற்பாட்டு சபையிலுள்ள தலைமைத்துவத்துக்கு மிக அதிகமாக ஆவிக்குரிய தகுதிகள் தேவை.
புதிய ஏற்பாட்டிலுள்ள தேவனுடைய வழிபாடுகள், தகுதிகளின்படி தாவீது ஒரு புதிய ஏற்பாட்டு சபையில் கண்காணி பதவிக்கு தகுதியுள்ளவராக இருந்திருக்க முடியாது. அவருக்குப் பல மனைவிகள் இருந்தனர். திருமண வாழ்க்கையில் உண்மையான விசுவாசத்தோடில்லாத குற்றமுடையவர். தன் சொந்த குடும்பத்தை நன்றாய் நடத்தாமல் மோசமான நிலையில் தவறினார். கொலை செய்திருந்தார். இரத்தம் சிந்திய கொடுமை செய்திருந்தார். அவருடைய பாவத்தால் தாவீது தன் வாழ்க்கை முழுவதும் தேவனுடைய தண்டனையோடிருந்தார் என்பதை கவனிக்க வேண்டும்.(2சாமு 12:9-12).
8) தற்கால சபைகள், ஆதி அப்போஸ்தலர்களாலுண்டான வெளிப்பாடுகளின் மூலம் தேவனால் ஒரு கண்காணிக்கப்படும் நீதியான தகுதிகளிலிருந்து விலகக் கூடாது. அதற்கு பதிலாக திருச்சபையானது அதன் தலைவர்களிடமிருந்து மிக உயர்ந்த தகுதியுள்ள பரிசுத்தம், தேவனிடமும், அவருடைய வார்த்தையிடமும் உண்மையானது விசுவாசத்தோடு தொடர்ந்து இருப்பது, தேவபக்தியான வாழ்க்கையை எதிர்பார்க்க வேண்டும். 'வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாய்' அவர்கள் இருக்கும் போது அவர் ஊக்கமாக ஜெபித்து, அவர்களை உற்சாகப்படுத்தி ஆதரிக்க வேண்டும். (1தீமோ 4:12)
கண்காணி சோதிக்கப்பட வேண்டும்
கண்காணி ஒரே மனைவியுடைய புருஷனாக இருக்க வேண்டும்.
கண்காணி தேவனிடத்திலும் தேவனுடைய வார்த்தையிலும் உண்மை உள்ளவனாக இருக்க வேண்டும்.
கண்காணியின் விசுவாசம் விசுவாசிகள் பின்பற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.
கண்காணியின் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் உடனே பழைய உடன்படிக்கையின் வசனத்தோடு நியாயப்படுத்தக் கூடாது. நீக்கப்பட வேண்டும்.
சில ஊழியர்கள் சொல்வது போல் அவர்கள் கடைசி வேலையிலும் மனந்திரும்பி விடுவார்கள் நாம் பாவியாகி விடுவோம் என்கிற உபதேசம் சாத்தானுடையது.(எபி 10:26,27,29)
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தொடர்ந்து இந்த உயர்ந்த முத்துக்களின் பதிவுகளை வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
Comments